Q148:1
கேள்வி (1909)-1- வாக்குறுதி (vow), உடன்படிக்கை முதலானவைகளைக் காரணம் காட்டிச் சபையாருடன் கூடுகைகளில் கலந்துகொள்ளாமல் இருப்பவர்களுடன் ஐக்கியத்தினைத் தொடர்ந்து வைத்துக்கொண்டும்; மற்றும் சத்தியத்தினை எதிர்ப்பவர்களிடத்தில் தங்களுக்கு அனுதாபம் உள்ளது என்று ஒப்புக்கொண்டும் மற்றும் சத்தியத்தினுடைய உபதேச ரீதியிலான அனைத்து விஷயங்களிலும் இசைவாய் இருப்பது போன்றும் தோற்றமளிப்பவர்களிடத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
பதில் – ரோமர் 16:17-ஆம் வசனத்தில்: “சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சுருக்கமாய்க் கூறியுள்ளதுபோன்றே, அத்தகையவர்களிடத்தில் நாம் நடந்துகொள்ள வேண்டும் என்று நான் எண்ணுவேன். அர்த்தமென்னவெனில்… அவர்கள் வேறே ஆவியினை வெளிப்படுத்துகையில், நாம் எப்போதும் கொண்டிருக்கும் அதே இருதயப்பூர்வமான ஐக்கியத்துடன் அவர்களை நடத்திடக்கூடாது என்பதாகும். அவர்கள்பால் கோபத்தின் ஆவியினை வெளிப்படுத்துவதோ அல்லது அவர்களுக்கு ஏதேனும் தீங்கு செய்வதோ அல்லது அவர்கள் யாரைக்குறித்தேனும் எவ்விதமான தீமை பேசுவதோ சரியாய் இராது; அவர்களுடைய நலனுக்காகவும், நம்முடைய நலனுக்காகவும் மற்றும் மற்றவர்களுடைய நலனுக்காகவும் வேண்டி, அவர்களது நடக்கைகளை நாம் ஆதரிக்காமல் இருப்பது என்பது நம் சார்பிலான சரியான நடக்கையாய் இருக்கும். அவர்களை விட்டு விலகிடுங்கள் மற்றும் சத்தியத்தினுடைய ஆவியிலும், ஐக்கியத்திலும் காணப்படுபவர்களின் தோழமையையே விரும்பிடுங்கள்.
இக்கேள்வியில் “வாக்குறுதி எனும் வார்த்தைக் குறிப்பிடப்பட்டிருக்கின்றபடியால், ஒருவன் அல்லது ஒருவள் வாக்குறுதியினை எடுத்துக்கொள்ளாத காரணத்தினால், ஐக்கியத்தில் யாரையாவது பிரித்துப்பார்ப்பது சரியானதாகவும், முறையானதாகவும் இருக்காது என்பது என்னுடைய அபிப்பிராயமாய் இருக்கின்றது என்று நான் சொல்லுகின்றேன்; வாக்குறுதி என்பது ஒரு பிரமாணமல்ல அது ஒரு சிலாக்கியமாகும். ஒருவேளை நாம் வாக்குறுதியினை எடுத்துக்கொண்டு, அதனால் ஆசீர்வாதம் அடைவோமானால், தேவனுக்கு நன்றி சொல்லுவோமாக. ஒருவேளை அவர்கள் இதைச் செய்ய தவறி, ஆசீர்வாதத்தினை இழந்துபோவார்களானால், அப்பொழுது அவர்களே அவ்விழப்பினால் சிரமப்படுவார்கள். ஆனால் ஒருவேளை அந்நபர் சபையில் மூப்பராகவோ அல்லது போதகராகவோ இருப்பாரானால், அது கொஞ்சம் வித்தியாசமான காரியமாகும். எந்த ஒரு சபையிலும் மூப்பராக இருப்பவர் அல்லது வழிநடத்துபவராகப் பார்க்கப்படும் ஒருவர் வாக்குறுதியினை எடுத்துக்கொள்ள எதிர்ப்பார்க்கப்படுகின்றார் அல்லது தான் ஏன் அதை எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் கூறிடுவதற்கு நியாயமாய் எதிர்ப்பார்க்கப்படுவார் இல்லையேல் இது வாக்குறுதிக்கு முரணான ஏதோ ஒன்று அந்த வழிநடத்தும் சகோதரனின் ஜீவியத்திலோ அல்லது நடத்தையிலோ இருக்கின்றது என்று அச்சபையார் எண்ணிடுவதற்குக் காரணமாகுகின்றது. என்னைப் பொறுத்தமட்டில் வாக்குறுதிக்கு முரண்பாடான எதையாகிலும் தனது மனதிலோ அல்லது நடத்தையிலோ கொண்டிருக்கும் எந்த ஒரு மூப்பரும் அல்லது சகோதரனும் சபையாரின் பிரதிநிதியாய்க் காணப்படுவதற்குப் பொருத்தமானவரல்ல. பகுத்தறியும் மனம் கொண்ட எந்த ஒரு சகோதரனும், வாக்குறுதிக்கு எதிராக என்ன மறுப்புக் கூறிட முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு கட்டாயமான கடமையல்ல என்பதை நாங்கள் ஒத்துக்கொள்கின்றோம்; ஆனாலும் மூப்பர்களாய் இருப்பவர்களிடத்தில் நாம் மிக அதிகமாய் எதிர்ப்பார்க்கின்றோம் மற்றும் நம் எதிர்ப்பார்ப்பில் தவறில்லை என்பது, அவர்களிடத்தில் பெருமளவில் முன்மாதிரியான நடக்கை இருப்பதைக் காண்கையில் நிரூபணமுமாகின்றது. ஒரு சபையின் பிரதிநிதியாகவோ அல்லது வழிநடத்துபவராகவோ காணப்படுபவர், அப்போஸ்தலன் கூறியுள்ள பிரகாரம் சராசரிக்கு மேலாகக் காணப்பட வேண்டும் மற்றும் சராசரி நிலைக்கு மேலாகக் காணப்படும் ஒருவர் வாக்குறுதிக்கு எதிராக என்ன மறுப்பினைக் கண்டுபிடிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை யாரேனும் எதையாகிலும் கண்டுபிடித்தால், அவர் அதை எனக்குக் காண்பித்துத்தர நான் விரும்புவேன்.