Q524:2
கேள்வி. (1911)-2 – பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய இரத்தமானது வருடந்தோறும் தொடர்ந்து தெளிக்கப்படுகின்றதா (அ) எகிப்தில் மாத்திரம் ஒரேதரம் தெளிக்கப்பட்டதா?
பதில். எனக்குத் தெரியாது; அது ஓர் அடையாளமாகும். ஆரம்பத்தில் அப்படியாகத்தான் கட்டளையிடப்பட்டது மற்றும் அப்படியாகவே கைக்கொள்ளவும்பட்டது. யூதன் யாராகிலும் இங்குக் காணப்பட்டால், அவர் வீட்டுவாசலின் நிலைக்கால்களில் இரத்தம் தெளிக்கும் வழக்கத்தினை யூதர்கள் இப்பொழுதும் கொண்டிருக்கின்றார்களா என்பதை நமக்குச் சொல்வார். அவர்கள் அப்படியாய்ச் செய்வதில்லை என்று நான் எண்ணுகின்றேன். என்னால் நிச்சயமாய்க் கூற இயலாது.