Q238:2
கேள்வி (1910)-2- ஒரு நகரத்தில் குறிப்பிட்ட சில காலம் தொகுதிகள் விநியோகிப்பவர்களாகக் (colporteurs) காணப்பட்டு, அந்நகரத்திலுள்ள சபைக்குச் சென்றுகொண்டிருப்பார்களானால், அவர்கள் வாக்குகள் (vote) அளிக்கலாமா?
பதில் – ஒருவேளை அவருக்கு அச்சபையாரின் சூழ்நிலைகள் குறித்தெல்லாம் எவ்விதமான விஷயமும் தெரியாமல் இருக்கும் பட்சத்தில் அவர் அவர்களை நோக்கி: சகோதரரே, என்னுடைய வாக்கை (vote) நான் அளிக்கத்தக்கதாக இங்குள்ள எவரையும் பற்றி எனக்குப் போதுமான அளவு தெரியாது. ஆகவே வாக்கு (vote) அளிக்க நான் மறுக்கின்றேன் என்று கூறுவாரானால், அவர் ஞானமாய் நடந்துகொண்டவராய் இருப்பாரென நான் எண்ணுகின்றேன். ஆனால் ஒருவேளை அவர் அவ்விடத்தில் சில நாட்கள் அல்லது சில வாரங்கள் தங்கியிருந்தாரானால், மேலும் சில வாரங்கள் அல்லது மாதங்கள் அவ்விடத்தில் தங்கும் வாய்ப்பு அவருக்கு இருக்கும் பட்சத்தில், மற்றவர்களைப் போன்று அவருக்கும் அங்கு வாக்குச் (vote) செலுத்த உரிமையுண்டு என்று நான் எண்ணுகின்றேன். அவர் தொகுதிகள் விநியோகிப்பவராய் இருப்பதினால் அவர் தடைப்பண்ணப்படக்கூடாது. மாறாக அவருக்கும் நன்மை உண்டாகத்தக்கதாக, அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படலாம். அவர் தனது ஜீவியத்தைத் தத்தம் பண்ணினதின் மூலம், தனது அர்ப்பணிப்பை வெளிக்காட்டுபவராக இருக்கின்றார்.