Q483:1
கேள்வி (1916)-1- எவ்வகைக் கூட்டங்கள் மிகவும் பிரயோஜனமானவை களாகக் காணப்படும்?
பதில் – இது சந்தர்ப்பங்களைச் சார்ந்ததாகக் காணப்படும். நாங்கள் அறிந்ததிலேயே மிகவும் பிரயோஜனமான கூட்டமாய்க் காணப்படுவது பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளாகும் மற்றும் மிகவும் பிரயோஜனமாய்க் காணப்படாத சில அரிதான சந்தர்ப்பங்களும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் பிரசங்கக் கூட்டமானது மிகவும் பிரயோஜனமானதாகக் காணப்படும்; சில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு பிரசங்கக் கூட்டங்களானது காணப்படுகின்றது. எனினும் இவை அபூர்வமான சந்தர்ப்பங்களிலேயே ஆகும். பொதுவாக பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளிலிருந்தே மிகுந்த பயன் கிடைக்கின்றது என்று நாம் கருதுகின்றோம்; காரணம் இந்த வகுப்புகளுக்கு ஒவ்வொரு நபரும் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளவும், தனது பதில்களைக் கூறவும் வேண்டியுள்ளது. நான் குறிப்பாய் ஆலோசனை கொடுக்க நோக்கம்கொள்ளவில்லை, மாறாக பொதுவான விதத்திலேயே கொடுத்து, நான் இங்குக்கூறுபவைகளை ஒவ்வொரு சபையாரும், அவர்களுக்குரிய விதத்தில் நடைமுறைப்படுத்திடுவதற்கு விட்டுவிடுகின்றேன்.
நாம் எத்தனை கூட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது எந்த வகையான கூட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று வேதாகமமானது எதுவும் தெரிவிப்பதில்லை. இக்காரியமானது தெளிந்த புத்தியுள்ள ஆவியினால் தீர்மானிக்கப்படத்தக்கதாக விடப்பட்டுள்ளது. சபையாரிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனுடைய பிரயோஜனம் மற்றும் நன்மைக்குறித்து மனதில் வைத்துக்கொள்ளப்பட வேண்டும். நாம் “ஒருவரையொருவர் கவனிக்க வேண்டும். அதிகமான கூட்டங்கள் தேவை என்று சிலர் எண்ணலாம். ஒருவேளை மிக அதிகமாய்க் கூட்டங்களை ஒழுங்குப்படுத்துவார்களானால், எத்தனை பேர்களுக்கு என்று கூட்டமானது முதலில் ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்ததோ, அந்த எண்ணிக்கையைவிட, கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையானது படிப்படியாகக் குறைந்துப்போய், அதைத் தொடர்ந்து நடத்த முடியாதளவுக்குப் போவதைப் பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமையில் மூன்று கூட்டங்கள் நடத்தப்படுவது போதுமானதாயிருக்கும் என்பது எனது கருத்தாகும். ஆனால் ஒவ்வொருவரும் இதில் சிந்திக்க வேண்டும் மற்றும் பின்னர்ச் சிந்திப்பதற்கும், செயல்படுவதற்குமான அதே சுயாதீனமும், சிலாக்கியங்களும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்படுவதாக. இதுவே சரியானதும், நியாயமானதுமாகும். நீதி என்கிற இந்தக் கருத்தானது, ஜீவியத்தின் காரியங்கள் அனைத்திலும் காணப்பட வேண்டும்; ஏனெனில் நீதியானது தேவனுடைய சிங்காசனத்திற்கான ஆதாரமாய் இருக்கின்றது மற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவ நடத்தையினுடைய ஆதாரமாய்க் காணப்பட வேண்டும்; சொல்லப்போனால் நாம் செய்யும் அனைத்திற்கும் நீதியானது ஆதாரமாய்க் காணப்பட வேண்டும். சபையாரில் யாரேனும் ஐந்து கூட்டங்களைப் பெற்றிருக்க விரும்புவார்களானால், நான்: “சரி, ஆனால் என்னால் அனைத்துக்கூட்டங்களிலும் கலந்துகொள்ள முடியாது. எனினும் உங்களுக்கு ஐந்து கூட்டங்கள் வேண்டும் என்றும், அவற்றில் போதுமானவர்கள் நன்கு கலந்துகொள்வார்களென எண்ணுகின்றீர்கள் என்றும் இருந்ததால், நான் ஐந்து கூட்டங்களுக்கென வாக்களித்திடுவேன் (vote)” என்பேன்.