Q12:1
கேள்வி (1910-Z4598)-1- முற்பிதாக்கள் ஜீவனுக்கான பரீட்சையின்கீழ்க் காணப்பட்டார்களா?
“பதில் – முற்பிதாக்கள் ஜீவனுக்கான அல்லது மரணத்திற்கான பரீட்சையில் காணப்படவில்லை; இவர்களுக்கு மரணத்தீர்ப்புக் கொடுக்கப்படத்தக்கதாக, இவர்கள் ஒருபோதும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்குரிய அறிவுப்பூர்வமான வாய்ப்புள்ள நிலைமையின்கீழ்க் கொண்டுவரப்பட்டதில்லை. நமது கர்த்தர் வருவதுவரையிலும், அறிவு மற்றும் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்குரிய இம்மாதிரியான நிலைமை காணப்பட்டதில்லை. “”கிருபையும், சத்தியமும் இயேசு கிறிஸ்துவினால் உண்டானது; “”அவர் ஜீவனையும், அழியாமையையும் வெளியரங்கமாக்கினார்.”” இவைகள் நமது கர்த்தருடைய நாட்களுக்கு முன்னதாக வெளியரங்கமாக்கப்படவில்லை; இக்காலங்களில் காணப்படும் இத்தகைய பொறுப்பானது அப்போது காணப்படவில்லை.
ஒருவிதத்தில் பார்க்கும்போது, யூத ஜனங்கள் நிழலான விதத்தில் நீதிமானாக்கப்பட்டிருந்தனர்; மேலும் ஜீவனா அல்லது மரணமா எனும் பரீட்சையிலும்கூட நிழலான விதத்தில் காணப்பட்டனர்; ஆனாலும் அது உண்மையாகவே நித்திய ஜீவன் மற்றும் மரணமாக இருக்கவில்லை, ஏனெனில் இவர்களால் நியாயப்பிரமாணத்தினைக் கைக்கொள்ள முடியாது; ஆகையால் இதன் கீழ் இவர்கள் ஒருபோதும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதில்லை என்பதைத் தேவன் முன்னமே அறிந்திருந்தார்; ஆகவே நியாயப்பிரமாணத்தினுடைய சாபத்தினின்று தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ளத்தக்கதாக இவர்கள் ஏதேனும் முயன்று பார்ப்பதைப் பொருட்படுத்தாமலேயே, இவர்கள் இதனின்று மீட்கப்படத்தக்கதாகத் தேவன் முன்னமே ஏற்பாடும் பண்ணிவிட்டார். ஆகையால் இவர்கள் ஜீவன் அல்லது மரணத்திற்கான பரீட்சையின்கீழ் நிழலான அல்லது அடையாளமான விதத்தில் மாத்திரமே காணப்பட்டனர்.
முற்பிதாக்கள் “”தேவனைப் பிரியப்படுத்தினார்கள்”” எனும் சாட்சியினைப் பெற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றனர். தேவன் தம்முடைய திருவுளசித்தத்தினை இவர்களுக்கு நியாயப்பிரமாணமென அல்லது இவர்கள் செய்ய வேண்டிய கடமையெனக் கொடுக்கமுடிகிற நிலை வருவதற்கு முன்னதாகவே, இன்னுமாய்த் தமக்குக் கீழ்ப்படியுங்கள் என்று இவர்களுக்குச் சொல்ல முடிகிற நிலை வருவதற்கு முன்னதாகவே, கீழ்ப்படிந்தால் நித்திய ஜீவனை வாக்களிப்பதாக இவர்களுக்குச் சொல்ல முடிகிற நிலை வருவதற்கு முன்னதாகவே, இவர்கள் அவரது சித்தத்தினை உறுதிப்படுத்திக்கொண்டு, அதைச் செய்யவும் தொடங்கின விதத்தில், இவர்கள் தேவனைப் பிரியப்படுத்தினார்கள். உலகில் மீட்பானது அப்போது நிறைவேற்றி முடிக்கப்படாமலிருக்க, ஆபிரகாம் தேவனிடத்திலுள்ள தனது விசுவாசத்தினை வெளிப்படுத்தினார். கிறிஸ்து அப்போது இன்னமும் வரவில்லை. ஆபிரகாம் அப்போது ஜீவனா அல்லது மரணமா எனும் பரீட்சையில் இல்லாமல் இருந்தும், தேவன் அவருக்குத் தமது தயவினை அருளினார் மற்றும் தம்மைப் பிரியப்படுத்தினதாகத் தெரிவித்தார். மேலும் இவரும் சரி, மற்ற அனைத்து முற்பிதாக்களும் சரி, பரிபூரண மனுஷீகத்திற்குரிய இந்த உயிர்த்தெழுதலை, மேன்மையான ஓர் உயிர்த்தெழுதலைப் பெற்றுக்கொள்வார்கள் என்று அவரது வார்த்தைகள் தெரிவிக்கின்றன. ஆனால் மனுஷீக பரிபூரணம் என்பது கிறிஸ்துவினுடைய மத்தியஸ்த ஆளுகையின்கீழ் மாத்திரம் வரும் என்பதால், ஆயிர வருஷ யுகத்தின் முடிவுவரையிலும் முற்பிதாக்கள் முழுமையான விதத்தில் தேவனிடம் அறிமுகப்படுத்தப்பட முடியாது.
ஆகையால் ஆயிர வருஷ யுகத்தினுடைய முடிவில் இராஜ்யமானது, பிதாவினிடத்தில் ஒப்படைக்கப்படும் காலத்திற்கு முன்புவரையில், இவர்கள் முழுமையான விதத்தில் ஜீவனை உடையவர்களாய் இருக்கமாட்டார்கள். இதற்கிடையில் – அதாவது ஆயிர வருஷ காலத்தில், இவர்கள் மனுஷீக சுபாவத்தினுடைய பூரணத்தையும், இன்னுமாக மாபெரும் மத்தியஸ்தர் மூலம் மனுக்குலத்திற்குத் தேவனால் அருளப்படும் அனைத்து ஆசீர்வாதங்களையும் மாத்திரம் பெற்றிருப்பார்கள்.
ஆயிர வருஷ யுகம் முடிவதுவரையிலும், நித்திய ஜீவனுக்குப் பாத்திரவான்களா என்று தீர்மானிக்கப்படுவதற்கு ஏதுவாய், முற்பிதாக்களானவர்கள் தேவனுடன் உண்மையான மற்றும் தனிப்பட்ட உறவிற்குள் வரமாட்டார்கள்; ஏனெனில் அந்த யுகமானது, தற்காலத்திலுள்ள ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட வகுப்பாரைத் தவிர்த்து, மனுக்குலத்தாரில் யாரெல்லாம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளப்போகின்றார்கள் என்பதைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காகவே ஒதுக்கப்பட்ட காலப்பகுதியாக இருக்கும். ஆயிர வருஷ யுகத்தினுடைய முடிவில், மனுக்குலம் யாவரும் சரீர பரிபூரணத்தினை எட்டியிருக்கும்போது, இவர்கள் நித்திய ஜீவன் பெறத் தகுதியானவர்களா அல்லது இல்லையா என்பது பிதாவினால் பரீட்சிக்கப்படும், அதாவது ஆதாம் பரிபூரணத்தினை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, இவர் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்குப் பாத்திரவானா அல்லது இல்லையா என்று பரீட்சிக்கப்பட்டது போன்றாகும்.
புதிய உடன்படிக்கையினுடைய ஏற்பாடுகளின்கீழ் முற்பிதாக்களும் உலகத்தாரில் ஒரு பாகமாகக் காணப்படப்போவதினால், ஆயிர வருஷ யுகத்தினுடைய முடிவு வரையிலும், இவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவதற்குரிய தங்களது பாத்திரத்தன்மை தொடர்புடைய தெய்வீக நீதியினை, தெய்வீக நீதிமன்றத்தின் முடிவினைப் பெறுவதில்லை; அதாவது உண்மையுள்ள மனுக்குலத்தாருக்கு நித்திய ஜீவன் எனும் மகா பலனைக் கொண்டுவருவதுபோல, முற்பிதாக்களுக்கும் கொண்டுவந்திடும் அந்த யுகத்தினுடைய முடிவின்போதுள்ள பரீட்சையானது முடிவடைவதற்கு முன்புவரையிலும், முற்பிதாக்கள் நித்திய ஜீவனைப் பெறுவதற்குரிய தங்களது பாத்திரத்தன்மை தொடர்புடைய தெய்வீக நீதியினைப் பெறுவதில்லை.
“