Q483:2
கேள்வி (1916)-2- Los Angeles – இன் சபையினுடைய ஞாயிற்றுக்கிழமைக் கூட்டங்கள் பின்வருமாறு:
10.30 AM – Sunday School lesson in the Watch Tower
1.30 PM – The Watch Tower Study Article
3.00 PM – Lecture
7.00 PM – Berean Study sixth volume
சிலர் இன்னும் அதிகமாய்க் கூட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்; சிலர் நாம் மிக அதிகமாய் இப்போது கூட்டங்களைப் பெற்றிருக்கின்றோம் என்று கூறுகின்றனர்; சிலர் ஒரு தூதிற்குப் பதிலாக நாம் இரண்டு தேவதூதுகளைப் பெற்றிருக்க வேண்டுமென்று கூறுகின்றனர். இது விஷயத்தில் சபையாருடைய சிறந்த நலனுக்கடுத்தவைகள் தொடர்பான உங்களது கருத்தென்ன?
பதில் – ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு சபையாரும் தங்களுக்கெனத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் மிக அதிகமாய்க் கூட்டங்களைக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது. இந்த ஒரு சந்தர்ப்பத்தில், ஏற்கெனவே நடத்தப்பட்டு வரும் கூட்டங்களின் எண்ணிக்கையினைக் கூட்டிடுவதற்கு நாம் விருப்பங்கொள்ளக்கூடாது. ஒருவேளை நான் அவ்விடத்தில் காணப்பட்டு, இவ்விஷயம் தொடர்பாக வாக்களித்திருப்பேனாகில் (vote), ஐந்திற்குப் பதிலாக மூன்று கூட்டங்களைப் பெற்றிருப்பதற்கு நான் விருப்பம்கொண்டிருப்பேன். உங்களால் முடியுமானால் நான்கைக் கொண்டிருக்கலாம். ஒவ்வொருவருக்கும் வேறுபட்டுக் காணப்படும் என்றாலும், கர்த்தருடைய ஜனங்களில் அநேகர் சத்தியத்தில் இல்லாத தங்கள் கணவன், மனைவி அல்லது பிள்ளைகளுக்கான பூலோகக் கடமைகளைப் பெற்றிருக்கின்றனர் மற்றும் இளைப்பாறுதலுக்கும், மாற்றத்திற்கும் வேண்டி பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதான இந்த ஒரு நாளில் கர்த்தருடைய ஜனங்கள், சத்தியத்தில் இல்லாத தங்கள் கணவன், மனைவி அல்லது குழந்தைகளுக்கு எதையாகிலும் செய்யக் கடமைப்பட்டவர்களாய்க் காணப்படுவார்கள்.
சத்தியத்தில் இல்லாதவராகவும், ஞாயிற்றுக்கிழமை மாத்திரமே இல்லத்தில் காணப்படுபவராகவும் காணப்படும் கணவன், தனது மனைவி அந்த நாளில் மிகவும் வெளியே ஆக்கிரமிக்கப்பட்டுக் காணப்படுவதைக் காண்கையில், அவள் அவரைப் புறக்கணிக்கின்றது போன்று அவருக்குத் தோன்றிடும் மற்றும் நீங்களும் இதைப் போன்ற சந்தர்ப்பங்களில், இதே பார்வையினைக் கொண்டிருப்பீர்கள்; மேலும் சத்தியத்தில் காணப்படாத மனைவி ஞாயிற்றுக்கிழமைகளிலும்கூடத் தனது கணவனை அவ்வளவுக்குக் காணமுடியாத அளவுக்கு, அவர் நாள் முழுவதும் கூட்டங்களிலேயே காணப்படுவாரெனில் அவள், அவருடனான எந்த ஐக்கியத்தினையும் பெற்றிருக்க முடியாது. நிச்சயமாகவே இது சரியாய் இருக்காது. நம்முடைய கணவன்மார்களிடத்தில் அல்லது நம்முடைய மனைவிமார்களிடத்தில் நமக்குப் பூமிக்குரிய வகையான பூலோகக் கடமைகள் காணப்படுகின்றது மற்றும் இவைகளை நாம் கவனியாமல் காணப்படக்கூடாது.
ஒருவேளை சபையார் ஞாயிற்றுக்கிழமைகளில் மிக அதிகமான எண்ணிக்கையில் கூட்டங்களைப் பெற்றிருப்பார்களானால், சில சமயங்களில் ஒரு நபர் எல்லாக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளாமல் காணப்படுவது ஞானமான காரியமாய் இருக்கும். தன்னால் தனது முழுநாளினையும் கர்த்தருக்கென்று கொடுக்க முடியும் நபர் விஷயத்திலும்கூடத் தனது நேரத்தினை, தான் எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்ற காரியமானது, அந்நபரின் கரங்களிலேயே காணப்படுகின்றது. அவன் தனது நாளில் ஒரு பகுதியைத் தன்னார்வ ஊழியத்திற்கென்றும் மற்றும் இன்னொரு பகுதியை வேறொரு வேலையினுடைய ஒரு பாகத்திற்கென்றும் மற்றும் கொஞ்சம் பகுதியைப் பெரோயா ஆராய்ச்சிக்கென்றும், கொஞ்சம் பகுதியைப் பிரசங்கிப்பதற்கென்றும் செலவிட விரும்புகின்றவனாய்க் காணப்படுவான். இது விஷயத்தில் அவன் தனது சொந்தப் பகுத்தறிதலை முடிந்தமட்டும் பயன்படுத்திட வேண்டும். ஒருவேளை சபையார் நான்கு கூட்டங்களுக்கு அதிகமான கூட்டங்களைப் பெற்றிருப்பார்களானால், அது ஞானமாய்க் காணப்படாது மற்றும் ஒருவேளை இந்தக் கூட்டங்கள் அனைத்திற்கும், அனைவரும் வரமுடியும் என்றாலும், “உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக எனும் அப்போஸ்தலனின் வார்த்தைகளை நாம் நினைவில் கொண்டிருக்க வேண்டும். பக்திவிருத்திக்கு ஏதுவான கூட்டங்கள் விஷயத்திலும், மற்றக் காரியங்கள் விஷயத்திலும் மிதமாய்க் காணப்பட வேண்டும். நம்முடைய பலம் எல்லைக்குட்பட்டது என்று நாம் நினைவில் கொண்டிட வேண்டும்; மற்றும் நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கு – நம்முடைய கணவன், நம்முடைய மனைவி, நம்முடைய பிள்ளை, நம்முடைய அயலார்கள், நம்முடைய உறவினர்களுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டியவர்களாய் இருக்கின்றோம். அனைவருக்குமென்று நாம் சில கடமைகளைப் பெற்றவர்களாகக் காணப்படுவோம்; அதிலும் பிரதானமாய் விசுவாச வீட்டாருக்கும் மற்றும் நம்முடைய குடும்பத்தாருக்கும் என்று கடமைகளைச் செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றோம்; ஏனெனில் இவர்களே முதலாவதாகக் காணப்படுகின்றனர்.