Q534:3
கேள்வி (1910) -3- பயண ஊழியரின் வேலைக்கொத்த ஒரு வேலையினை ஒரு சகோதரன் தானாகவே துவங்கி, பல்வேறு சபையார்களுக்குத் தகவல் கொடுத்தும், தியதிகளை நிர்ணயித்தும், கூட்டங்கள் முதலானவைகளை ஒழுங்குப்படுத்திடுவதற்குக் கேட்டுக்கொண்டும் காணப்படுகையில், இது விஷயத்தில் சபையார் என்ன செய்;ய வேண்டும் என்று உங்களிடம் கேட்க விரும்புகின்றேன்.
பதில் – சொசைட்டியானது முற்றிலும் சுதந்திரமாய்க் காணப்படுவதற்கும் மற்றும் அது அனைவருமே முற்றிலும் சுதந்திரமாய்க் காணப்படும்படிக்கு விட்டுவிடுவதற்கும் விரும்புகின்றபடியினால், அது வேலைக்கு விசேஷமாய்த் தகுதியுடையவர்கள் என்று நம்புபவர்களை மாத்திரமே பயண ஊழியர்களாக அனுப்புவதற்கு முயற்சிக்கின்றது. வேலைக்கான தகுதிகள் அநேகவற்றையுடைய மற்றச் சகோதரர்கள் காணப்படுகின்றார்கள் என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை மற்றும் அவர்களுக்குத் தகுதிகள் இல்லை என்றும், அவர்களால் எந்த நன்மையும் இல்லை என்றும் தீர்மானிப்பது நமக்கடுத்தக் காரியமல்ல. ஆகையால் எந்தவொரு சபையார் மீதும் அதிகாரத்தினைச் செலுத்திட நாங்கள் முற்படுகிறதில்லை. மாறாக காரியத்தினை முற்றிலுமாகச் சபையாரிடமே விட்டுவிடுகின்றோம். ஒரு சகோதரனை சொசைட்டியானது அனுப்பிவைக்க வில்லை எனும் காரியமானது, அச்சகோதரனை விசேஷமாக சொசைட்டியின் பிரதி நிதியாகக் கருதிடுவதற்கு ஏதுவானவராக, சொசைட்டி நம்பிடும் ஒருவராக – அவரைக் கண்டுகொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. ஆனால் இது ஒருவருக்கெதிராய்ப் பழிச்சுமத்துகிறதாய் இராது. எனக்கு இரண்டு விவகாரங்கள் ஞாபகத்திற்கு வருகின்றது. ஒன்று ஒரு சகோதரனைக்குறித்தது ஆகும்; நான் அறிந்திருக்கிறவரை இவர் மிக அருமையான சகோதரர் ஆவார் மற்றும் இவர் சத்தியத்திற்கு மிகவும் நேர்மையானவர் என்றும், மிக நல்ல சகோதரர் என்றும் நான் நம்புகின்றேன்; ஆனால் அச்சகோதரனுக்குக் கல்வியறிவில் குறைபாடு இருந்தது மற்றும் அவர் ஊழியம் செய்கிறதற்குக் கல்வியறிவு பற்றின காரியம் தடையாக இருக்கும் என்று நாம் வலியுறுத்தவில்லை எனினும் ஒருவேளை மற்றத் தகுதிகள் இருந்தபோதிலும், சரியான துல்லியத்துடன் ஆங்கில மொழியில் பேசிடும் ஆற்றலில் குறைவுப்பட்டிருக்கும் இவரைப் பயண ஊழியராக அனுப்பி வைப்பது ஞானமானதாகவும், கர்த்தருக்கு மிகமை சேர்க்கிறதாகவும் இராது என்று நாம் எண்ணினோம். இதுவே அச்சகோதரனை மறுப்பதற்கு ஏதுவான ஒரே காரியமாகும்; மற்றப்படி அவரது குணலட்சணத்திற்கு எதிராக எதுவும் இருக்கவில்லை. வேறொரு சகோதரன் சில ஊழியம் புரிவதற்கான வாய்ப்பு உடையவராகக் காணப்பட்டார் மற்றும் இவர் மிகவும் அருமையான சகோதரன் ஆவார் மற்றும் ஒருவேளை அவரது குடும்பம் மற்றும் வீட்டுக் காரியங்களானது அனுமதிக்கும் பட்சத்தில் அவரைப் பயண ஊழியர்களின் வேலையில் பெற்றுக் கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்போம்; இச்சகோதரன் இவ்வூழியத்திற்கென்று தனது நேரத்தைக் கொடுக்கத்தக்கதான விதத்தில் அவரது குடும்பச் சூழ்நிலைகளானது காணப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே சென்று நண்பர்களுக்கு ஊழியம் புரிய அவருக்கு வாய்ப்புக்கிடைக்கு மானால் நாம் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வோம். அனைவருடைய நிலவரங்களும் இவ்விருவரின் நிலவரங்கள் போல் இருப்பதில்லை. எனினும் இவைகளை உங்கள் மனதில் நிலைநிற்கத்தக்கதாக, இந்த இரண்டு நல்ல உதாரணங்களை நான் கொடுக்கின்றேன். ஒவ்வொரு சபையாரும் இம்மாதிரியான நபர்கள் தொடர்புடைய விஷயத்தில் பகுத்தறிய வேண்டும் என்பதும், இத்தகையவர்கள் தங்களுக்கு ஊழியம் புரிவது தங்களுக்குப் பிரயோஜனமாக இருக்குமா இல்லையா என்று சபையார் அறிந்து கொள்ளும்படிக்குத் தங்களது பகுத்தறிவைப் பயன்படுத்திட வேண்டும் என்பதும் எங்களுடைய கருத்தாய் இருக்கின்றது. ஒருவேளை பிரயோஜனமாய் இருக்குமென்று சபையார் எண்ணுவார்களானால் அவர்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்வார்களாக் ஒருவேளை தங்களுக்குப் பிரயோஜனமில்லை என்று எண்ணுவார்களானால் அவர்களை அழைக்காமலிருப்பார்களாக. நாங்கள் அனுப்பிவைக்கிறவர்களுக்குப் பொறுப்பாளிகளாக இருக்கின்றோம் என்றும், ஒருவேளை பயண ஊழியர்கள் ஒழுக்க ரீதியிலும், அறிவு ரீதியிலும், பக்தியின் ரீதியிலும் ஞானமாய் நடந்துகொள்ளவில்லையெனில் அது விஷயம் சொசைட்டிக்கு தகவல் கொடுத்திட, சொசைட்டி விரும்புகிறது என்றும் மாத்திரம் சொசைட்டி கூறிக்கொள்கின்றது. அனுப்பப்படுகிறவர்கள் இவ்வூழியத்திற்கான விஷேசித்தத் தகுதியுடையவர்களாய் இருக்கின்றார்கள் என்றும், இந்தக் காரணத்தின் நிமித்தமாகவே அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் நாம் நம்புகின்றோம்; ஆனால் இது மற்றவர்களுக்கு எதிராய் எதையும் சொல்வதைக் குறிக்காது; சபையார் தங்களுக்குச் சிறந்தது என்று தோன்றும் எதையும் செய்திடுவதற்கு சொசைட்டியானது விட்டுவிடுகின்றது.