Q253:1
கேள்வி (1913)-1- வாரநாட்களில் பிற்பகல் நடக்கும் கூட்டத்திலோ, அனைத்து மாலை கூட்டங்களிலோ மற்றும் பயண ஊழியர் சபைக்கு வரும்போதுகூடக் கலந்துகொள்ளாத மூப்பரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் – ஏதோ சில வேலையின் நிமித்தமாக மதிய கூட்டத்திற்கு அவரால் வரமுடியாமல் போயிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். மூப்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தச் சகோதரன், அவர் பேசக்கூடிய கூட்டத்திற்கு மாத்திரம் வருவாரானால், அவர் அனைத்துக் கூட்டத்திற்கும் வரும்வரை, அவர் தேர்ந்தெடுக்கப்படாமல் விடப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். மற்றக் கூட்டத்திற்கு வராமல், தான் பேசக்கூடிய கூட்டத்திற்கு மாத்திரம் வருவது என்பது – அவர் மூப்பருக்குத் தகுதியானவர் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும்; இன்னுமாக மற்றவர்களால் போதிக்கப்படுவதற்கும், மற்றவர்களின் வார்த்தைகளைக் கேட்பதற்கும் விருப்பம் தெரிவிக்காமல், தான் மாத்திரமே பேச வேண்டும் என்றும், சபையிலுள்ள யாவைரையும் காட்டிலும் தான் மேன்மையாக இருப்பவர் என்றும் அவர் எண்ணுவதைச் சுட்டிக்காட்டுவதாக நான் நினைக்கிறேன். “நாம் அனைவரும் சகோதரர்கள். ஒருவர் “நான் சகோதரர்களில் ஒருவரல்ல என்றும், “தனக்குப் பேசும் வாய்ப்பு இருக்கும்போது மாத்திரமே சபைக்கு வரவேண்டும் என்றும் நினைக்கின்ற ஒரு சகோதரனுக்காக நான் அஞ்சுகிறேன். அவருடைய நன்மைக்காக அவரைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது என்று நான் கருதுகிறேன். அந்தச் சகோதரனை இராஜ்யத்திற்குத் தகுதியற்றவராக மாற்றக்கூடிய வேலையை நாம் செய்ய வேண்டாம். நாம் அந்தச் சகோதரனையும், அவருடைய நலனையும், சபை மற்றும் அதன் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டியவர்களாய் இருக்கிறோம்.