Q119:2
கேள்வி (1915)-2- “உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன் என்று மத்தேயு 20:27-ஆம் வசனத்தில் வாசிக்கின்றோம். கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் முதன்மையானவனாய் இருக்க விரும்புவது என்பது முறையான விருப்பம்தானா மற்றும் பரலோக இராஜ்யத்தில் ஸ்தானங்களானது, இங்கு நம்மால் ஏறெடுக்கப்படும் ஊழியத்தினுடைய அளவின் அடிப்படையில்தான் வழங்கப்படுமா?
பதில் – தம்முடைய சீஷர்களுக்கு, அவர்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட பெலவீனம் ஒன்றினை – அதாவது பெரியவர்களாய்க் காணப்படுவதற்கான ஒரு விருப்பத்தினை – அதாவது மனுஷகுடும்பத்தில் பொதுவாய்க் காணப்படுகின்றதான ஒரு விருப்பத்தினை – பேராசையின் / குறிக்கோளின் ஆவியினைக் கர்த்தர் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தார். இவ்வசனத்தினுடைய முந்தின வசனங்களானது, புறஜாதிகள் மத்தியில், சிலர் அடக்கி ஆளும் அதிகாரம் செலுத்துபவர்களாய்க் காணப்பட்டு, மற்றவர்களைத் தங்களுக்குப் பணிவிடைச் செய்யப்பண்ணுகின்றார்கள் என்றும், ஆனால் இவ்விதமாய் இயேசுவின் சீஷர்கள் மத்தியில் காணப்படலாகாது என்றும் தெரிவிக்கின்றது. சீஷர்கள் வேறே ஆவியினால் இயக்கப்படுபவர்களாய் இருத்தல் வேண்டும். கிறிஸ்துவின் பின்னடியார்களிடத்தில் – இறுமாப்பாய் ஆளுவதற்குரிய, மற்றவர்களை அடக்கி ஆளுவதற்குரிய ஆவி இருத்தல் கூடாது; மாறாக மற்றவர்களுக்கு ஊழியம் புரிந்திடுவதற்கும், மற்றவர்களுக்காகக் காரியங்களைச் செய்திடுவதற்கும் நாடிடும் அன்பின் ஆவியானது மற்றும் மற்றவர்களுக்காக ஊழியம் புரிய தனது தனிப்பட்ட நலனுக்கடுத்தவைகளைப் பலிச் செலுத்திட விரும்பும் ஆவியானது காணப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் நாம் இவ்வசனத்தினுடைய மற்ற வார்த்தைகளைப் பார்க்கின்றோம். கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் சிலர் முதன்மையானவர்களாய்க் காணப்படுவார்கள்; இப்படியாகவே தாலந்துகளை அதிகமாகப்பெற்ற நிலையிலுள்ள சிலரையும் மற்றும் குறைவாகப்பெற்ற நிலையிலுள்ள சிலரையும் பெற்றிருக்கும் எவ்விடத்திலும் – அதாவது தாலந்துகளில் சமமாய் இராத ஜனங்கள் காணப்படும் எந்த ஒரு கூட்டத்தில் அல்லது வகுப்பில் நிச்சயமாய்க் காணப்படும். யாரோ ஒருவர் முதன்மையானவராய் நிச்சயமாய்க் காணப்பட வேண்டும். முற்றும் முழுமையான சரிசமம் என்பது கூடாத காரியமாகும்.
தேவனுடைய பரிசுத்தவான்கள் மத்தியில், சபையை வழிநடத்திடுவதற்குச் சிலர் காணப்பட வேண்டும் என்பதும்கூடத் தகுதியானதே. அப்படியானால் யார் முதன்மையானவராய் இருக்க வேண்டும் என்பதற்கான தகுதிநிலை என்னவாக இருக்கும்? மற்றவர்களைப் பயமுறுத்தக்கூடிய ஒருவர் முதன்மையானவராய்
இருக்கலாமா? இல்லை இது தகுதிநிலையல்ல. ஆதிக்க வல்லுநராகவும், இனிமையான சொற்களைப் பேசுபவராகவும், ஏதோ சில தாலந்துகளைப் பெற்றிருப்பதன் காரணமாக அல்லது சிறப்பான கல்வியோ, ஐசுவரியமோ பெற்றிருப்பதன் காரணமாக – இவ்வகையான எதையாகிலும் பெற்றிருப்பதன் காரணமாக மாத்திரம் ஆதிக்கம் பண்ணுபவராகவும் இருக்கும் ஒருவர் முதன்மையானவராய் இருக்கலாமா? இல்லை இது தகுதிநிலையாக இருக்க முடியாது. அப்படியானால், சபையில் முதன்மையானவர்களென அடையாளம் கண்டுகொள்ளப்படுபவர்களுக்குரிய தகுதிநிலை என்னவாக இருக்கும்?
சுய மகிமைக்காக எந்த ஆசையும் கொள்ளாதீர் – SUB HEADING
ஊழியம்புரிவதற்கான ஆவியினை மிகுதியாய்ப் பெற்றிருப்பவர்களை நாம் நாடித்தேடிட வேண்டும் என்பதே எங்களுடைய பதிலாய் இருக்கின்றது. பெருமளவில் ஊழியம்புரிந்து, சபையாருக்குப் பெருமளவில் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தினைக் கொண்டுவருபவன் – அதாவது உண்மையாய் ஊழியம் புரிவதற்கென மிகவும் பிரயாசம் எடுக்கிறவன் – இத்தகையவனை முதன்மையானவனாகக் கருதுங்கள். நமது கர்த்தருடைய இந்த வார்த்தைகளானது, ஒரு தனிப்பட்ட நபருக்கென்று மாத்திரம் இல்லாமல், அப்போஸ்தலர்கள் அனைவருக்குமாகப் பேசப்பட்டபோதிலும், இவ்வார்த்தைகள் தனிநபருக்கும் பொருந்தும். நம்மில் எவரேனும் ஏதேனும் விசேஷித்த விதத்தில் ஊழியம்புரிய விரும்புவோமானால், நாம் உலகப்பிரகாரமான ஜனங்கள் போன்று செய்திடக் கூடாது என்கிற சிந்தையானது நம் ஒவ்வொருவருடைய இருதயத்திற்குள்ளும் கடந்துவர வேண்டும். நாம் அவர்களுக்கு எதிர்மாறான பாதையினை எடுத்துக்கொண்டு, மனுஷரிடமிருந்து வரும் எந்தக் கனத்தையும், கருத்தில் எடுத்துக்கொள்வதற்குத் தகுதியற்றதென முற்றிலுமாய் விட்டுவிட வேண்டும். இக்காரியத்தினைத் தேவன் தமக்கு நலமாய்த் தோன்றும் விதத்தில் கையாளத் தக்கதாக, அவரிடமாய் நாம் விட்டு விட்டு, சகோதரருக்கு ஊழியக்காரனாய் இருப்பதற்கு மாத்திரம் திருப்தியடைந்து இருக்க வேண்டும். இப்படியான விதத்தில் ஊழியம் செய்திடுவதற்கு நீங்கள் எவ்வளவாய் விருப்பமுடையவர்களாய் இருக்கின்றீர்கள் என்று கர்த்தர் காண்பாராக. எந்தக் குறிக்கோளும் / ஆசையும் இல்லாதவர், எதையும் செய்யமாட்டார். நாம் விதைத்தாலும் அல்லது உழுதாலும் அல்லது நாம் எதைச் செய்தாலும் நமக்குக் குறிக்கோள்கள் காணப்பட வேண்டும் – நாம் செய்துகொண்டிருக்கின்ற எதையும், திருப்திகரமான விதத்தில் செய்யும்படிக்குத் தூண்டிடுவதற்கு நமக்குக் குறிக்கோள் தேவையாய் உள்ளது. ஆகையால் சத்தியத்திற்கு ஊழியம்புரிவதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைக்கையில், முடிந்தமட்டும் மிகவும் ஆற்றல்மிக்க விதத்தில் அதற்கு ஊழியம் செய்திட நாம் நாடிட வேண்டும். இல்லையேல் நாம் கர்த்தருக்கு ஆற்றல்மிக்க ஊழியக்காரர்களாய் இருக்க முடியாது.
ஆனால் சுய மகிமைக்காக ஆசைப்பட்டு, முதன்மையானவர்களாக விரும்பும் எந்த ஒரு விருப்பத்தினையும் நாம் புறம்பே தள்ளிட வேண்டும். நம்மால் அறிய முடிந்திருக்கும் சிறந்த விதத்தில் கர்த்தருக்கு ஊழியம்புரிந்திட நாம் நாடிட வேண்டும். என்னைக்காட்டிலும் உங்களால் சில விதங்களில் கர்த்தருக்குச் சிறப்பாய் ஊழியம்புரிய முடிகிறதாய் இருக்கும் பட்சத்தில் மற்றும் உங்களிடமிருந்து நான் சிலவற்றைக் கற்றுக்கொள்ள முடிகிறதென்றால், அது நல்லது, நன்மையுமாகும். பிற்பாடு உங்களால் என்னிடமிருந்து ஏதோ சிலவற்றைக் கற்றுக்கொள்ள முடிகிறதென்றால், அப்படியே காணப்படுவதாக. உண்மைதான் விசேஷமாய்ப் பாராட்டத்தக்கதாய்க் காணப்படும் எதையும் நாம் பின்பற்றுகிறவர்களாய் இருந்து, கர்த்தருடைய காரணங்களை நடந்தேற்ற நம்மால் முடிந்த யாவற்றையும் செய்ய வேண்டும். மேலும் இந்த ஊழியமானது, அன்பினால் இயக்கப்பட வேண்டும். அன்பினால் இயக்கப்படாத எந்த ஊழியமும், கர்த்தருடைய பார்வையில் அங்கீகரிக்கப்படுவதில்லை.
தாழ்மை மிக முக்கியமான தேவை – SUB HEADING
கண்காணி ஊழியத்தினை விரும்புகிறவன் நல்ல ஊழியத்தை விரும்புகின்றான் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகின்றார். அது ஓர் உயர்வான ஊழியமாகும். இந்த ஊழியமானது, இன்றைய நாட்களில், பெயர்ச்சபை அமைப்புகளில் உயர்வான அதிகாரப்பூர்வமான பதவியாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது போன்று அப்போஸ்தலனுடைய நாட்களில் இருக்கவில்லை. அந்நாட்களில் கண்காணி என்பவர், ஆடுகளின் நலனுக்கடுத்தவைகளைப் பார்த்துக்கொள்ளும் சபையின் பெயரற்ற மற்றும் தாழ்மையான ஊழியக்காரன் ஆவார். சபையின் ஒவ்வொரு ஊழியக்காரனும், தன்னால் முடிந்தமட்டும் தேவனுடைய மந்தையின் மீது திறமிக்க மேற்பார்வையாளராக இருக்க விரும்பிட, நாடிட வேண்டும். இந்த மூத்த சகோதரர்கள் – சபையாருக்கான மேய்ப்பர்கள் மத்தியில், வெவ்வேறு இயல்பான திறமைகளை உடையவர்களாய்க் காணப்படுவார்கள். ஒவ்வொருவரும் தனது தாலந்துகளை, தனது வாய்ப்புகளை, கர்த்தருக்கான, சகோதரருக்கான மற்றும் சத்தியத்திற்கான ஊழியத்தில் பயன்படுத்திடுவதற்கு நாடிட வேண்டும்.
இன்றைய நாட்களிலுள்ள கர்த்தருடைய ஜனங்களில் ஒருவர், ஆண்டவர் இங்கு முன்வைக்கின்றதான நெறிமுறைகளை மறந்துபோவது என்பது பரிதாபத்திற்குரிய காரியமாகும். இத்தகையவர்கள் தாங்கள் மூப்பர் ஊழியத்திற்குச் சபையாருடைய, கர்த்தருடைய ஜனங்கள் அடங்கின கூட்டத்தாருடைய vote / வாக்கினால் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், கர்த்தருடைய ஜனங்களின் வாக்கானது, சபையினுடைய குரலாய் இருக்கின்றது என்றும் உணர்ந்து கொள்வதற்குப் பதிலாக, உரிமையின் காரணமாகத் தங்களுக்கு மூப்பர் ஊழியம் கிடைத்துள்ளது என்று எண்ணுகிறவர்களாய் இருக்கின்றனர். பிரித்தெடுக்கப்பட்டவர்களுடைய, சபையினுடைய – vote / வாக்கினை முழுமையாய் ஏற்றுக்கொள்வதற்கு விருப்பமுள்ளவர்களாக, ஒவ்வொருவருடைய மனப்பான்மையும் காணப்பட வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். ஒருவன் மற்றவர்களோடு அனைத்திலும் பங்குகொள்வதன்மூலம், சபையாரில் ஓர் அங்கமாகியுள்ளானெனில், இவ்விதம் அவன் அதிகமான சதவீதத்தில் அல்லது ஓர் எண்ணிக்கையில் பெருமப்பான்மையானவர்களாய்க் காணப்படும் அதிகாரமுடைய பெரும்பான்மையானர்கள் பிரதிநிதித்து வப்படுத்தும் ஒழுங்குகளுக்குக் கீழ்ப்பட்டவனாகுகின்றான். இதைச் செய்த பிற்பாடு, அவன் மூப்பனாகவோ அல்லது வேறொருவர் மூப்பனாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இதே மனப்பான்மையினைத் தொடர்ந்து கொண்டிருக்க நாடிட வேண்டும்.
ஏற்ற தகுதிகளைக் கொண்டிராத ஒரு சகோதரனை மூப்பனாக தேர்ந்தெடுக்கும் தவறினைச் சபையார் மிக அடிக்கடி செய்துவருகின்றனர். இது அந்தச் சபையாரில் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி, சிலர் பிரிந்துபோய், இன்னொரு சபையினை ஏற்படுத்திடுவதற்கு வழிநடத்துகின்றதாய் இருக்கின்றது. இது ஞானமான நடக்கையாய் இராது என்று நாம் எண்ணுகின்றோம். ஒருவேளை அந்தச் சபையார் தவறு செய்துவிட்டார்களெனில், அதை நன்மைக்கு ஏதுவாய் மாற்றிடுவதற்குக் கர்த்தர் வல்லவராய் இருக்கின்றார்; மற்றும் பிரிந்துபோய்விடுபவர்கள் தங்களுக்கு விலையேறப்பெற்றதாய்க் காணப்படுவதற்கு ஏதுவான சில அனுபவங்களை இழந்துபோகின்றவர்களாய் இருப்பார்கள்.
எனினும் சபையார் தவறு செய்துவிட்டனர் என்று நாம் எப்போதும் உறுதியாய்ச் சொல்லிட முடியாது. இவ்விஷயத்தில் கர்த்தர் படிப்பினைகள் சிலவற்றை வைத்திருக்கிறார் என்பதை நாம் எப்படி அறிவோம்? தேர்ந்தெடுக்கப்படுபவர் யாராயிருப்பினும், அவருக்காக நாம் கர்த்தருடைய ஆசீர்வாதத்தினை வேண்டியிருப்போமானால், அந்தத் தேர்வுடன் நாம் இணங்கிப்போக வேண்டும். தேர்ந்தெடுக்கப்படாதவர் ஒருவேளை சத்தியத்தினை நன்றாய் முன்வைத்திடுவதற்கான ஆற்றல் உடையவராகவும், தான் பயன்படுத்தப்படுவதற்கும், பயனாய்க் காணப்படுவதற்கும் ஏதுவான அநேகம் இடங்களை அறிவாரானால், அச்சகோதரன் தனக்கு வரும் எந்த ஒரு வாய்ப்பினையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் சபையை விட்டுப் பிரிந்து செல்ல தேவையில்லை. தன் கையில் கிட்டும் எந்த ஊழியத்தினையும் அவர் புரிந்திடலாம். அநேகமாக அவர் தனது நேரத்தையும், தாலந்துகளையும் புதிய வகுப்புகளை உருவாக்கும் வேலையில் (class extension work) பயன்படுத்திடலாம் – இதுவிஷயத்தில், தான் மூப்பராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனும் காரணம் தனக்குத் தடையாக இருக்கின்றது என்று கருதிட வேண்டாம். அவர் கடந்துபோய், ஊழியங்களுக்கான வாய்ப்புகளைக் கண்டடையலாம். ஆகையால் மூப்பர்களாக வேறு சகோதரர் வந்திருக்கும் காரியமானது, தேர்ந்தெடுக்கப்படாத சகோதரனுக்கு அல்லது மறுபடியும் தேர்ந்தெடுக்கப்படாத சகோதரனுக்கு – அவர் பயனாகும் வேறொரு களத்தினைக் கர்த்தர் சுட்டிக்காட்டுவதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. கூடுதலாய்ப் பயன்படும் விதத்தில் கர்த்தருடைய வழிநடத்துதலானது அவரை நடத்திடலாம்.
உலகத்தின் மனுஷர்கள் நம்மைக்குறித்து என்ன சொல்லுவார்களோ அல்லது என்ன எண்ணுவார்களோ என்ற எண்ணத்தினால் நாம் தாக்கத்திற் குள்ளாகுதல் கூடாது. இது முக்கியமற்றக் காரியமாகும்; மற்றும் சபை என்ன எண்ணுமோ என்பதும் முக்கியத்துவமற்றக் காரியமாகும். நாம் கர்த்தரைப் பிரியப்படுத்திடவே நாடிட வேண்டும். நாம் நம்மைக்குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், நம்முடைய கணிப்பில் மற்றவர்களுக்கு முன்னுரிமைக் கொடுப்போமாக. பரலோக இராஜ்யத்தில் ஸ்தானங்கள் அருளப்படுவது என்பது, பரிசுத்த ஆவியினுடைய கனிகளின் வளர்ச்சியினுடைய அளவின் அடிப்படையிலேயே ஆகும் என்று நாம் புரிந்திருக்கின்றோம் மற்றும் இது கர்த்தருடைய ஊழியத்தில் வைராக்கியம் கொள்வதற்கு வழிநடத்திடும் அன்பினைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது.