Q515:1
கேள்வி (1915 – Z.5809)-1- பிரசங்கியாளர்களை அனுப்பிடுவதற்குச் சொசைட்டிக்கு எங்கிருந்து அதிகாரம் கிடைத்தது?
பதில் – பிரசங்கிக்கச் செல்வதற்கென்று பரிசுத்த ஆவியினைப் பெற்றுக்கொண்டுள்ள தம்முடைய ஜனங்கள் அனைவரையும் அங்கீகரிக்கும் கர்த்தரிடமிருந்து, சொசைட்டியானது அதன் அதிகாரத்தினை முதலாவதாக பெற்றுக்கொள்கின்றது. இரண்டாவதாக புத்தகங்கள், பிரதிகள், வரைப்படங்கள் முதலானவைகளை அச்சிடடுவதன் வாயிலாகவும் மற்றும் வாயின் வார்த்தையினாலும், அச்சிடப்பட்ட பக்கங்களினாலும், பிரசங்கிக்கும்படிக்குத் தனது பிரதிநிதிகளை அனுப்புவதன் வாயிலாகவும் கர்த்தருக்கான ஊழியத்தில் மதரீதியிலான வேலை புரிவதற்கான அலுவல் அமைப்பாய்ச் சொசைட்டி காணப்படுகின்றது. இதுவே அதன் ஒரே அலுவலாகும். அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையார் கிறிஸ்தவ சமயம் பரப்பும் ஊழியத்தினைச் செய்யும்படிக்கு விசேஷமாய்ப் பவுலையும், பர்னபாவையும் தேர்ந்தெடுத்து, சபையாருக்குரிய பிரதிநிதிகளாக இருக்கும்படிக்கு இவர்களுக்கு வாக்களித்தது (vote) போன்ற அதேவிதத்தில்தான் – சொசைட்டியானது செயல்படுத்துகின்றதாய் இருக்கின்றது (அப்போஸ்தலர் 13:2,3).
பவுலும், பர்னபாவும் புறப்பட்டபோது அவர்கள் “நாங்கள் எங்கள் நாமத்தில் பிரசங்கிக்கின்றோம் என்று கூறிடவில்லை. அவர்கள் கர்த்தருடைய நாமத்தில் புறப்பட்டுச் சென்று பிரசங்கித்திடுவதற்கான உரிமையினையுடையவர்களாய் இருந்தனர் மற்றும் இதோடுகூட, அந்தியோகியா சபையாரிடமிருந்து பண ஆதரவுப் பெற்றிருந்தனர்; அதாவது இன்று நம்முடைய பிரதிநிதிகளுக்கு சொசைட்டியினுடைய ஆதரவுக் காணப்படுவது போன்றதாகும். அவர்கள் ஓரிடத்திற்குச் செல்கையில் அவர்கள்: “நாங்கள் சொசைட்டியின் பிரதிநிதிகளெனச் செயல்படுகின்றோம் என்பதற்கான கடிதம் இதோ உள்ளது என்று சொல்லிடலாம். ஆகையால் அவர்கள் கிறிஸ்துவின் நாமத்தில் மாத்திரமல்லாமல், சுவிசேஷவேலையினைப் புரிந்துகொண்டிருப்பதாக அறியப்பட்டிருக்கும் இந்தச் சொசைட்டியின் பிரதிநிதிகளெனச் செல்கின்றவர்களாய்க் காணப்படுகின்றனர்.