Q524:4
கேள்வி. (1913)- 4 – பஸ்கா நிழலுக்கும், வருடாந்தர பாவநிவாரண நாளுக்கும் இடையிலான தொடர்பு என்ன? பஸ்காவானது கொடுக்கப்பட்ட மீட்கும்பொருளையும், பாவநிவாரண நாளானது, மீட்கும்பொருள் பணியின் விளைவான ஜனங்களுடைய சுத்திகரிக்கப்படுதலையும் அடையாளப்படுத்துகின்றதா?
பதில். இந்த இரண்டுமே தொடர்பற்றவை என்றே நான் சொல்லுவேன். தேவன் இவை இரண்டையும் வருஷத்தினுடைய எதிர்முனைகளில், ஒன்றிலிருந்து, இன்னொன்று தொலைவில் இடம்பெறப் பண்ணியுள்ளார். ஒன்று ஒரு காரியத்தினுடைய நிழலாகவும், மற்றொன்று மற்றொரு காரியத்தினுடைய நிழலாகவும் காணப்படுகின்றது.
“மீட்கும்பொருள்” எனும் வார்த்தையானது இரண்டிலும் காண்பிக்கப்படவில்லை. மீட்கும்பொருளுக்கான நிழல் இரண்டிலும் காணப்படுவதில்லை. “மீட்கும்பொருள்” எனும் வார்த்தை (அ) கருத்தானது வேறு இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.