Q478:2
கேள்வி (1914)-2- எங்கள் சபையாரில் பெரும்பான்மையானவர்கள், எங்களது உதவிக்காரர்களில் சிலர் அவ்வப்போது ஜெபக்கூட்டங்களை நடத்துவதற்கு விரும்புகின்றனர்; ஆனால் உதவிக்காரர்கள் கூட்டங்களைத் தலைமைத்தாங்கி நடத்துதல் என்பது வேதவாக்கியங்களுக்குப் புறம்பானது என்றும், வேறுயாருமல்ல, மூப்பர்களே தலைமைத் தாங்கி நடத்திட வேண்டும் என்றும், எங்களது மூப்பர்களில் சிலர் கூறுகின்றனர். அவர்கள் சொல்வது சரிதானா?
பதில் – வேதாகம அதிகாரத்தினிடத்திற்கே திரும்பிச்சென்று பாருங்கள். வேதாகமத்தில் ஆதிசபையினுடைய உதவிக்காரர்களில் சிலர் நல்ல கிறிஸ்தவ வேலைகளைப் புரிந்ததாக நாம் பார்க்கின்றோம்; உதவிக்காரன் ஸ்தேவான் மற்றும் உதவிக்காரன் பிலிப்பு மற்றும் இன்னும் மற்றவர்களை இப்படியாகக் காண்கின்றோம். இவர்கள் அப்போஸ்தலர்கள் அல்ல.
ஆகையால் வேறுயாருமல்ல, மூப்பர் மாத்திரமே கூட்டத்தினைத் தலைமைத் தாங்கி நடத்திட வேண்டுமென்று கூறினதில், மூப்பர்கள் அல்லது சபையார் தவறிழைத்துள்ளதாக எங்களது கணிப்பில் காணப்படுகின்றனர் என்று நாம் சொல்லிடுவோம். இச்சபையார் முன்வைத்திட்ட யோசனையானது மிகவும் நல்லதொரு திட்டம் என்று நாம் கருதுகின்றோம் மற்றும் சபையாரே இதைத் தெரிவித்துள்ளனர் என்ற காரியமானது இதனை சரியானதாகவும் மற்றும் தகுதியானதாகவும் ஆக்கிற்று. உதவிக்காரர்கள் ஓர் ஊழியத்திற்கு என்று தெரிந்தெடுக்கப்படுகின்றனர் மற்றும் “உதவிக்காரருடைய ஊழியத்தைச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையை அடைவார்கள் என்று அப்போஸ்தலன் கூறியுள்ளார். எதில் நல்ல நிலை? வேலை தொடர்புடைய விஷயத்தில் சுயாதீனமாகும். அவர்கள் ஒரு விசேஷித்த வகை வேலைக்கு என்று தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; ஆனால் ஒருவேளை அவர்கள் மற்றத் தாலந்துகளைப் பெற்றிருப்பதை வெளிப்படுத்துவார்களானால், அவைகளைப் பயன்படுத்தும்படிக்கு அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் மற்றும் சபையார் படிப்படியாக அவர்களை அறியவர வேண்டும் மற்றும் சமயம் வாய்க்கையில் அவர்களை மூப்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லையெனில் சபையாரும் அவர்களைக்குறித்து ஒருபோதும் அறிந்துகொள்ள மாட்டார்கள்.
சபையார் தாங்கள் செய்ய வேண்டிய சரியான காரியத்தையே தெரிவித்துள்ளனர் மற்றும் அவர்கள் இன்னும் ஒருபடி மேல்சென்று, பொருத்தமானது என்று காண்கிறதற்கு ஏற்ப, கூட்டத்தினை நடத்திடுவதற்கு அல்லது ஒழுங்குப்படுத்திடுவதற்கு உதவிக்காரர் அடிக்கடி கேட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறிடலாம் மற்றும் இந்த இளையச் சகோதரர்கள் தங்களது தாலந்துகள் மற்றும் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்துவதில் அவர்களுக்கு உதவி புரிவதற்கு மூப்பர்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்; ஒருவேளை மூப்பர்கள் இவர்களை மூப்பராகிடுவதற்கான தாலந்துடையவர்களாய்க் காண்பார்களானால் தேர்ந்தெடுத்தலின் போது, “நான் இந்தச் சகோதரனுக்கு மற்றும் அந்தச் சகோதரனுக்கு முன்மொழிகின்றேன்; இவர் மிகவும் உண்மையுள்ள உதவிக்காரராக இருந்திருக்கின்றார் மற்றும் இவரை நான் இப்பொழுது மூப்பராக முன்மொழிகின்றேன் என்று கூறிடுவது முற்றிலும் சரியான காரியமாய் இருக்கும். இப்படியாக மூப்பர் ஒருவர் கூறிடுவது என்பது மிகவும் அருமையான காரியமாய் இருக்கும். தனது இளையச் சகோதரன் முன்னுக்கு வருவதற்கென இவர் உதவி செய்திட வேண்டியவராய் இருக்கின்றார்.
எப்போதுமே நிறையவேலை இருக்கின்றது. மிக அதிகமாய் மூப்பர்களைப் பெற்றிருப்பதில் அச்சம் அடையாதீர்கள். “அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு. களம் இறங்குங்கள் மற்றும் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள் மற்றும் நீங்கள் முயற்சித்துக்கொண்டிருப்பதைத் தேவன் பார்க்கையில் அவர் உங்களுக்கு மற்றக் கதவுகளைத் திறந்தருளுவார்.