Q520:4
கேள்வி (1916 – Z.5939)-4- வாட்ச் டவர் பைபிள் மற்றும் டிராக்ட் சொசைட்டியானது (Watch Tower Bible and Tract Society) அறுவடை வேலைக்காக ஊழியக்காரர்களை அல்லது பிரதிநிதிகளை எப்போதேனும் ஏற்படுத்தினதுண்டா?
பதில் – ஆம் ஏற்படுத்தினதுண்டு. அனைத்துப் பயண ஊழியக்காரர்களுமே ஊழியத்தின் அந்த விசேஷித்த பணிக்காக இவ்விதம் ஏற்படுத்தப்படுகின்றனர், நியமிக்கப்படுகின்றனர் அல்லது தெரிந்தெடுக்கப்படுகின்றனர். சடங்கு என்பது ஏற்படுத்துதலாய் இராமல், மாறாக நியமித்தலும், கட்டளையிடுதலுந்தான் ஏற்படுத்துதலாய் இருக்கின்றது. சொசைட்டியானது, அதனுடைய பிரதிநிதிகளாகவும், அதேவேளையில் கர்த்தருடைய மற்றும் அவரது வார்த்தைகளுடைய பிரதிநிதிகளாகவும் காணப்படும் பயண ஊழியர்களை ஏற்படுத்துகின்றது, அங்கீகரிக்கின்றது, அவர்கள் செல்லும் இடங்களைக் குறித்துக் கட்டளையிடுகின்றது.