Q584:3
கேள்வி (1910)-3- முற்பிதாக்களுக்கு முன்னதாக திரள்கூட்டத்தார் விழித்தெழுப்பப்- படுவார்கள் என்பதற்குக் கொஞ்சம் ஆதாரங்களை எங்களுக்குத் தாருங்கள்.
பதில் – எது ஆதாரமாகக் கருதப்படலாம் எனும் காரியமானது, மனதைச் சார்ந்துள்ளது. என்னுடைய யோசனைப் பின்வருமாறு: திரள்கூட்டத்தார் இந்தத் தற்காலத்தின் சுவிசேஷ யுக வேலையில் சபையுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள்; மேலும் இவர்கள் சபையுடன் சம்பந்தப்பட்டவர்களாக அநேகம் விதங்களில் சித்தரித்துக் காண்பிக்கப்பட்டுள்ளனர்; உதாரணத்திற்குப் பாவநிவாரணநாள் மற்றும் பலிகள் தொடர்புடைய வேலையில் ஆசாரியர்களும், லேவியர்களும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். சிறுமந்தைக்கும், அவளைப் பின்செல்லும் தோழிகளுக்குமான இரண்டாம் உருவகமாகிய மணவாட்டி எனும் உருவகத்தில் தோழிகளும், சபையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. ரெபெக்காள் பற்றின காட்சியையும் நான் உங்களுக்கு நினைப்பூட்டுகின்றேன். ஆபிரகாம் ஈசாக்கிற்கு மணவாட்டியாகும்படிக்கு ரெபெக்காளை அழைத்தனுப்பினபோது, மணவாட்டியின் பணிப்பெண்கள் யாரையும் வரும்படிக்கு அவர் அழைக்கவில்லை, ஆனாலும் சிலர் அவளோடு வந்தார்கள் என்பதை ஒருநாள் நான் கவனித்தேன். இவர்கள் திரள்கூட்டம் வகுப்பார் ஆவார்கள்; இவர்கள் மணவாட்டி வகுப்பாரின் பணிவிடைக்காரர்கள் ஆவார்கள். ஈசாக்கு மணவாட்டியினை ஏற்றுக்கொண்டபோது, மணவாட்டியின் பணிப்பெண்களையும் ஏற்றுக்கொண்டார் எனவும், இவர்கள் மணவாட்டியோடுகூடக் கடந்துசென்று, மணவாட்டியுடன் காணப்பட்டார்கள் எனவும் கருதுவது சரி என்று எனக்குத் தோன்றுகின்றது. இப்படியே கிறிஸ்து, சிறுமந்தை மற்றும் திரள்கூட்டத்தாரின் விஷயத்திலாகும் இவர்கள் அனைவரும் ஒருசேர – கடந்துசெல்வார்கள் என்று நான் புரிந்திருக்கின்றேன். இதுவுமல்லாமல், தன்னைப் பலியாக ஒப்புக்கொடுக்கும் ஒவ்வொருவருக்கும், கிறிஸ்துவினுடைய புண்ணியத்தில் ஒரு குறிப்பிட்ட அளவானது சாற்றப்பட்டுள்ளது என்பதையும் நினைவில்கொள்ளுங்கள். நேற்றைய இரவில் ஞானஸ்நானம் பற்றிப் பார்த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்; அதாவது நீங்கள் உங்களது பலியை முன்வைக்கையில், நமது கர்த்தராம் இயேசு, நமக்குப் பரிந்துபேசுபவரென, நமது பிரதான ஆசாரியரெனத் தோன்றி, பலியைத் தம்முடையதென ஏற்றுக்கொண்டு, அதைத் தெய்வீக அங்கீகரிப்பிற்கு ஏற்றதாக மாற்றத்தக்கதாக, தம்முடைய சொந்த புண்ணியத்தில் கொஞ்சத்தைத் தரிப்பிக்கின்றார் என்று பார்த்தோம். ஆகையால் சிறுமந்தையினர்போலவே, திரள்கூட்டம் வகுப்பாரும் தங்களை அர்ப்பணித்து, கிறிஸ்துவினுடைய புண்ணியத்தின் இந்தச் சாற்றப்படுதலைப் பெற்றுக்கொள்கின்றார்கள் அனைவருமே பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுவதற்கு முன்னதாக இந்தச் சாற்றப்படுதலைப் பெற்றுக்கொள்கின்றார்கள். இப்பொழுதும் என்னுடைய கருத்து என்னவெனில்: புது உடன்படிக்கையினுடைய ஆசீர்வாதங்கள் எதையேனும், உலகத்திலுள்ள யார் ஒருவரும் பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக, மேற்கூறப்பட்டுள்ள இவைகள் அனைத்தும் முடிவிற்கு வரும் – அதாவது இந்தச் சுவிசேஷ யுகத்தின்போதுள்ள விசுவாச வீட்டார் அனைவருக்கும் கிறிஸ்துவினுடைய பலியின் புண்ணியமானது சாற்றப்படும் காரியம் அனைத்தும் முடிவிற்கு வரும்; மேலும் கிறிஸ்துவின் புண்ணியம் அனைத்தும், நீதியின் கரத்தினிடத்திற்குத் திரும்பும்; இன்னுமாக முற்பிதாக்கள் என்பவர்கள், இந்தத் திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும் பூமிக்குரிய வகுப்பாரில் அடங்குவார்கள்; மேலும் சிறுமந்தையும், திரள்கூட்டத்தாரும், தங்கள் மூடுதலுக்காக இயேசுவின் புண்ணியத்தினால் சாற்றப்படும் காரியம் முற்றுப்பெறாதது வரையிலும், முற்பிதாக்கள் திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்களிலுள்ள தங்களது பங்கினை அடைவதில்லை. சிறுமந்தையின் ஒவ்வொரு அங்கத்தினனுக்கும் பரிந்துபேசுபவராகக் காணப்படுபவர், திரள்கூட்டத்தின் ஒவ்வொரு அங்கத்தினனுக்கும்கூடப் பரிந்துபேசுபவர் ஆவார். நாம் பிதாவினிடத்திற்கு வந்தபோது, நம் ஒவ்வொருவருக்காகவும் பொறுப்பாளியாக அவர் ஆனார். அவர் நம்முடைய பலிகளை ஏற்றுக்கொள்ளப்படத் தக்கவைகளாக்கினார்; நம் ஒவ்வொருவருக்கும், ஆம்! நம் ஒவ்வொருவருக்கும் அவர் முடிவுபரியந்தம் பரிந்துபேசுபவராகக் காணப்படுவது அவசியமாகும். அப்போஸ்தலன் கூறுவதுபோன்று: “ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்” (1 யோவான் 2:1). ஆகையால் திரள்கூட்ட வகுப்பார் திரையைக் கடந்துபோவது வரையிலும், இவர்கள் இயேசுவைத் தங்களுக்குப் பரிந்துபேசுபவராகப் பெற்றிருக்க வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி, இயேசுவானவர் தேவனுக்கும் உலகத்துக்கும் இடையில் மத்தியஸ்தராகிடுவதற்கு முன்னதாக, சபைக்குப் பரிந்துபேசுபவராக இருப்பதை அவர் முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.