Q305:2
கேள்வி – (1910)-2- பூரண அன்பிற்கான இலக்கை அடைந்திட்ட யாரேனும் திரள்கூட்டத்தினராக விழுந்துபோகக்கூடுமா?
பதில் – கூடும் என்று நான் எண்ணுகின்றேன்; ஒருவன் இப்படித் திரள்கூட்டத்திற்குள்ளாக வீழ்ந்துபோவது மாத்திரமல்லாமல், அவன் முற்றிலுமாய் வீழ்ந்து போவதற்கும் வாய்ப்புள்ளது என்று நான் எண்ணுகின்றேன். ஒருவேளை ஒருவன் பூரண அன்பிற்கான இலக்கினை அடைந்தவனாகவும், அவன் மற்றவர்களுக்குப் போதிப்பவனாகவும் இருப்பானாகில், அவன் கர்த்தருடனான தன் உறவையும், கர்த்தருடைய அங்கீகரிப்பையும் தக்கவைத்து/காத்துக்கொள்ளவில்லையெனில், அவன் ஆகாதவனாய் வீழ்ந்துபோவான்.