Q175:1
கேள்வி (1910)-1- வாட்ச் டவர் வெளியீட்டிலிருந்து நாங்கள் பெற்றுக் கொண்ட கருத்தின் அடிப்படையில் உடன்படிக்கைகளைக்குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டபோது, மத்தியஸ்தர் குறித்துப் பார்க்கையில், குறிப்பிட்ட சில விஷயங்களானது வகுப்பில் கருத்துப்பிரிவினையைக் கொண்டுவருவதாகத் இருக்கின்றது. எதன் காரணமாகப் கருத்துப்பிரிவினைகள் வந்ததோ அதைத் தொடர்வதா அல்லது அந்த ஆராய்ச்சியினை விட்டுவிட்டு, வேறு எதையாகிலும் ஆராய்வதா, இதில் எது ஞானமானதாய் இருக்குமென நீங்கள் எண்ணுகின்றீர்கள்?
பதில் – கலந்தாய்விற்கு உடன்படிக்கைகள் எனும் தலைப்பு மிகவும் பொருத்தமானது என்று நான் எண்ணுகின்றேன் மற்றும் சபையில் வழக்கமாய்க் கலந்துகொள்ளும் சகோதரன் ஒருவர் கலந்தாய்வின்போது காணப்பட்டு, சில வேறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டிருப்பாரெனில், அவர் தான் சொல்ல விரும்புபவற்றைத் தொடர்ச்சியாய்த் தெரிவித்துக்கொண்டிருப்பதற்குரிய கண்ணோட்டத்தில் இல்லாமல் மற்றும் ஒவ்வொரு கலந்தாய்விலும் வகுப்பைத் தொடர்ச்சியாய்க் குறுக்கிடுவதற்குரிய கண்ணோட்டத்தில் இல்லாமல், மாறாக அதைத் தெரிவித்திடுவதற்கு வாய்ப்பளிக்கப்படுவது மிகவும் சரியே என்று நான் எண்ணுகின்றேன். ஒருவேளை அவர் எடுத்துக் கூறிடுவதற்கு ஏதேனும் இருக்கிறதென்றால் மற்றும் அதைச் சுவாரசியமான விதத்தில் அவரால் எடுத்துக்கூறிட முடியுமானால், கூறிடுவதற்கு அவரை விட்டுவிடுங்கள், ஏனெனில் அவருக்கு அந்த உரிமை இருக்கின்றது; சபையாரில் ஓர் அங்கத்தினனாக, அவர் பேசிடுவதற்கான உரிமையினை உடையவராவார் ஆனால் ஒருவேளை சபையாரில் பெரும்பான்மையானவர்கள், அவர் முன்வைத்திட்டவைகளுக்கு ஆதரவாய் இல்லையெனில் மற்றும் அவர் அதைத் தொடர்ந்து முன்வைப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லையெனில், அச்சகோதரனிடம், “சகோதரனே, நாங்கள் உங்களுக்கு ஒரு நல்வாய்ப்பினைக் கொடுத்தோம் மற்றும் நீங்கள் சொல்ல விரும்பியவற்றைச் சபையாரும் கேட்டார்கள் மற்றும் அதைத் தொடர்ந்து சிந்தித்திடுவதற்குச் சபையார் விரும்பவில்லை. ஆகையால் தயவாய் இனிமேல் நீங்கள் அத்தலைப்பின்பேரிலான எங்களது ஆராய்ச்சியினைக் குறுக்கிட வேண்டாம் என்று கூறி, அச்சகோதரன் தன் வாதத்தினை நிறுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன். மேலும் சபையாருடைய விருப்பத்திற்கு இசைவாக, அத்தலைப்புப் பற்றின கலந்தாய்வு தொடரப்படலாம். ஒருவேளை சபையார் யாவரும், அத்தலைப்பின் பேரிலான கலந்தாய்வை நிறுத்திட விரும்புவார்களானால், ஒவ்வொரு விஷயத்திலும் சபையாரிடமே தீர்மானிப்பதற்கான உரிமை காணப்படுகின்றது என்ற புரிந்துகொள்ளுதலின் காரணமாக, சபையாருடைய அறிவுறுத்தலின்படி செய்வதைத் தவிர வேறு எதையும் நான் அறியேன்.