Q242:1
கேள்வி (1910)-1- வாக்களிக்க (vote) தவறுகிறவர்கள் குறித்து ஏதேனும் பதிவுகள் நாம் பதித்து வைத்திருக்க வேண்டுமா?
பதில் – வாக்குகள் (vote) அளிக்கப்படுவதற்கு முன்னதாகவே, கூடியிருக்கும் ஒவ்வொரு சகோதரனும், சகோதரியும் தங்களுக்குப் பொறுப்பு இருக்கின்றது என்று உணரத்தக்கதாக அவர்களைத் தெளிவுப்படுத்துவது என்னுடைய
வழக்கமாகும்; அதென்னவெனில்: முன்மொழியப்பட்டிருப்பவருக்கு (candidate) எதிராக அல்லது ஆதரவாக வாக்கு (vote) விஷயத்தில் செயல்படுவதற்குரிய பொறுப்புத் தங்களுக்கு இருக்கின்றது என்று அவர்கள் உணர வேண்டும்; மேலும்
வாக்குகள் (vote) செலுத்தத்தக்கதாக ஒருவருக்கு போதுமான அறிவு இருக்கிறதென்றால் அல்லது அவர் அர்ப்பணம் பண்ணினவராக இருந்து அச்சபையாரோடு தொடர்ந்து கூடுகைகளில் கலந்துகொள்ள நோக்கம் கொண்டிருந்தால், அவர்
வாக்குச் (vote) செலுத்துவதற்கான பொறுப்பை உடையவராய் இருக்கின்றார் என்று உணர வேண்டும்; மேலும் அவர் வாக்குச் செலுத்துவாரா அல்லது இல்லையா என்பது விருப்பத்திற்கு விடப்பட்ட காரியமாக இல்லாமல், மாறாக வாக்குச்
செலுத்துவது அவருக்குரிய கடமையாகும் என்று உணர வேண்டும். இக்காரியங்கள் வாக்குகள் (vote) செலுத்தப்படுவதற்கு முன்னதாகவே வலியுறுத்தப்பட்டால், அனைத்து அன்புக்குரிய நண்பர்களும் பொறுப்பை உணர்ந்துகொள்ள முடியும்.
வெகுசிலரே பின்வாங்குவதற்கு முயற்சிப்பார்கள். இது முன்னதாகவே மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.