Q469:2
கேள்வி (1907)-2- பயண ஊழியர்களின் கூட்டங்கள் தொடர்புடைய விஷயத்தில் உங்களது அறிவுரை என்ன? அறுவடையினுடைய இந்த ஒரு காலப்பகுதியில் அறை வாடகைகளுக்கும், விளம்பரங்களுக்கும் என்று அதிகம் செலவழிப்பது தகுதியான காரியமாய் இருக்குமா? அல்லது ஏற்கெனவே விசுவாசத்தில் காணப்படுபவர்களின் நலனுக்கடுத்த விஷயங்களில் விசேஷமாய் அதிகம் ஊழியம் புரிவது நலமானதாய் இருக்குமா? இந்த விஷயத்தில் பயண ஊழியர்கள் எந்தளவுக்கு நடவடிக்கை எடுக்கலாம்?
பதில் – அருமையான நண்பர்களே கடைசி கேள்விக்கு முதலாவதாகப் பதிலளிக்க விரும்புகின்றேன்; அதாவது பயண ஊழியர்கள் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க முற்படவே கூடாது என்று பதிலளிக்கின்றேன். இது பயண ஊழியர்களின் காரியமல்ல. இவ்விஷயம் குறித்த கிட்டத்தட்ட அதிகமான நடவடிக்கைகளை, நாம் வாட்ச் டவர் அலுவலகத்திலிருந்து செய்துவருகின்றோம். அங்கு முன்வைக்கப்பட்டுள்ளதான கொள்கைகளின் பொதுவான காரியங்களை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களாய்ப் பயண ஊழியர்கள் இருக்கின்றனர் மற்றும் பயண ஊழியர்களென அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள காரியமானது, அவர்கள் அப்படிச் செய்வதற்குப் பிரியப்படுகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றதாய் இருக்கின்றது. இது அடிமைத்தனத்தைக் குறிப்பதாகாது, மாறாக அந்த நிபந்தனைகளின் கீழ் பயண ஊழியர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது மற்றும் அவர்கள் திவ்விய மேற்பார்வையின் கீழ் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதான விதிமுறைகளை அடையாளங்கண்டு கொண்டுள்ளதையும் மற்றும் அதில் திருப்தி கொண்டுள்ளதையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஆகையால் இது விஷயத்தில் பயண ஊழியர்களுக்கு எதுவும் செய்வதற்கில்லை என்று நான் கூறுகின்றேன். பயண ஊழியர்கள் இப்படிச் செய்வதாக நான் கேள்விப்படவில்லை ஆனால் ஒருவேளை யாரேனும் இப்படியாகச் செய்திருக்கின்றார்களானால், கவனக்குறைவின் காரணமாகவே இப்படிச் செய்திருப்பார்கள் என்று நான் அனுமானிக்கின்றேன்.
எந்தளவுக்கு விளம்பரங்கள் பண்ணப்படுவது சரியாய் இருக்கும் என்பது தொடர்பாக நான் கூறிடுவது என்னவெனில்: இவ்விஷயத்தை நண்பர்களின் கரங்களிலேயே நாம் விட்டுவிட விரும்புகின்றோம். பயண ஊழியர்களுடைய வருகைகளின் விஷயத்தில் உங்களது விருப்பத்திற்கேற்ப அதிகமாய் விளம்பரங்கள் அல்லது கொஞ்சமாய் விளம்பரங்கள் கொடுங்கள். அதை உங்களது உக்கிராணத்துவத்தின் ஒரு பாகமாகக் கருதிக்கொள்ளுங்கள்; அதை நீங்கள் செய்ய வேண்டும். சொசைட்டியானது மற்றொரு பாகத்தைச் செய்கின்றது, அதாவது பயண ஊழியர்களை அனுப்பிவைத்தல், அவரது செலவுகள் முதலானவைகளைப் பார்த்தல் ஆகியவற்றைச் செய்கின்றது; மற்றும் பயண ஊழியர் மற்றொரு பாகத்தைச் செய்கின்றார். இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாகத்தினைச் செய்வார்களானால், அனைத்துமே நேர்த்தியாய்ச் செய்யப்படும். ஆகையால் இது ஒவ்வொரு சாராரும், கர்த்தருடைய சித்தம் எதுவென்று தான் பகுத்தறிந்து நம்புகின்றார்களோ, அதைச் செய்திடுவதற்குரிய பொறுப்பினை ஒவ்வொரு சாராரிடத்திலேயே விட்டுவிடுகின்றதாய் இருக்கின்றது.
அதிகமான பொதுக்கூட்டங்கள் காணப்பட வேண்டாம் என்பது எங்களுடைய அறிவுரையாய் இருக்கின்றது; ஏனெனில் பயண ஊழியர்களுடைய இத்தகைய வருகைக்கான விசேஷித்த நோக்கம், விசுவாச வீட்டாருக்கு ஊழியம் புரிவதேயாகும் மற்றும் பொது ஜனங்கள் மத்தியிலான ஊழியங்களானது, விசுவாச வீட்டாருக்கு மிகவும் பிரயோஜனமாய் எப்போதும் காணப்படுகிறதில்லை. ஆகையால் பொது மற்றும் தனிப்பட்ட கூட்டங்கள் இரண்டுமே காணப்படுகையில், (public meetings) பொதுக்கூட்டங்களானது அனைத்து நேரத்தையும் எடுத்துக்கொள்ளாதபடிக்கும், விசுவாச வீட்டாருடைய விசேஷித்த நலனுக்கடுத்த காரியங்களுக்கெனப் பாதி நேரம் அல்லது பாதிக்கும் மேலான நேரமாகிலும் கொடுக்கப்படும்படிக்கு நாம் எப்போதும் வலியுறுத்துகின்றோம்.