Q238:1
கேள்வி (1910)-1- சபையில் நடக்கும் தேர்ந்தெடுத்தலில், அர்ப்பணம் பண்ணியுள்ள விசுவாசிகள் மாத்திரமே வாக்குகள் (vote) செலுத்த வேண்டும் என்று எப்போதும் புரிந்துகொள்ளப்பட வேண்டுமா அல்லது நீதிமானாக்கப்பட்ட விசுவாசிகளும்கூட வாக்குகள் (vote ) செலுத்தலாமா?
பதில் – கொஞ்சம் முன்புதான் இதைக் குறித்து நாம் பேசினோம். வாக்குகள் (vote) அளிக்கப்படுவதற்கு முன்பு, அர்ப்பணம் பண்ணியுள்ளவர்கள் மாத்திரமே, சபை தொடர்பான எக்கேள்விகளுக்கும் அனைத்துத் தருணங்களிலும் வாக்குகள் (vote) செலுத்த உரிமை உடையவர்களாய் இருக்கின்றனர் என்பது தெளிவாய் அறிவிக்கப்பட வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். ஏனெனில் மற்றவர்கள் எவரும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அங்கங்கள் அல்ல. ஒருவேளை எவ்விடத்தில் கூட்டம் நடத்தலாம் என்பது தொடர்பான சில கேள்விகளைச் சபையார் கேட்க விரும்புவது என்பது வேறுபட்ட காரியமாகும்; இவ்விஷயம் தொடர்பாகக் கேள்விக் கேட்கப்படும்போது, நீங்கள்: “கூட்டத்திற்கான இந்த இடத்தை மாற்றி, வேறொரு இடத்தில் கூட்டத்தை நடத்தலாமென நாம் எண்ணுகின்றோம். மேலும் நாம் அர்ப்பணம் பண்ணியுள்ளவர்களிடம் மாத்திரம் இல்லாமல், அனைத்து நண்பர்களிடமும் கேட்கின்றோம்; ஏனெனில் இவ்விஷயத்தில் அனைவரும் விருப்பம் கொண்டுள்ளனர்; நேரம் மற்றும் இடம் குறித்த தங்கள் கருத்தைத் தெரிவிக்கும்படி முழு விசுவாச வீட்டாரிடமும் கேட்டுக்கொள்கின்றோம் என்று கூறலாம். ஆனால் சபைக்கான ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயம் அல்லது இவ்விஷயம் தொடர்பான எதுவும் அர்ப்பணம் பண்ணினவர்களுக்கு மாத்திரமே உரியதாகும்.