Q478:1
கேள்வி (1913)-1- குறிப்பிட்ட ஆராய்ச்சிகளுக்கென்று தனி மனிதச் சிறப்பின் அடிப்படையில் இல்லாமல், மாறாக அத்தகைய ஆராய்ச்சிக்கென்று திறமையுடையவர் என்ற அடிப்படையில் ஒரு போதகருக்கான விருப்பத்தினை ஒருவர் பெற்றிருப்பது தவறான இருதய நிலைமையாகுமா?
பதில் – அது தவறான இருதய நிலைமையென்று நான் கருதுவதில்லை. போதகரென விசேஷித்த தாலந்து உடையவர்களாகச் சிலர் காணப்படுவார்கள். அதிகளவிலான அறிவுரைகளைக் கொடுக்கும் ஒருவரை ஒருவர் விரும்பிடலாம். இதில் தவறான இருதய நிலைமை காணப்படுவதாக எனக்குத் தெரியவில்லை ஆனாலும் சபையார் தங்களது தேர்தெடுத்தல்களில் விசேஷித்தத் தகுதியுடையவர்களையும், போதகசமர்த்தனாக இருப்பவர்களையும் சகோதரர்கள் மத்தியில் கண்டுபிடிக்க நாடிட வேண்டும் என்று நான் சொல்லுவேன்; ஏனெனில் இது அப்போஸ்தலர் கூறுவதுபோல மூப்பருக்கான தகுதிகளில் ஓர் அம்சமாய்க் காணப்படுகின்றது மற்றும் போதகசமர்த்தனாய் இல்லாதவர் தேர்ந்தெடுக்கப்படவே கூடாது. எனினும் வித்தியாசம் வேண்டும் என்கிற கருத்துத் தொடர்ந்து நிலவும்; ஆகையால் இந்தப் பல்வேறு வழிநடத்துபவர்களை மாறி மாறி வழங்கிடுவதே, நண்பர்களுக்கான எங்களது ஆலோசனையாகவும், புரூக்கிளினின் எங்களது நடைமுறையாகவும் இருக்கின்றது; உதாரணத்திற்கு ஒரு வகுப்பைக் குறிப்பிட்ட காலம் நடத்திவரும் ஒருவர், இன்னொரு வகுப்பிற்கு மாற்றப்படலாம் மற்றும் பின்னர் இன்னொரு வகுப்பிற்கு மாற்றப்படலாம்; இப்படியாகச் சுற்றிச் சுற்றி மாற்றப்படும்போது அனைத்து வகுப்புகளுக்கும் சிறந்த மற்றும் சாதாரணமான / அனைத்து வகையான ஊழியங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.