Q144:1
கேள்வி (1909)-1- அர்ப்பணம்பண்ணியுள்ள ஒருவர் தன்னால் அர்ப்பணிக்கப்பட்டுள்ள சொத்தினுடைய எந்த ஒரு பாகத்தையேனும் பிள்ளைகளுக்கோ அல்லது சுதந்தரவாளிகளுக்கோ உரிமையாகக் கொடுக்கும் உரிமை பெற்றிருக்கின்றாரா?
பதில் – தன் பிள்ளைகளுக்குக் கொடுப்பது என்பது ஒவ்வொரு பெற்றோருடைய கடமையாக இருக்கின்றது என்று நான் எண்ணுகின்றேன். உதாரணத்திற்கு உங்களுக்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர் என்று வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் பிள்ளைகளில் சிலர் மிகவும் சிறு பிள்ளைகளாய் இருக்கின்றனர் என்று வைத்துக்கொள்ளுங்கள்… அவர்களிடத்தில் பெற்றோர்களென நீங்கள் கடமை ஒன்றினைப் பெற்றிருக்கின்றீர்கள். நீங்களே அவர்களை உலகத்திற்குள்ளாகக் கொண்டுவந்தீர்கள், மேலும் அவர்களின் விஷயத்தில் சில பொறுப்புகளை, அதிலும் விசேஷமாக அவர்கள் தங்கள் தங்கள் தேவையைச் சந்தித்துக்கொள்ள முடியாத வயதுள்ள காலங்களின்போது சில பொறுப்புகளை நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள்; ஒருவேளை நான் ஏதேனும் பிள்ளைக்குத் தகப்பனாய் இருந்தேனாகில், என் பராமரிப்பின்கீழ் நான் சம்பாதித்துப் பெற்றிருக்கும் சொத்தில் சில பங்கினைப் பிள்ளைகளுக்குக் கொடுப்பது சரியே என்று எண்ணுவேன். ஒருவேளை பத்து வருடங்களுக்குப் பிற்பாடு சொத்திற்கு எந்த மதிப்பும் இல்லாமல் போகும் என்பதில் எனக்கு உறுதி இருப்பினும், ஒரு குறிப்பிட்ட பங்கைத் தனியே ஒதுக்கி வைத்துக்கொள்வது சரி என்று எண்ணிடுவேன். என்னை நான் இயக்கிடும் அதே கண்ணோட்டத்தில் அவர்களை நான் நடத்தாமல், மாறாக அவர்களை அவர்களுடைய கண்ணோட்டத்தின்படியே நடத்திடுவேன்.
இவ்வளவுதான் கேள்வி என்று நான் எண்ணுகிறதில்லை. ஒருவேளை ஒரு தகப்பன் அதிகமான பணம் வைத்திருந்தாரானால், அவை தன்னுடைய பிள்ளைகளுக்குரியது என்றும், அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுத்துவிட வேண்டும் என்றும் எண்ணிட வேண்டுமா? இது வேறே விதமான கேள்வியாகும். தங்களுடைய தேவைகளைச் சந்திக்க முடியாதவர்களுக்குத் தேவைகளைச் சந்திப்பது என்பது ஒரு காரியமாகவும், பணத்தைக் கொடுத்துவிடுவது வேறொரு காரியமாகவும் இருக்கின்றது. நாம் தேவனுக்கே கணக்குக் கொடுக்க வேண்டுமே ஒழிய, நம் பிள்ளைகளுக்கல்ல. இவை இரண்டு வெவ்வேறு காரியங்களாகும். உங்கள் பிள்ளைகளுக்குப் பராமரிப்புத் தேவையாய் இருக்கும் காலப்பகுதியில் உங்கள் பிள்ளைகளுக்கான பொறுப்பாளியாகத் தேவன் உங்களை ஆக்கியிருந்தார் மற்றும் நீங்கள் அவர்களுக்காகச் சில ஏற்பாடுகள் பண்ணிடவும் அவர் நோக்கம் கொண்டுள்ளார்.