Q15:1
கேள்வி (1911-Z4867)-1- முற்பிதாக்கள் ஆசரிப்புக்கூடாரத்தின் பிராகாரத்தில் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றார்களா?
பதில் இவர்களுடைய நாட்களில் நிஜமான ஆசாரியன் வரவில்லை; நிஜமான ஆசரிப்புக்கூடாரமும், பிராகாரமும் அப்போது ஏற்படுத்தப்படவில்லை. ஆகையால், இதில் முற்பிதாக்களினால் இடம்பெற முடியாது. எனினும் இவர்களது நடக்கையில் வெளியரங்கமாக்கப்பட்ட இவர்களது இருதயங்களின்படி பார்த்தால், இவர்கள் விசுவாச வீட்டாரின் அங்கத்தினர்களாகிட வேண்டும்தான். எங்களுடைய புரிந்துகொள்ளுதலின்படி, இறுதியில் நிஜமான பிராகார நிலைமையாகிய, அதாவது நிஜமான லேவியர்களாகிய திரள்கூட்டத்தாரோடுகூட மற்றும் திரள்கூட்டத்தாரில் ஒரு பாகத்தினர் என முற்பிதாக்களுக்கு இடமளிக்கப்படும்.