Q660:1
கேள்வி (1910)-3- ஆறாம் தொகுதியில் சகோதரிகள் மீது விதிக்கப் பட்டுள்ளதான கட்டுப்பாடுகளானது, சகோதரர்கள் கலந்துகொள்ளும் வேதாகம ஆராய்ச்சி வகுப்புகளையும் உள்ளடக்குமா என்பதை அறிந்து கொள்வதற்கு நாங்கள் பிரியப்படுகின்றோம். எந்தக் கூட்டங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகளானது பொருந்தும் என்பதைத் தயவாய் எங்களுக்குத் தெரிவியுங்கள்.
பதில் – எனது அன்பு நண்பர்களே, இவைகளை அப்போஸ்தலன் குறிப்பிடுகையில், அப்போஸ்தலன் எதை மனதில் கொண்டிருந்தார் என்பதை ஊகிக்க வேண்டியுள்ளது. அவரது வார்த்தைகளுக்கான நியாயமான விளக்கம் என்று நாம் நம்புவதென்னவெனில்… அவர் பொதுவகையான கூட்டங்களையே குறிப்பிட்டாரேயொழிய, மாறாக வேதாகம ஆராய்ச்சிக் கூட்டங்கள் வகையை அல்ல. அவர் தனிமையில் சந்தித்தலையோ அல்லது ஒரு சிலரைக் கொண்டிருக்கும் கூட்டங்களையோ குறிப்பிடாமல், பொதுக் கூட்டங்களையே குறிப்பாய்க் குறிப்பிட்டுள்ளார் என்பது எங்களுடைய கருத்தாய் இருக்கின்றது. அதேவேளையில் நான் ஒருவேளை ஒரு வேதாகம வகுப்பில் சகோதரியாகக் காணப்பட்டிருப் பேனாகில், ஒருவேளை அது ஒரு சிறிய எண்ணிக்கையிலான வகுப்பாய் இருக்குமானால், வாய்ப்பு வருகையில், நான் எந்தக் கேள்வியையும் எழுப்பிடுவதற்கு விரும்பிடுவேன் மற்றும் ஒருவேளை வகுப்பில் முன்வைக்கப்பட்டுள்ள எந்த ஒரு கேள்வியாகிலும் முழுமையாய்ப் பதிலளிக்கப்படவில்லை என்று என்னுடைய கணிப்பில் காணப்படுமானால், நான்: “இப்பதிலானது, இக்கருத்தானது எப்படி இன்னென்ன கேள்விக்கும் பொருந்திடும்? என்று கூறி, மறைமுகமான விதத்தில், அப்பாடம் தொடர்புடைய எனது கருத்தினை வெளிக்கொணர விரும்புவேன்; இப்படியாக அவ்விஷயம் மீது முழுச்சொற்பொழிவு ஆற்றிடுவது போன்றதற்கு இணையான ஒன்றை, நான் செய்வதுபோன்று எண்ணிடுவேன் மற்றும் இப்படியாகக் கேள்வி கேட்பதன் வாயிலாக அவைகளை மற்றவர்களுக்கு முன்வைத்திடுவேன். அப்போஸ்தலர் கொடுத்த கட்டுப்பாடுகளானது, கேள்விகள் கேட்கும் விஷயத்திற்குப் பொருந்தும் என்று நான் புரிந்துகொள்ளுகிறதில்லை. ஒருவேளை நான் ஒரு சகோதரியாகக் காணப்படுவேனாகில், நான் கேள்விகள் கேட்பதற்குத் தயக்கமில்லாமலிருக்க வேண்டும் மற்றும் என்னுடைய செல்வாக்கினை நான் கவனமாய்க் கையாண்டிட வேண்டும் மற்றும் “நான் உங்கள் கருத்திற்கு ஒத்துக்கொள்கிறதில்லை நான் இன்னென்ன விதமாய்க் கருதுகின்றேன் என்று கூறிடுவதற்குப் பதிலாக, “இந்தக் காரியத்துடனும், அந்தக் காரியத்துடனும் எப்படி அக்கருத்து ஒத்துப்போகின்றது? இல்லையெனில், “அதனோடும், இதனோடும் எப்படி அது ஒத்துப்போகின்றது?” என்று நன்மை பயக்கும் விதமான வடிவத்தில் கேள்வியினை முன்வைப்பதில், நான் என் செல்வாக்கினைப் பயன்படுத்துகின்றேன் என்று நான் உணரமுடிய வேண்டும். ஒருவேளை ஜனங்கள் என்னைக் கேள்விகேட்பதற்கு அனுமதிப்பார்களானால், நான் எல்லாச் சபைகளுக்கும் சென்று, அவைகளைச் சீக்கிரத்தில் தலைக் கீழாக்கிடுவேன். சகோதரிகளுக்கான கட்டுப்பாடு என்பது என்னைப் பொறுத்தவரையில், விசேஷித்தக் கட்டுப்பாடல்ல; மாறாக சகோதரிகளை இந்தப் பெண்மையின் ஸ்தானத்தில் வைத்துக்கொள்வது சகோதரிகளுக்கு உண்மையில் சிலவிதங்களில் அனுகூலமாகக் காணப்படும்.