Q200:1
கேள்வி (1912)-1- ஏதேனும் சூழ்நிலைகளுக்காக, நீங்கள் பெண் உதவிக்காரர்களின் தேர்ந்தெடுத்தல் மற்றும் நியமனத்தைப் பரிந்துரைக்கின்றீர்களா? ஆம் என்றால், எச்சூழ்நிலையின்போது?
பதில் – தற்போது புரூக்கிளின் கூடாரத்தில் நாங்கள் பெண் உதவிக்காரர்கள் யாரையும் பெற்றிருக்கவில்லை ஆனால் முன்னே பெற்றிருந்தோம் மற்றும் அவர்களைப் பெற்றிருந்ததால் சில நன்மையும் இருந்தது என்று எண்ணுகின்றோம். செய்வதற்கு அவர்களுக்கு ஏதாகிலும் இருந்தால் அல்லது அந்த வேலைக்கு நபர்கள் பொருத்தமானவர்களாய் இருந்தால் தவிர மற்றபடி வெறுமனே ஊழியர்களைப் பெற்றிருப்பதில் எந்தப் பயனுமில்லை. டீக்கனஸ் / Deaconess எனும் வார்த்தையானது பெண் ஊழியர் எனும் அர்த்தத்தினைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. ஒரு சபையிலுள்ள சகோதரிகள் மத்தியில் சகோதரி ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, அவர்களிடத்தில் போய், அவர்களுக்கு உதவிடுவதற்கும், அவர்களைப் பராமரித்துப் பார்த்துக்கொள்வதற்கும் ஒருவர் அவசியமாகுவார். இல்லையேல் துன்பத்தில் இருக்கும் சகோதரி ஒருவர் போய்ச் சந்திக்கப்படுவது அவசியமாயிருக்கும் மற்றும் இதைச் செய்திடுவதற்குச் சகோதரர்களுக்கு நேரம் கிடைக்காமல் இருக்கலாம். இம்மாதிரியான ஊழியங்களைச் சகோதரிகள் பெண் உதவிக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டோ அல்லது தேர்ந்தெடுக்கப்படாமலோ செய்திடலாம். பெண் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது கர்த்தருடைய வசனத்திற்கு முரணானதல்ல. ஒரு சபையார் தங்களுக்கு இத்தகைய ஊழியர்கள் அவசியம் என்று கண்டுகொள்வார்களானால், அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முழு அதிகாரமும் வேதவாக்கியங்களில் காணப்படுகின்றது; எனினும் மிகவும் கவனமாய் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் – அதாவது அவர்கள் செய்யும்படிக்கு அழைக்கப்படும் எந்த வேலைக்கும் பொருத்தமானவர்களாகவும், சகோதரிகளின் மத்தியில் கர்த்தருடைய ஆவியைப் பெற்றவர்களுக்கான உதாரணமாகக் குறிக்கப்பட்டவர்களாகவும், தங்களுடைய நடை, உடை, பாவனையில் சபையாருடைய நியாயமான, அதேசமயம் பட்சமான ஆதரவையும் பெற்றவர்களாகவும் காணப்படுபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.