Q525:3
கேள்வி (1916)-3- செய்யும்படிக்கு மேய்ப்பரால் கொடுக்கப்பட்டிருக்கும் வேலையினை, சகோதரிகள் மூப்பர்களிடம் கலந்துரையாடாமல் துவங்கலாமா மற்றும் இவ்வேலைக்கு ஒரு மூப்பர் ஆதரவளிக்காமல் இருக்கும் பட்சத்தில் அவள் தொடரலாமா?
பதில் – மேய்ப்பரது வேலையில் மூப்பர்களுக்கு எந்தச் சம்பந்தமுமில்லை. மூப்பர்கள் மூப்பர்களாய் இருக்கின்றனர் மற்றும் மூப்பர்களுக்கான வேலையினை அவர்கள் செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றனர். மேய்ப்பரது வேலை என்பது மேய்ப்பனுக்கான வேலை மற்றும் அதை மேய்ப்பன் செய்திட வேண்டும். செய்யும்படிக்கு மேய்ப்பரால் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை தொடர்பான குறிப்புகள் அடங்கின கடிதமானது, என்னைத் தங்களது மேய்ப்பனாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளதைத் தெரிவித்துள்ளவர்களுக்கே ஒழிய, வேறு யாருக்கும் அனுப்பி வைக்கப்படவில்லை இவர்கள் என்னைத் தங்களுடைய மேய்ப்பனாக இருக்கும்படிக்கும் கேட்டுக்கொண்டுள்ளபடியால், அந்த வேலையை அவர்களுக்காக நான் செய்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன். இப்படியான விருப்பம் இல்லாதவர்கள் யாருக்கேனும் அக்கடிதங்கள் ஒருவேளை வந்திருக்குமானால், அவைகளைத் தயவாய்த் திருப்பி அனுப்பிவைக்கும்படியாகக் கேட்டுக் கொள்கின்றேன். ஆனால் எங்கெல்லாம் நான் மேய்ப்பனாகக் காணப்படுகின்றேனோ, அங்கெல்லாம் நான் சிறந்தவர்கள் என்று கருதிடும் சகோதரிகளைப் பயன்படுத்திடுவேன் மற்றும் அச்சகோதரிகளுடன் சேர்ந்து ஊழியம் புரிந்திடுவேன்.
சந்தேகத்திற்கிடமின்றி மறுப்புத் தெரிவித்துள்ளவர் இக்காரியத்தினைப் புரிந்துகொள்ளவில்லை. இதில் மூப்பர்களின் எதிர்ப்பைத் தூண்டிடும் எதுவும் நான் அறிந்தவரை இல்லை மற்றும் தங்களை வேலையில் ஈடுபடுத்திக்கொள்வதற்குப் போதுமான வேலைகள் இல்லாமல் ஏதேனும் மூப்பர்கள் காணப்படுவார்களானால், அவர்கள் தங்களை வேலையில் ஈடுபடுத்தி வைத்துக்கொள்ள முற்படுவது நலமாயிருக்கும். மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்கள் செய்திடுவதற்கு அநேகம் வேலைகள் இருக்கின்றன மற்றும் தங்கள் பொறுப்பில் கர்த்தர் ஒப்புவித்துள்ளதான வேலைகளைச் செய்வதில் அவர்கள் தங்களை (busy) ஈடுபடுத்திக்கொண்டு காணப்பட வேண்டும்; ஆனால் சகோதரிகளுடைய நிலைமைகள் என்பது வேறுபட்டவையாகும் மற்றும் அவர்களை ஈடுபட வைப்பதற்குரிய ஏதாகிலும் காரியங்களைக் கண்டுபிடிப்பதற்கு நாங்கள் முயற்சித்துக்கொண்டுவருகின்றோம் மற்றும் வழி இப்பொழுது திறந்து கொண்டிருப்பதினால் நாம் களிகூருகின்றோம். ஒருவேளை மூப்பர்கள் யாரேனும் இதைத் தடைச் செய்து, இவ்வேலையில் குற்றம் கண்டுபிடிப்பார்களானால், அடுத்த தேர்ந்தெடுத்தல் வரும்போது, அவர்கள் மூப்பராகத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளும்படிக்குச் சபையாருக்கு அறிவுரைக் கூறுகின்றேன். ஒவ்வொருவனும் தனது வேலையினைப் பார்ப்பதற்கும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடாமல் இருப்பதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் இந்தவிதத்தில் – அதாவது ஒவ்வொருவனும் வேலையிலுள்ள தனக்கான பாகத்தினைப் பார்த்துக்கொண்டு செய்வதன் மூலம் – ஊழியமானது செழித்தோங்கும். கர்த்தருடைய வேலையை யாரேனும் தடுக்க முற்படுவார்களானால், அவர்கள் விலக்கிவைக்கப்படுவது நலமாயிருக்கும்; ஏனெனில் இத்தகையவர்கள் இல்லாமல், சபையார் நன்கு முன்னேறுகிறவர்களாய் இருப்பார்கள். “சகலமும் நல்லொழுக்கமாயும், கிரமமாயும் செய்யப்படக்கடவது.”