Q532:1
கேள்வி – (1911)-1- ஆயிர வருட யுகம் நிறைவடைவதற்கு முன்னதாக யாரேனும் பரிபூரணத்தினை அடைவார்களா?………………
பதில் – ஆம்! யுகம் முடிவடைவதற்கு முன்னதாகவே சிலர் பரிபூரண நிலைக்கு வருவார்கள் என்று நாம் பதிலளிக்கின்றோம். உதாரணத்திற்கு முற்பிதாக்கள் தங்களுடைய உயிர்த்தெழுதலின்போதே, உடனடியாகப் பரிபூரண நிலைக்கு வருவார்கள்; ஏனெனில் இவர்களின் சோதனையானது முடிவடைந்துவிட்டது; ஆகையால் முற்பிதாக்கள் இத்தகைய வகுப்பாராய் இருப்பார்கள். ஆனால் கேள்வி கேட்டவர் மீதமான மனுக்குலம் குறித்தே குறிப்பாய்க் கேட்டுள்ளார் என்று எண்ணுகின்றோம் மற்றும் அதற்கு எங்கள் பதில் என்னவெனில் எந்தளவுக்கு ஒவ்வொருவனும் மேசியாவினுடைய இராஜ்யத்தின் சட்டத்திட்டங்கள், பிரமாணங்கள் மற்றும் விதிகளுக்குக் கீழ்ப்படிவதில் துரிதம் காட்டுவானோ, அவ்வளவாய் ஒருவன் பரிபூரணத்தை நோக்கி மிக வேகமாய் முன்னேறுகின்றவனாய் இருப்பான். இப்பொழுது எப்படி இருக்கின்றதோ, அப்படியே அப்போது இருக்கும்; இக்காலத்திலும் எந்தளவுக்கு நாம் முழு இருதயத்தோடு காணப்படுகிறவர்களாய் இருப்போமோ, அவ்வளவுக்கு வேகமாய் நாம் பூரண அன்பினுடைய இலக்கினை அடைகின்றவர்களாய் இருப்போம். தங்கள் சத்துருக்களை அன்புகூர முடிகிறவர்களாக ஆகும் நிலையினை சிலர் மிகத் தாமதமாய் அடைகின்றனர் மற்றும் சிலர் வேகமாய் இந்நிலைமையை அடைகின்றனர். மேலும் இப்படியே ஆயிர வருட ஆளுகையின்போது பரீட்சையில் காணப்படுபவர்கள் விஷயமும் காணப்படும்; இவர்கள் பரிபூரணமடைவதற்கான வாய்ப்பினை அக்காலத்தில் பெற்றுக்கொள்வார்கள்; இவர்கள் அனைவரும் பரிபூரண நிலைக்கு வந்தாக வேண்டும், இல்லையேல் இரண்டாம் மரணத்தில் மரித்துப்போவார்கள்; மேலும் இவர்கள் எந்தளவுக்கு வேகமாய்ச் செயல்படுகின்றார்களோ, அவ்வளவுக்கு வேகமாய் அந்தப் பரிபூரண நிலைமைக்கு வேகமாய் வருவார்கள். இவர்கள் எந்தளவுக்கு இராஜ்யத்தின் பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிதலுள்ளவர்களாய் இருப்பார்களோ, அவ்வளவாய் ஆசீர்வாதம் இவர்கள் மீது கடந்துவரும், இவர்களைப் பரிபூரண நிலைக்கு வரச் செய்திடும்.