Q14:2
கேள்வி (1911)-2- இரண்டாம் மரணத்திற்குள் கடந்துபோகாமல், எப்படி ஆயிர வருஷ யுகத்தின் முடிவில் முற்பிதாக்களினால் ஆவிக்குரிய தளத்தில் காணப்பட முடியும்?
பதில் – கேள்வியை எழுப்பியுள்ள சகோதரன் காரியங்களைப் (தெளிவாய்) புரிந்துகொள்ளவில்லை. பூர்வகாலத்து பாத்திரவான்கள் மாம்சத்தில் பூரண மனுஷர்களாக, பூமியின் பிரபுக்களாக, பரலோக இராஜ்யத்தின் பூமிக்குரிய பிரதிநிதிகளென ஆயிரம் வருஷங்கள் செயல்பட்ட பின்னர், அவர்கள் ஆவிக்குரிய தளத்தில் ஒரு பங்கினை அருளப்பெறுவார்கள் என்றும், பூமிக்குரிய சுபாவத்திலிருந்து பரலோக சுபாவத்திற்கு மாறுதலை அடையப்பெறுவார்கள் என்றுமுள்ள யோசனையானது பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகின்றோம். இதைவிட எளிமையாக வேறு எப்படிச் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை; இதைச் சொல்லி முடித்துவிடுகின்றேன்.