Q527:1
கேள்வி (1916)-1- செய்யும்படிக்கு மேய்ப்பரால் கொடுக்கப்பட்டிருக்கும் வேலையினையும் மற்றும் தொகுதி விநியோகிக்கும் வேலையினையும் எடுத்துக்கொள்ளும்படிக்கு, ஒரு சகோதரான் மற்றும் சகோதரி, Eureka Drama மற்றும் தொகுதி விநியோகிக்கும் வேலையை விட்டுவிட்டு வர நீங்கள் அறிவுரை வழங்குவீர்களா?
பதில் – நாம் இப்படிச் செய்திடும்படிக்குச் சகோதரன் ஒருவருக்கும் அறிவுரை வழங்கிடமாட்டோம். ஏனெனில் மேய்ப்பரால் கொடுக்கப்பட்டுள்ள இக்குறிப்பிட்ட வேலையில் சகோதரன் ஒருவன் செய்திடுவதற்கு எதுவும் பெற்றிருப்பதில்லை. கேள்விக் கேட்டுள்ள சகோதரன் இக்காரியத்தைத் தவறான கண்ணோட்டத்தில் புரிந்திருக்கின்றார் என்பதில் உறுதியே. மேய்ப்பரால் கொடுக்கப்பட்டுள்ள இக்குறிப்பிட்ட வேலை, சகோதரிகளுக்கானதாகும். ஒரு காரணம் சகோதரர்களைக் காட்டிலும் சகோதரிகளுக்குப் பகல் பொழுதில் அதிக நேரம் இருக்கின்றது; சகோதரர்கள் பொதுவாகப் பகற்பொழுதில் தொழிலில் ஈடுபட்டுக் காணப்படுவார்கள்; மற்றும் இரண்டாம் காரணம் சகோதரர்களைப் பார்க்கிலும் அநேக சகோதரிகள் ஜனங்களை அணுகும் விஷயத்தில் அதிகளவு சாமார்த்தியம் உடையவர்களாய் இருக்கின்றனர். சகோதரர்களைப்பார்க்கிலும் அனைத்துச் சகோதரிகளும் அதிக சாமார்த்தியம் உடையவர்களாய் இருக்கின்றனர் என்றல்ல. மாறாக அவர்கள் இவ்வேலையில் தங்கள் பங்கினைச் செய்திடுவதற்கு இது சிறந்த வாய்ப்பாய் இருக்கின்றது மற்றும் இப்படியாகத் தெய்வீகத் திட்டம் குறித்த விளக்கவுரைகளைக் கொடுப்பதற்கும் மற்றும் பிற்பாடு முதலாம் தொகுதியின் ஆராய்ச்சி வகுப்புகளை நடத்திடுவதற்கும் ஏதுவாய்ச் சகோதரர்களுக்குரிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றதாய் இருக்கின்றது. இந்த வேலையினுடைய துவக்கமானது முடிவாக இருக்கின்றது என்று எவ்விதத்திலும் நாம் எண்ணிவிடக்கூடாது. துவக்கம் என்பது உண்மையில் ஆரம்பமாக இருக்கின்றது மற்றும் அது ஆரம்பம் மாத்திரமேயாகும். Drama, பொதுச் சொற்பொழிவுகள் மற்றும் தொகுதி விநியோகிக்கும் ஊழியங்கள் வாயிலாக அவ்வப்போது பெறப்பட்டதான பெயர்ப் பட்டியல்களை புரூக்கிளினிலிருந்து பெற்றுக்கொள்கையில் அந்தப் பட்டியல்களை வைத்துத் துவங்கிடுங்கள் – இதுதான் துவக்கம் – ஆனால் என்னுடைய கருத்து என்னவெனில் . . . அடுத்தச் சில வருடங்களுக்குள்ளாக நடைபெறும் என்று நாம் எதிர்ப்பார்க்கின்றதான அந்த மாபெரும் வேலையைக் கர்த்தர் செய்யப்போகிறார் என்றால், யோர்தானின் இந்த அடித்தலானது உலக முழுவதிலும் பெரும் ஆர்வத்தைத் தூண்டிடும் மற்றும் இதன் விளைவாகக் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகத் திரளாய் இருக்கும் மற்றும் அதிக எண்ணிக்கையிலான பெயர்களுள்ள பட்டியல் கிடைக்கப்பெறும் மற்றும் இதனிமித்தம் இவ்வேலைப்பாகமானது விரிவடைந்து தொடரும் மற்றும் இதனால் காலம் செல்லச் செல்ல தெய்வீகத் திட்டம் குறித்த விளக்கவுரைகள் கொடுப்பதற்கும், முதலாம் தொகுதி ஆராய்ச்சி வகுப்புகளுக்குமான வாய்ப்புகளானது பன்மடங்காகிடும். இது தேவனுடைய மாபெரும் திட்டத்தின் ஒருபாகம் என்று நான் புரிந்துகொள்கின்றேன். சகோதரி தொகுதி விநியோகிக்கும் வேலையில் தன்னைக் கர்த்தர் எவ்வளவு காலம் ஆசீர்வதிக்கச் சித்தமாயிருக்கின்றாரோ அவ்வளவு காலம் அதிலேயே தொடர்வாளாக என்பது என்னுடைய ஆலோசனையாகும் மற்றும் இது சகோதரனும் Eureka Drama வேலையில் தொடர வேண்டும் என்பதைக் குறிக்கின்றதாய் இருக்கும். இப்படிச் செய்வது தற்காலத்தில் சிறந்ததாய் இருக்கும் மற்றும் பிற்பாடு எதிர்க்காலத்தில் கர்த்தர் அருளிடும் பட்சத்தில் மேய்ப்பருக்கு கீழாக வேலைக்குள் கடந்து வருவதோ அல்லது தற்போது இருக்கிற ஊழியத்தை விரிவாக்கின நிலையில் தொடர்வதோ அவர்களுக்கான சிலாக்கியமாயிருக்கும்.