Q398:1
கேள்வி (1910)-1- முற்பிதாக்களுடைய நாட்களில் அவர்களின் நீதிமானாக்கப்பட்ட நிலைமைக்கும், இந்தச் சுவிசேஷ யுகத்தில் அர்ப்பணத்திற்குள் கடந்துசெல்லாதவர்களின் நீதிமானாக்கப்பட்ட நிலைமைக்கும் இடையிலுள்ள வித்தியாசம் என்ன?
பதில் – ஒருவர் அர்ப்பணம்பண்ணியுள்ளார் என்றும், இன்னொருவர் அர்ப்பணம்பண்ணவில்லை என்றும் நாங்கள் பதிலளிக்கின்றோம். நாம் பாவத்திலிருந்து திரும்பின நேரம் முதற்கொண்டு, நாம் நீதிமானாக்கப்பட்ட நிலைமையில் காணப்படுகின்றோம், எனினும் அந்த நீதிமானாக்கப்படுதலானது பகுதி நிலையிலேயே காணப்படும், அதாவது நாம் கடந்துபோயிருக்கும் அளவுக்குத்தக்கதாக மாத்திரமே காணப்படும். அதாவது ஒருவேளை நீங்கள் (City Hall) சிற்றி ஹாலுக்குப் போய்க்கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்… நாங்கள் வந்து: “எங்கே போய்க்கொண்டிருக்கின்றீர்கள்?” என்று கேட்போமானால், நீங்கள் சிற்றி ஹாலுக்கு என்று சொல்வீர்கள். ஏன் இன்னும் நடந்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்போமானால், “ஆம், நான் இன்னும் அவ்விடத்தை அடையவில்லை” என்பீர்கள். இப்படியாகவே நீதிமானாக்கப்படுதலின் விஷயத்திலும் காணப்படுகின்றது; நீதிமானாக்கப்- படுதலை நீங்கள் துவங்குகின்றீர்கள் மற்றும் நீதிமானாக்கப்படுதல் நிறைவு அடைவது வரையிலும், நீங்கள் தொடர்ந்து போய்க்கொண்டே இருப்பீர்கள். தேவன் ஏற்றுக்கொள்கின்ற ஒரே ஒரு காரியம், முழுமையான அர்ப்பணிப்பாகும். முற்பிதாக்கள் அர்ப்பணித்தார்கள் மற்றும் தேவன் அவர்களை ஏற்றுக்கொண்டார். தேவன் தமக்குள் பின்வருமாறு: “ஒருவேளை இந்த மனிதர்களுக்குப் பரிபூரணமான சரீரம் இருந்திருக்குமானால், இவர்கள் எந்தத் தவறும் செய்திருக்கமாட்டார்கள். இவர்கள் பரிபூரணமான சரீரங்களைப் பெற்றிருந்தார்கள் என்பதுபோல் நான் கருதிக்கொள்வேன்” என்று கூறினார். ஜீவன் விஷயத்தில் இவர்கள் நீதிமான்களாக்கப்- பட்டிருக்கும் காரியமானது, வருங்காலத்தில் பெற்றுக்கொள்வார்கள் என்ற பார்வையில்தான் பண்ணப்பட்டது, அதாவது “ஏற்றகாலத்தில்” இவர்கள் பெறப்போகும் ஜீவனுக்கு ஏதுவாக ஆகும். இவர்கள் ஏற்றகாலம் வரை, காத்திருக்க வேண்டும்; இவர்கள் தங்கள் நீதிமானாக்கப்படுதலின் பலனை அடைந்து, உயிர்த்தெழுதலில் முழுமையான பரிபூரணத்தை அடைவதற்கு முன்னதாக, “அக்கிரமத்திற்கான நிவிர்த்தியினை” இயேசு பண்ண வேண்டும்.