Q104:1
கேள்வி (1910)-1- எங்களுடைய சபையில் வலிமைவாய்ந்தவர்கள் ஏற்றகால சத்தியத்திற்கு எதிரானவர்களாகக் காணப்படுகின்றனர் மற்றும் மிகவும் உண்மையாய்க் காணப்படுபவர்களோ போதகர்களாக இல்லை மற்றும் சத்தியத்திலும் இளையவர்களாய் இருக்கின்றனர். எதிர்ப்பவர்கள் பெரும்பாலும் மூப்பர்களாய் இருப்பதினால், அர்களே கூட்டங்களைப் பொறுப்பேற்று நடத்துகின்றார்கள். உண்மையுள்ளவர்களும், பெரும்பான்மையினராய்க் காணப்படும் வலுவற்றவர்களும் / weak majority என்ன செய்திட வேண்டும்?
பதில் – யாரிடமிருந்து இக்கேள்வி வந்துள்ளது என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை என்பதினால், மிகுந்த சுதந்திரத்துடன் இக்கேள்விக்கு என்னால் பதிலளிக்கக்கூடும். கர்த்தர் தம்முடைய ஜனங்கள் தொடர்புடைய விஷயத்தில் ஏற்படுத்தியுள்ளவைகள் யாவற்றிலும் சில கொள்கைகள் அடங்கியிருக்கின்றன என்றும், சபையார் மத்தியில் ஆண்டவருக்குப் பிரதிநிதியாகக் காணப்படுவதற்கு மிகுந்த தகுதியுடையவர்களாய் இருப்பவர்களைத் தங்கள் மத்தியிலிருந்து மூப்பர்களாக அல்லது மூப்பர் என்கிற சகோதரர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நான் காண்கின்றேன். நீண்ட காலமாய்ச் சத்தியத்தில் இருப்பவர்களில், இயல்பாகத் திறமைமிக்கவர்களாக இருப்பவர்களில் எவரேனும், கேள்வி கேட்டுள்ள சகோதரன் எண்ணுவதுபோன்று ஆகியுள்ளாரெனில், இவர்கள் அப்போஸ்தலனின் கண்ணோட்டத்தின்படி இறுமாப்புடையவர்களாகக் கருதப்பட வேண்டும் மற்றும் அடுத்தமுறை இவர்களைத் தேர்ந்தெடுத்தல் அல்லது தேர்ந்தெடுக்காமல் இருத்தல் தொடர்புடைய விஷயத்தில் கர்த்தருடைய சித்தம் என்னவாக இருக்கின்றது என்று தாங்கள் நம்புகிறவற்றின்படி நடந்துகொள்வது சபையாருக்குத் தகுதியானதாய் இருக்கும். இம்மாதிரியான நிலைமையில் காணப்படும் எந்தச் சகோதரரையும் முதன்மையான ஸ்தானங்கள் எதற்கும் தேர்ந்தெடுப்பது என்பது அச்சகோதரருக்குத் தீங்கு விளைவிக்கிறதாய் இருக்கும் என்பது என்னுடைய கருத்தாய் இருக்கிறது. இத்தகையவர்கள் சிறிதுகாலம் எவ்விதமான போதிக்கும் ஊழியங்களினின்றும் விலகிக் காணப்படும்படிக்கு அனுமதிக்கப்படுவார்களானால், அதுவும் கூட்டங்களின் ஆசீர்வாதமானது தடைபட்டுப்போவது போன்று வெளித்தோற்றத்தில் தோற்றமளித்தாலும் பரவாயில்லை, இப்படி விலகிக் காணப்படும்படிக்கு அனுமதிக்கப்படுவார்களானால், இது அவர்கள் நன்மைக்கு ஏதுவாயும், சிறந்த விதமான உதவியாயும் இருக்கும். அநேகமாய்க் கூட்டங்களின் ஆசீர்வாதமானது தடைப்படாது. ஏனெனில் இந்தக் கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ளதான தவறான மனநிலையில் இருப்பவர் எவரும், ஒவ்வொரு நாளும் மற்றும் ஒவ்வொரு கூட்டத்திலும் நன்மை செய்வதற்குப் பதிலாகத் தீமையையே அதிகமாய் நிச்சயமாகச் செய்திடுவார்கள் மற்றும் தாங்களும் நன்மை அடைகிறதைப்பார்க்கிலும் அதிகம் தீமையையே அடைகிறவர்களாகவும் இருப்பார்கள். இக்கேள்வியினை எழுதியுள்ளதான சகோதரனும், காரியத்தினைக்குறித்த சரியான பார்வையினைக் கொண்டிருக்கவில்லை என்பதாகத் தெரிகின்றது. ஒருவேளை இவர் சில தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம்; நான் கணிப்பதற்கு அறியாதவனாய் இருக்கிறேன்; இவ்விவகாரம் குறித்து ஏதும் அறியேன்; அந்த மூப்பர்களைக் குறித்தும் அறியேன்; கேள்வியினை எழுதினவர் குறித்தும் அறியேன். மேலும் ஊழியம் புரிகின்றதான மூப்பர்களைச் சாந்தத்துடனும், பொறுமையுடனும், பரந்த மனப்பான்மையுடனும் பார்ப்பது இவரது கடமையாய் இருக்கின்றது; ஏனெனில் இப்படிச்செய்வது என்பது இவராலும் மற்றும் இது தொடர்புடைய விஷயத்தில் சபையார் யாவராலும் செய்ய இயலும் காரியமாய் இருக்கின்றது. மேலும் சரியாக இல்லை என்று இச்சகோதரனால் கருதப்படுகின்றதான மூப்பர்கள் ஒவ்வொருவரையும், ஒவ்வொருவராக இவர் அழைப்பித்து, தான் அஞ்சுவதைக்குறித்து அன்பாய்த் தெரிவிப்பதும் மற்றும் தான் நியாயந்தீர்க்க விரும்பவில்லை, மாறாக தான் சில காரியங்களைக் காண்பதாகவும், அவைகளை அவர்கள் கருத்தில் எடுத்துக்கொள்ள – அதாவது எதிராளியானவன் சில விதங்களில் அவர்களைப் பயன்படுத்துகின்றானா என்று சிந்தித்துப்பார்க்க, தான் யோசனை தெரிவிப்பதாகக் கூறுவதும் மற்றும் அன்பானதொரு சகோதர அல்லது சகோதரி உரையாடலைக் கொண்டிருப்பதும் ஞானமான ஒன்றாகவே அநேகமாக இருக்கும். நல்ல திட்டம் என்னவெனில்… நீங்கள் காரியத்தினை முன்வைத்த விதத்தில் மிகவும் அன்புடனும், பரிவுடனும் காணப்பட்டிருந்தீர்களானால் மற்றும் ஒருவேளை அவர்கள் சினமடைவார்களானால் – இது ஏதோ தவறு இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும். அவர்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்; அவர்கள்: “ஏன், சகோதரனே, நீங்கள் என்னைத் தவறாய்ப் புரிந்துகொண்டுள்ளீர்கள்; நான் அப்படியான விதத்தில் பேசவேயில்லை நீங்கள் அக்காரியத்தினை மிகவும் குற்றம் காணும் விதத்தில் பார்த்திருக்கின்றீர்கள்; நான் இன்னென்ன விதத்தில்தான் பேசினேன் என்று சொல்லலாம். எப்படியாக இருப்பினும், இப்படியான தவறான நிலைமையில் காணப்படுவதாகக் கருதப்படுபவருக்கு உதவும் வண்ணமாகவே பிரயாசம் காணப்பட வேண்டும். இவ்வகையான எந்த ஒரு பிரயாசமும் எடுக்கப்படுவதற்கு முன்னதாக, ஒரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ சீர்ப்படுத்தும் வண்ணமாகவோ அல்லது யாருக்கேனும் யோசனை கூறுவதற்கோ பிரயாசம் எதையேனும் ஏறெடுக்கும் ஒவ்வொருவருக்கும் நான் அறிவுறுத்துவது என்னவெனில்: அவர்கள் முதலாவதாக இக்காரியத்தினை ஜெபத்தில் வைத்து, தங்கள் சொந்த இருதயமும், மனதும் சரியான நிலைமையில் இருக்கின்றதா என்றும், தங்களிடத்தில் எந்தக் கசப்பும் இல்லை என்றும், தாங்கள் முடிந்தமட்டும் தயவாகவே காரியங்களைக் கண்ணோக்குகின்றார்கள் என்றும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். முதலாவதாக நாம் நம்மைத் திருத்திக்கொள்வோமாக – கர்த்தர் சொன்னதுபோலவே ஒருவேளை இவ்விவகாரம் உன் கண்களினின்று உத்திரத்தை எடுத்துப்போடுவதற்குரிய விவகாரமாக இருக்குமானால், முதலாவது உன் சொந்த கண்களினின்று உத்திரத்தை எடுத்துப்போடு மற்றும் பின்னர் நீ தெளிவான பார்வையை இப்படி அடையப்பெற்று, கண்களில் உத்திரத்தைப் பெற்றிருக்கும் வேறொரு சகோதரனுக்கு நீ ஆசீர்வாதமாயிருக்க முடியும்.