Q471:2
கேள்வி (1910)-2- இது நீங்கள் பரிந்துரைத்ததான முதலாம் கூட்டம் தொடர்புடைய கேள்வியாகும். ஒவ்வொரு இடமாகப் போய்வருகையில் சகோதரர்கள் அதைச் சரியாய்ப் புரிந்துகொள்ளாததைக் காண்கிறேன். அவர்கள் ஒரு தலைப்பைத் தெரிந்துகொண்டு அதைச் சாட்சிக்கூட்டத்திற்கான தலைப்பாகக் கலந்தாய்வு பண்ணுகின்றனர். இது சரியான கருத்தாகுமா அல்லது சரியான கருத்து எது?
பதில் – சாட்சிக்கூட்டம் தொடர்பாக: சாட்சிக்கூட்டம் என்றால் என்ன? அலிகெனியிலுள்ள நண்பர்களுக்கான நம்முடைய பரிந்துரையென அந்தவொரு கூட்டத்தில் நான் முன்பு குறிப்பிட்டிருந்தது என்னவெனில் – அவர்கள் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் பிரசங்கத்தினை / செய்தியினை அவ்வாரம் முழுவதும் சிந்திப்பதற்கான விதையென மனதில் பெற்றிருக்க வேண்டும்; பின்னர் அவர்கள் சாட்சிக்கூட்டத்திற்கெனப் புதன்கிழமை மாலையன்று கூடிவருகையில், அவர்கள் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் பாடம் தொடர்புடைய அனுபவங்களைப் பெற்றிருப்பார்கள்; இதனால் தாங்கள் ஞாயிற்றுக்கிழமையன்று கேட்டுக் கொண்டவைகளின் பிரயோஜனம் அனைத்தையும் மற்றும் அப்பாடத்தோடு பின்னிப்பிணைந்துள்ள தங்கள் சொந்த அனுபவங்களின் பிரயோஜனம் அனைத்தையும் பெற்றுக்கொள்வார்கள் மற்றும் அவைகள் புதன்கிழமை இரவின்போது, அவர்களது மனதில் மிக முழுமையாய்க் காணப்படும். மேலும் புதன்கிழமை இரவன்று அவர்கள் கூடிவருகையில், காய்கறிக் கடைக்காரனோடோ அல்லது இறைச்சிக் கடைக்காரனோடோ அல்லது தங்களது தொழிலிலோ அல்லது தனிப்பட்ட ஆராய்ச்சியிலோ அவர்கள் பெற்றுக்கொண்ட ஜீவியத்தின் அனுபவங்கள் அல்லது நிகழ்வுகள் எதுவாயினும், ஞாயிற்றுக்கிழமை நண்பகல் பிரசங்கப்பாடம் தொடர்புடையதாகச் சுவாரசியமாய்க் காணப்படும் எதுவாகிலும் – அதுவே அவர்களது கிறிஸ்தவ அனுபவம் தொடர்புடையதாக அவர்கள் பகிர்ந்திடும் சாட்சியாய் இருக்கும்; ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் பாடம் தொடர்பாக அவர்கள் எந்த அனுபவத்தையும் பெற்றிருக்கவில்லையெனில், அவர்கள் சொல்லவிரும்பும் எதுவும் பகிரப்படலாம்; ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் பாடமானது இருதயத்தில் பதியப்பெற்று என்றென்றும் நிலைத்திருக்கத்தக்கதாக, அப்பாடம் சம்பந்தமான அனுபவங்கள் பகிரப்படுவது விரும்பத்தக்கவையாகும். புதன்கிழமை மாலைக்கூட்டத்திற்குப் பிற்பாடு அதே சிந்தனைகளானது அடுத்த ஞாயிறுவரை மனதில் தொடர்ந்து சிந்தித்துக்கொள்ளப்படலாம்; இப்படியாக வாரம் முழுவதும் சிந்தனைகள் ஒருமுகப்படுத்தப்பட்டு, அவை முழுமையாக மெல்லப்பட்டு ஜீரணமாகுகின்றது. இப்படியான விதத்திலேயே அக்கூட்டம் பிரயோஜனமானதாய்க் காணப்படுகின்றது. ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு, அதைக் கலந்தாராய்வது சாட்சிக்கூட்டமே அல்ல. சாட்சி என்பது ஒரு பாடம் சம்பந்தப்பட்ட தன்னுடைய சொந்த அனுபவத்தை ஒருவர் பகிர்ந்துகொள்வதாகும்.