Q250:1
கேள்வி (1913)-1- ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சி வகுப்பினை நடத்தும்படிக்கு மூப்பர் ஒருவரை நியமித்தல் – தொடர்புடைய விஷயத்தில், ஒருவர் முன்மொழியப்பட்ட பிற்பாடு, இன்னும் முன்மொழியப்படுவதற்கு நேரம் கொடுக்காமல், முன்மொழிதலை நிறைவு செய்வது சரியான காரியமாய் இருக்குமா? இது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சகோதரர்களால் மூப்பர்களாக ஊழியம் புரியப்படும் ஒரு சபைக்குப் பொருந்துமா?
பதில் – பாராளுமன்ற விதிகள் என்று அழைக்கப்படுகின்ற விதிகள் காணப்படுகின்றன. அதாவது பாராளுமன்ற அவைபோன்ற குழுவினுடைய செயல்பாடுகளுக்குப் பொருந்தும் விதிகளாகும் மற்றும் இந்த விதிகளானது மகாசட்டசபைக் கூட்டங்கள் தொடர்பாகவும், சிறு கூட்டங்கள் மற்றும் பெரிய கூட்டங்கள் தொடர்பாகவும் கூடப் பயன்படுத்தப்படுகின்றது. இவைகள் மிகவும் நல்ல விதிகளாகவும், பொதுவாய் மறுப்புத் தெரிவிக்கப்படக் கூடாதவைகளாகவும் காணப்படுகின்றன. இவைகள் பொதுவாகவே நியாயத்திற்குரிய மிகவும் ஞானமான மற்றும் பரிவுள்ள விதிகளாகக் காணப்படுகின்றன. அதேவேளையில் தேர்ந்தெடுத்தலின் விஷயத்திலும் மற்றும் கூட்டங்களுக்கான விதிகளின் விஷயத்திலும், நீதிக்கும் அதிகமாய்க் கடந்து சென்று, அன்பிற்கேற்ப நிர்வகிக்க வேண்டியவர்களாகவும் மற்றும் அன்பே நியாயப்பிரமாணத்தினுடைய நிறை வேறுதலாய் இருக்கின்றது என்று அறிய வேண்டியவர்களாகவும், இக்காரியங்கள் தொடர்பான நீதியான மற்றும் நியாயமானவைகளுக்கும் மேலாக செய்ய வேண்டியவர்களாகவும் கர்த்தருடைய ஜனங்கள் இருப்பதினால், அவர்கள் வேறுவகையான பொதுக்கூட்டங்களுக்குப் பொருந்தக்கூடிய பிரமாணத்தின் விஷயத்தில், பிரமாணத்தினுடைய எழுத்தினைக் கடைபிடிக்க வேண்டுமென ஒருவரையொருவர் மிகவும் கடுமையாய் வற்புறுத்துகிறவர்களாய்க் காணப்படக்கூடாது. அவர்களுடைய அன்பின் அனுதாப கட்டுகளானது, அவர்கள் அனைவரையும் பிரியப்படுத்துவதற்கு விரும்புமளவுக்குக் காணப்பட வேண்டும். ஒருவேளை இது ஒரு கூட்டம் என்று வைத்துக்கொள்வோம் மற்றும் இங்கு மூப்பர்கள் சிலரை நாம் தேர்ந்தெடுக்கப்போகின்றோம். இங்கு இருப்பவர்களில் சிலர் சகோதரர் “A” -கும் மற்றும் சிலர் சகோதரர் “B”-கும் மற்றும் சிலர் சகோதரர் “C” -கும் மற்றும் சிலர் சகோதரர் “D” -கும் மிகுந்த மதிப்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நான் அறிவேன் என்று வைத்துக்கொள்வோம்; மற்றும் இவர்களில் சகோதரர் “A” மற்றும் “C” எனது விருப்பத்தின் படியானவர்களாய் இருக்கின்றனர்; சகோதரர்கள் “B” மற்றும் “D” குறித்து நான் அவ்வளவுக்கு எண்ணுகிறதில்லை. சகோதரர் “A” மற்றும் “C” -ஐ நான் முன்மொழிந்து, முன்மொழிதலை நிறைவுபண்ணிடுவேன் என்று நான் சொல்லிடலாம். இதனால் மிகவும் துணிவற்றவர்கள் வாய்ப்பில்லாதவர்களாய்ப் போவார்கள். இது அன்பானதாய் இருக்குமா? இல்லை. அன்பே நம்முடைய விதியாய் இருக்கின்றது மற்றும் அன்பானது உலகத்திலுள்ள பாராளுமன்ற விதிகள் அனைத்திற்கும் முன்னதாகக் கடந்துவந்து செயல்படுகின்றது. அன்பானது – இதோ அங்குக் காணப்படும் சகோதரனுக்கும், இதோ அங்குக் காணப்படும் சகோதரிக்கும் மற்றும் அனைத்துச் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் நல்ல மற்றும் நியாயமான / பாரபட்சமற்ற வாய்ப்புக் கிடைக்கவேண்டும் மற்றும் இவ்விஷயத்தில் அவர்களது கருத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகின்றேன் என்று கூறிடும். கர்த்தருடைய ஏற்பாட்டின் கீழ் அவர்களுக்கு உரியதான உரிமைகளை நான் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள விரும்புகிறதில்லை. ஒருவேளை நான் நுணுக்கமாக ஆராய்பவராகவும், மிகவும் அனுபவமுடையவராகவும் காணப்பட்டு, எனக்குத் தகுந்தாற்போல் அனைத்தையும் மாற்றமுடிபவராகக் காணப்படலாம்; ஆனால் இளையச் சகோதரர்களை மனதில் குழப்பி, அவர்களது சித்தங்களைச் செய்ய விடாமல் ஆக்கிடுவதும், அவர்களை ஏதோ ஒன்றிற்கு வாக்களிக்கப் (vote) பண்ணுவதும் மற்றும் இப்படிச் செய்ததை அவர்கள் அறியாமலிருந்து, ஆனால் பிற்பாடு அதிருப்தியடைந்து,”அக்காரியத்தினை நான் சரியாய்ப் புரிந்திருப்பேனாகில், நான் வேறு மாதிரி செயல்பட்டிருப்பேனே என்று கூறிடுவதற்கு ஏதுவான நிலையில் இளையச் சகோதரர்களை ஆளாக்குவதும், ஒரு மூத்த சகோதரனான எனக்குத் தகுதியாய் இராது. இது திருப்திகரமான கூட்டமேயல்ல. ஒரு சபையார் மூப்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்கெனக் கொண்டிருக்கும் கூட்டமானது, எல்லாருடைய உரிமைகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட மற்றும் முடிவுகளில் அனைவருமே மகிழ்ச்சியும், திருப்தியும் உணரத்தக்கதாய் மிகவும் வெளிப்படையாயும் மற்றும் நியாயமாயும் நடைபெறும் ஒரு கூட்டமாகக் காணப்பட வேண்டும். நம் அனைவருக்குமே நம்முடைய வாய்ப்புகள் கிடைத்தது மற்றும் நான் விரும்பத்தக்க விதம் என்று எண்ணின விதத்தில் ஒருவேளை நடைபெறவில்லை என்றாலும், அது நல்லதொரு விதத்தில் செய்யப்பட்டுள்ளது என்று எண்ணிடுவேன்; ஏனெனில் எல்லாருக்கும் நியாயமான பங்குகிடைத்தது – அது ஒருவரையொருவர் கிழித்தெறிவதற்கான பிரயாசமாக இருக்கவில்லை. நாம் ஒருவரையொருவர் கிழித்தெறிய கூடாது. ஒருவேளை ஒருவரை நீங்கள் அறிந்திருக்கவில்லையெனில் மற்றும் நீங்கள் அறிந்திருக்கும் எவராலும் அவருக்குச் சான்று பகிரப்படவில்லையெனில், அவருக்கு வாக்குச் செலுத்திடாமல் இருந்துவிடுங்கள். ஒருவேளை நீங்கள் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருக்கும் யாரோ ஒருவர் அங்கிருந்து, இச்சகோதரனுக்குச் சான்று பகர்ந்து, நான் அச்சகோதரரை முன்மொழிகின்றேன் என்று கூறுவாரானால்; பின்னர் நீங்களோ: “சகோதரர் ரசல் அவர்கள் சகோதரர் “W” அவர்களை முன்மொழிந்துள்ள காரியமானது, அவர் இவரைக்குறித்து அறிந்திருக்கின்றார், இல்லையேல் அவர் இவரை முன்மொழிந்திருக்க மாட்டார். எனக்குச் சகோதரர் “W” அவர்கள் பரிட்சயமானவரல்ல, ஆனாலும் சகோதரர் ரசல் அவர்கள் இவரை முன்மொழிந்தும் மற்றும் சகோதரர் ஹிரிஷ் அவர்கள் வழிமொழிந்தும் இருக்கின்றனர் மற்றும் அவர்கள் இருவரையும் குறித்து நான் அறிந்திருப்பதினால், சகோதரர் “W” அவர்கள் சரியானவர் என்று அறிந்துகொள்வேன் என்று எண்ணிட வேண்டும். பிறர் வழியான கூற்றினால் (indirect) பெறப்படும் அறிவின் மீது சார்ந்திருக்கும் ஓர் உரிமையினை நாம் பெற்றிருக்கின்றோம். சகோதரர் “W” -ஐ நமக்கு நன்கு பரிட்சயமில்லை மற்றும் அவருக்கு வாக்களிக்க அவரது காரியங்கள் அனைத்தும் போதுமாய் நமக்குத் தெரியாது; அவருக்கு வாக்களிப்பதற்கு ஏதுவாகச் சுட்டிக்காட்டுவதற்கு ஏதாகிலும் நமக்குக் காணப்பட வேண்டும். ஆனால் ஒருவேளை யாரேனும் அவருக்குச் சான்று பகருவார்களானால், அது வங்கியில் நடைபெறுவது போன்றே காணப்படும்; அதாவது நீங்கள் வங்கிக்குச் செல்கின்றீர்கள் மற்றும் உங்களது பெயர் ஸ்மித் என்று வைத்துக்கொள்ளலாம்.
வங்கியில்: “திரு. ஸ்மித் அவர்களே இந்த வங்கியில் எங்களுக்கு உங்களைத் தெரியாது; மற்றும் நாங்கள் உங்கள் தரப்பினர்களை அறிந்து கொள்ளாதது வரையிலும் எங்களால் உங்களுக்கு எந்தத் தொகைகளையும் செலுத்திட முடியாது. உங்களுக்கு திரு. ஹிரிஷ் அவர்களைத் தெரியுமா? என்று கேட்கப்படுகின்றது.
நீங்களோ: “ஆம், அவர் எனக்கு உறுதிச் சீட்டு அளிப்பார் என்று சொல்கின்றீர்கள்.
வங்கியோ: “திரு.ஹிரிஷ் அவர்களே, நீங்கள் திரு. ஸ்மித் அவர்களுக்கு உறுதிச் சீட்டு அளிக்கின்றீர்களா? என்று கேட்கின்றது.
திரு. ஹிரிஷ் அவர்கள்: “ஓ! ஆம், இது திரு. ஸ்மித் ஆவார்; அவருக்கு நான் உறுதிச் சீட்டு அளிக்கின்றேன்; அவருக்கு உத்தரவாதம் அளிக்கின்றேன் என்று சொல்கின்றார்.
பின்னர் வங்கியானது: “சரி, திரு ஸ்மித் அவர்களே, உங்களை திரு. ஹிரிஷ் அவர்கள் அறிவார் என்று கூறுகின்றார்; ஆகையால் நாமும் அறிமுகமாகிக் கொள்கின்றோம் என்று கூறிடும்.
இப்படியே சபையாரிலும்கூடக் காணப்படுகின்றது. யாரோ ஒருவர் சகோதரர் ஸ்மித் அவர்களுக்குச் சான்று பகருகின்றார் மற்றும் நீங்களோ: இச்சகோதரனுக்குச் சான்று பகரப்போகிறவர்களையும் அறிவேன் என்பீர்கள். நீங்கள் அறியாத ஒருவரை நீங்கள் ஒருபோதும் முன்மொழியக்கூடாது; யாரோ ஒருவர் ஸ்மித் என்று கூறினதற்காக மாத்திரம் நீங்கள் அவரை ஒருபோதும் மொழியக்கூடாது. யாரோ ஒருவர் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக விவேகமற்று, ஸ்மித்தையோ அல்லது பிரவுண் அவர்களையோ கூறிவிடாதீர்கள். நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்று அறிந்து செயல்படுங்கள் அல்லது அதைச் செய்யாதீர்கள். இன்னொரு காரியம்: மூப்பர்களுக்கான இத்தகைய தேர்ந்தெடுத்தலை நாம் பெற்றிருக்கும்போது, நான் பின்வருமாறு: “எனக்குச் சகோதரர் “A” அவர்களையும், சகோதரர் “C” அவர்களையும் பிடிக்கும் மற்றும் என்னைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு சகோதரர்களே மற்றச் சகோதரரைக் காட்டிலும் மிகவும் சிறப்பானவர்களாகத் தெரிகின்றனர் மற்றும் சகோதரர்கள் “A” மற்றும் “C” மூப்பர்களாக இருந்தால்தான் மற்றும் சகோதர்கள் “B” மற்றும் “D” மூப்பர்களாக இல்லாமலும் இருந்தால்தான் சபையாருக்கு நன்கு ஊழியம் புரியப்படலாம் என்று நான் எண்ணுகின்றேன் என்று வைத்துக்கொள்வோம். இதை நான் திணிக்க முற்பட்டு, முகஸ்துதி செய்து பணியவைத்திடலாம் மற்றும் நயமாய்ப் பேசி அவர்களது வாக்கினைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இப்படிச் செய்வது சரியாய் இருக்காது. மாறாக நான் பின்வருமாறு: “அநேகர் சகோதரர் “B” வர்களையும் மற்றும் வேறு சிலர் சகோதரர் “D” அவர்களையும் மிகவும் விரும்புகின்றனர் என்று நான் நன்கு அறிவேன்; இவர்கள் இருவருக்குமே, சகோதரர்கள்“A” மற்றும் “C” போன்று நல்ல தகுதிகள் காணப்படுவதாக எனக்குத் தெரியவில்லை ஆனால் சிலர் இவர்களை விரும்புகின்றனர் மற்றும் தங்களுக்கு இவர்களால் பிரயோஜனம் உண்டாகும் என்று கூறுகின்றனர் மற்றும் அவர்களது குணங்களுக்கு எதிராய்ச் சொல்லிடுவதற்கு நான் எதையும் அறியேன் மற்றும் மற்றவர்கள் அவர்களுடைய ஊழியத்தினால் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்பவர்களாக இருப்பதினால், அவர்களும் ஊழியம் புரிவதில் நான் மகிழ்ச்சிக்கொள்ள வேண்டும் என்று எண்ணிட வேண்டும். அவர்கள் நல்ல குணலட்சணமுடைய மனிதர்கள் என்று அறிந்து, அவர்களில் யாருக்கேனும் மற்றும் அனைவருக்குமே முன்மொழிவதில் நான் பிரியம்கொள்வேன். இது அவர்கள் சிறந்தவர்கள் என்று நான் எண்ணுவதாகாது, மாறாக நான் விரும்புகிறவர்களையே நான் முன்மொழிந் திடுவேன் மற்றும் ஒருவேளை மற்றவர்களும் முன்மொழியப்பட்டிருக்க மற்றும் வழிமொழிய ஆள் இல்லாமல் இருந்தால், “நான் சகோதரர்கள் “B” மற்றும் “D” அவர்களை வழிமொழிகின்றேன் என்று கூறிடுவேன். ஏன்? அவர்கள் நீங்கள் விரும்பினவர்கள் இல்லையே என்று நீங்கள் என்னிடம் கேள்விக் கேட்கலாம். இல்லைதான், ஆனாலும் அவர்களை மற்றச் சில சகோதரர்கள் விரும்புகின்றனர் என்று நான் அறிவேன் மற்றும் சபையார் யாவரும் ஊழியம்புரியப்பட நான் விரும்புகின்றேன். நான் சிறந்தவர்கள் என்று எண்ணினவர்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை, மாறாக மற்றவர்களாலும் சிறந்தவர்கள் என்று கருதப்பட்டவர்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன்; நான் திருப்திக் கொள்வது மாத்திரமல்லாமல், சகோதரர்கள் யாவரும் திருப்தியடைய விரும்புமளவுக்குப் போதுமான அன்பையுடையவனாக நான் இருக்க வேண்டும். இந்த ஆவியே ஒவ்வொரு சபையாரிடத்திலும், ஒவ்வொரு தேர்ந்தெடுத்தலிலும் காணப்பட வேண்டும் மற்றும் அங்குக் குழப்பம் குறைவாகவே காணப்படும் என்று நான் கருதுகின்றேன்.
ஒருவேளை வேறுயாரையாகிலும் பெற்றுக்கொள்வதற்குப் பிரியப்படுகின்ற சிலர் காணப்படுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம். முற்றிலுமாகப் பொருத்தமற்றவர்கள் என்று நான் கருதிடும் சிலர் முன்மொழியப்பட்டிருக்கின்றனர் என்று வைத்துக்கொள்ளலாம்; அவருக்காய் யாராகிலும் வாக்களித்துவிடுவார்கள் என்று நான் அச்சமடைவேன். நானோ: “அருமையான நண்பர்களே சகோதரர் “று அவர்கள் முன்மொழியப்பட்டிருக்கின்றார். அவருக்கு எதிராய் ஒரு வார்த்தைச் சொல்லிடுவதற்கோ அல்லது அவரைச் சத்துருப்போன்று காண்பித்திடுவதற்கோ நான் விரும்பவில்லை எனினும் என்னுடைய கணிப்பின்படி, அவரை நாம் மூப்பர்களில் ஒருவராகப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது என்று நான் எண்ணினேன். ஆகையால் தேர்வு செய்வது குறித்த காரியங்கள் நடந்துகொண்டிருக்கையில், நான் அவருக்கு வாக்களிப்பதில்லை என்று தெரியப்படுத்துகின்றேன்;. சகோதரர் “W” அவர்களே நீங்கள் மூப்பராக ஊழியம் புரியாமலிருப்பது நலமாயிருக்கும் என்று நான் எண்ணுகிறதினாலேயே நான் உங்களை எதிர்க்க வேண்டியிருக்கிறதேயொழிய, மற்றப்படி நான் எந்த விதத்திலும் உங்களை எதிர்க்கவில்லை என்பேன். நான் அவரிடத்தில் முழுமையாய் ஒளிவுமறைவு இன்றிக் காணப்படுவேன் மற்றும் அவருக்கு எதிராய் ஒரு வார்த்தைக்கூடச் சொல்லமாட்டேன் மற்றும் “அவர் பட்டணத்தில் அநேகம் கடன்பட்டிருக்கின்றார் என்பதினால் நான் அவரை எதிர்க்கின்றேன் மற்றும் பட்டணம் எங்கும் இவர் கடன்பட்டிருக்கின்றார் என்பதை அறிவார்கள் மற்றும் அவரால் நம்முடைய சபைக்கு அவமானம் காணப்படுகின்றது என்று சொல்லமாட்டேன். சகோதரர் “W” அவர்களைக் குறித்து நான் எதுவுமே பேச வேண்டியதில்லை. நானோ: “சகோதரர் “W”அவர்கள் மூப்பராகிடுவதற்கு என்னால் வாக்கு (vote) அளித்திட முடியாது மற்றும் அவரை மூப்பராகக் காண நான் விரும்பவில்லை மற்றவர்களால் கர்த்தருடைய காரணங்களானது நன்கு ஊழியம்புரியப்படும் என்று நான் நம்புகின்றேன் என்று மாத்திரம் கூறிடுவேன். நாம் ஒருவரையொருவர் துண்டுத்துண்டாகக் கிழித்துப் போட அவசியமில்லை. சகோதரர் “W” அவர்கள் பட்டணத்தில் கடன்பட்டிருக்கின்றார் என்பது உண்மையாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஒருவேளை நாம் அவரிடத்தில் கேட்டால், அவர் சில நல்லக் காரணங்களைக் கொடுக்க முடிபவராகக் காணப்படலாம்.