Q237:2
கேள்வி (1910)-2- தேர்ந்தெடுத்தல் நடைபெறும்போது, தேர்ந்தெடுத்தலை நடத்தித்தருமாறு எவரையேனும் கூட்டத்தலைவராக வைக்க ஒரு மூப்பர் விரும்பினார் என்றால், இந்நோக்கத்திற்காக ஒரு சகோதரியை அந்த ஸ்தானத்தில் வைப்பது முறையாக இருக்குமா?
பதில் – சபையில் சில தவறான புரிந்துகொள்ளுதல் காணப்பட்டு, மேலும் அங்குச் சகோதரன் அல்லது சகோதரர்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாமல் இருக்கும் ஒருநிலை காணப்பட்டாலொழிய, மற்றபடி ஒரு சகோதரியை நியமனம் செய்யமாட்டேன் என்று நான் எண்ணுகின்றேன். இப்படியான மிக விநோதமான சூழ்நிலைகள் காணப்படும் பட்சத்தில் மாத்திரமே, தேர்ந்தேடுத்தல் கூட்டத்தில் ஒரு சகோதரியைக் கூட்டத்தலைவராகச் (chairman) செயல்படக் கேட்பதற்கு நான் இணங்குவேன். இப்படிப்பட்டதான ஒரு சூழ்நிலை ஒருபோதும் வராது என்று நான் கூறமாட்டேன். ஆயினும் அது அபூர்வமாய்ச் சம்பவிக்கும் சம்பவமாகத்தான் இருக்கும் என நான் எண்ணுகின்றேன்.