Q253:2
கேள்வி (1914)-2- சபையின் காரியங்களினிமித்தமாக வருத்தத்திலும், குழப்பமடைந்த நிலையிலும் காணப்பட்ட ஒரு சகோதரி, தேர்ந்தெடுத்தல் கூட்டத்தில் கலந்துகொண்டும் வாக்களிப்பதில் பங்குகொள்ளவில்லை. அச்சகோதரி வாக்குகள் ஒருவேளை செலுத்தியிருந்தால், யாருக்குச் செலுத்தியிருப்பார்களோ, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டும் விட்டார்கள். இந்தச் சகோதரி வாக்குச் செலுத்தாதது தவறா? இது பாவமா?
பதில் – அச்சகோதரி தனது சிறந்த பகுத்தறிதலின்படி இதைச் செய்திருக்கிறாள் என்று நான் அனுமானிக்கின்றேன். ஆகையால் இது பாவமல்ல என்று நாம் அறிவோம். உங்கள் மனசாட்சி உங்களை வழித்தவற செய்யக்கூடியதாய் ஒருவேளை இருந்தாலும்கூட, உங்களுடைய மனசாட்சியின்படி நடப்பதினால் ஒருபோதும் நீங்கள் குற்றவாளிகளல்ல. எத்தகைய பிரச்சனைகள் வந்தாலும், உங்கள் மனசாட்சியின்படி நீங்கள் செய்தால், நீங்கள் சரியானவைகளைச் செய்பவர்களாகவே இருப்பீர்கள். ஆகவே, தான் அறிந்துகொண்டதற்கு ஏற்ப, தன்னால் முடிந்ததைச் செய்யும் ஒருவனை அல்லது ஒருத்தியைத் தேவன் பாவஞ்செய்ததற்கான பொறுப்பாளியாகக் கருதுவதில்லை. இதை இப்படியாகக் கருதி விட்டுவிடுங்கள்.