Q246:2
கேள்வி (1913)-2- ஓர் இடத்தில் மூப்பருக்கான தகுதிகளைப் பூர்த்திச் செய்திடுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் இல்லாததாகத் தோன்றுகையில், மூப்பர்களைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பதற்கும் மற்றும் பாஸ்டர் ரசல் அவர்களை மூப்பராகத் தேர்ந்தெடுப்பதற்கும் நீங்கள் பரிந்துரைப்பீர்களா?
பதில் – இம்மாதிரியான கேள்விகள் விவாதிக்கப்படுகையில் கவனமாகக் கையாளப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன மற்றும் எதை அறிவுறுத்துவது சிறந்ததாயிருக்குமென அறிந்துகொள்வதற்கும் கடினமாய்க் காணப்படுகின்றது. நண்பர்களே கூடுமானமட்டும் ஞானத்தோடும், விவேகத்தோடும் நடந்து கொள்ளுங்கள் என்பதே என் பொதுவான பரிந்துரையாய் இருக்கின்றது. இம்மாதிரியான விஷயங்களில் கர்த்தருடைய சித்தத்தைக் குறித்துக் கர்த்தருடைய ஜனங்கள் முழுமையாய் உணர்ந்துகொள்ளாததே, ஒரு பிரச்சனையாகக் காணப்பட்டு வந்தது மற்றும் அநேகமாக இன்னமும் காணப்பட்டு வருகின்றது. தீமோத்தேயு மற்றும் தீத்துவுக்கு எழுதுகையில் அப்போஸ்தலன் ஒரு மூப்பனுக்கான தகுதிகளை முன் வைக்கையில், அவர் திட்டவட்டமான விதிகளை முன்வைத்திடுவதாகவும் மற்றும் அந்த நிபந்தனைகள் அனைத்திலும் ஒவ்வொருமூப்பனும் மிக உயர்ந்த நிலையில் காணப்பட வேண்டும் என்பதாகவும் கர்த்தருடைய ஜனங்கள் எண்ணம் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் காணப்படுபவர் பூரணமான மனுஷனாக, மிகவும் நல்லதொரு மூப்பராகக் காணப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. இப்படியாகவே – அதாவது அப்போஸ்தலன் அங்கு எழுதியுள்ளவைகள் யாவற்றின் நிலையினை மற்றக் கிறிஸ்தவர்களும் அடைவார்களானால், இந்தக் கிறிஸ்தர்கள் யாவரும்கூட இப்படியாகவே காணப்படுவார்கள். அப்போஸ்தலன் உண்மையில் தன்னுடைய வார்த்தைகளானது, நேரடியான விதத்தில் அப்படியே புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று எழுதவில்லையெனில், பின் ஏன் அவர் இப்படித் திட்டவட்டமான வார்த்தைகளைப் பேசியுள்ளார் என்று நீங்கள் கேட்கலாம்? சபை யாவரிடமும் இயேசு வேறொரு தருணத்தில், “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவைப் போன்று நீங்களும் இருக்கக்கடவீர்கள் என்று கூறின விதத்தைப்போலவே அப்போஸ்தலனும் காரியத்தினை முன்வைக்கின்றார் என்று நாம் பதிலளிக்கின்றோம். நீங்கள் உங்கள் பிதாவைப்போன்று இருக்கின்றீர்களா என்று நான் கேட்டால்? “நான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன் என்று நீங்கள் சொல்லுவீர்கள். என் அன்பு சகோதரனே நீங்கள் சொல்வது சரிதான். சரி உங்கள் பிதாவைப்போன்று இருக்கின்றீர்களா என்று நான் கேட்டால்? சில விதங்களில் நீங்கள் இருக்கின்றீர்கள் – அதாவது உங்கள் மனதில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்று சொல்லுவீர்கள். சரி வார்த்தைகள் மற்றும் கிரியைகள் மற்றும் சிந்தனைகள் யாவற்றிலும் நீங்கள் இருக்கின்றீர்களா என்று நான் கேட்டால்? இல்லை நான் பிதாவைப் போன்று அனைத்திலும் இருக்கிறதில்லை ஆனால் தேவனுக்கு ஒத்த குணலட்சணத்தை அதிகமதிகமாய் அடைந்திட நான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன் என்று சொல்லுவீர்கள். நல்லது. இதுபோலத்தான் அப்போஸ்தலன் இங்கு ஒரு மூப்பருக்கான தராதரத்தினை / அளவுகோலினைச் சபைக்கு முன்வைக்கின்றார்; அதாவது ஒரு மூப்பர் எப்படி இருக்கவேண்டும் என்று சபைக்கு முன்வைக்கின்றார். நீங்கள் மூப்பர்களைக்குறித்துச் சிந்திக்கையில், அதைப் பாருங்கள் மற்றும் சகோதரரை நீங்கள் மதிப்பிடுகையில் அதை மனதில் கொண்டிருங்கள் மற்றும் இந்தத் தகுதிகளைக் கொஞ்சம் கொண்டிராதவர்கள், பொருத்தமானவர்களாய் இருக்கமாட்டார்கள் மற்றும் உங்களால் முடிந்தவரைத் தகுதியானவரைத் தேர்ந்தெடுங்கள். பூரணமான மூப்பர்கள் கிடைக்கும் வரைக் காத்திருப்போமானால், நாம் எந்த மூப்பர்களையும் ஒருபோதும் பெற்றுக்கொள்ள மாட்டோம். ஆகையால் சகோதரர் ரசலும் சரி, வேறு எந்த நபரும் சரி பரிபூரண மூப்பராய் இருந்திடமுடியாது என்று நான் சொல்லுவேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் மூப்பராக எவரையும் தேர்ந்தெடுக்காமல் இருப்பது நலமாயிருக்கும் எனும் நிலைமையுள்ள சந்தர்ப்பங்களும் காணப்படக்கூடும் என்று நான் நம்புகின்றேன். அப்படியான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன, ஆனால் மிகவும் அரிதாகவே இருக்கின்றன. அப்படித்தான் என்று நான் நம்புகின்றேன். இது அறிவுரை கூறுவதற்கு மிகக் கடினமான சந்தர்ப்பங்களாய் இருப்பவைகளில் ஒன்றாய் இருக்கின்றது. இவ்விஷயத்தில் அநேகக் காரியங்கள் சம்பந்தப்பட்டுள்ளது மற்றும் ஒவ்வொரு சிறு சபையாரும், சபையாரிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனும், முடிந்தமட்டும் ஞானமாயும், முடிந்தமட்டும் முன்யோசனையோடும், ஜாக்கிரதையோடும், முடிந்தமட்டும் தேவனுக்கும், அவரது நீதியின் கொள்கைகளுக்கு நேர்மையாயும் காணப்பட்டு, தெய்வீக வழிநடத்துதலின்படி செய்திடுவதற்கு ஜெபத்தோடு நாடுவார்களாக. ஒருவேளை முழுச்சபையாரும் அல்லது சபையாரில் பெரும்பான்மையினர், ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையினைத் தீர்மானித்திடுவார்களானால், சபையார் வாக்குகள் செலுத்திட்டாலும், உங்கள் சித்தமே செய்யப்பட வேண்டும் என்று எண்ணாதீர்கள்; மாறாக பின்வருமாறு கூறிடுங்கள்: “சரி, பரவாயில்லை சபையார் வாக்குகள் அளித்துள்ளனர் மற்றும் நியாயமாய்க் காரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது; நான் என் கருத்தைச் சொல்லியுள்ளேன் மற்றும் நான் சிந்திப்பதுபோன்று, அவர்கள் சிந்திக்கவில்லை மற்றும் சபையாரை நான் வற்புறுத்திடக்கூடாது; நான் சிறுபான்மையாய் இருப்பவர்களில் ஒருவனாய் இருக்கின்றேன் மற்றும் சபையார் மத்தியிலுள்ள மற்றவர்களுக்கு நான் பணிந்திடுவேன் மற்றும் நான் அவர்களோடுகூட ஒத்துழைப்பேன் மற்றும் நான் சொன்ன வழிதான் சரியான வழி என்றும், ஒருவேளை சபையார் என் வழியில் வரவில்லையெனில் காரியங்கள் அனைத்தும் தவறாகிவிடும் என்றும் காண்பிப்பதற்கென, அவர்களுக்கு எதிராய் நான் காரியங்களைச் செய்திடமாட்டேன். இல்லை, நான் தேவனுக்கு இசைவாய்க் காணப்பட வேண்டும் மற்றும் சபையாரால் எது தீர்மானிக்கப்படுகின்றதோ, அதற்கு என்னுடைய பங்கினைச் சிறந்த விதத்தில் நான் செய்திட வேண்டும்; சமாதானமும், நீதியும் நிலவும்படி அனுமதிக்கத்தக்கதாகவும் மற்றும் சத்தியத்தின் காரணங்களை முன்னேற்றத்தக்கதாகவும் மற்றும் சமாதானம் பண்ணுகிறவராகிடத்தக்கதாகவும் என்னால் இயன்ற மட்டும் சிறப்பாய் இப்பொழுது ஒத்துழைத்திடுவேன் என்பதாகும். இதை மறந்துவிட வேண்டாம். தேவனுடைய ஜனங்கள யாவரும், “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் என்று இயேசு கூறியதைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஜெயங்கொள்பவர்களாகிடுவதற்கு, எதிர்த்துப்போராடும் மனப்பான்மையினைக் கர்த்தருடைய ஜனங்கள் யாவரும் ஓரளவுக்குப் பெற்றிருப்பது அவசியம் என்பதை நினைவில் கொள்வோமாக; இதைக் கொஞ்சமேனும் பெற்றிருக்கவில்லையெனில், உங்களால் ஜெயங்கொண்டவராகிட முடியாது. உலகத்தினை ஜெயங்கொள்வதற்குப் போதுமான அளவுக்கு நீங்கள் எதிர்த்துப் போராடுகிறவராயும் மற்றும் சகோதரரோடு சண்டைப்பண்ணாமல் இருப்பதற்குப் போதுமான அளவுக்கு நீங்கள் சமாதானம் பண்ணுகிறவராயும் இருத்தல் வேண்டும். சகோதரரோடு போராடிக்கொண்டிராதீர்கள்; மாறாக உங்களால் முடிகிற அளவுக்குப் பரிவாயும், அனுதாபம் உடையவர்களாயும், உதவிகரமாயும் இருங்கள்.