Q256:1
கேள்வி (1916)-1- மூப்பர்களுக்கான தகுதியுடையவர்கள் சபையில் போதுமான எண்ணிக்கையில் இருக்க, சபையாருடைய மேலான நன்மைக்காக மற்றச் சபையார்கள் மத்தியில் காணப்படும் சகோதரர்களிலிருந்து தங்களுக்கான மூப்பர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமா?
பதில் – மூப்பர்களுக்கான தகுதியுடையவர்கள் சபையார் மத்தியில் போதுமான எண்ணிக்கையில் இருக்க, சபையார் வெளியிலிருந்து மற்ற மூப்பர்களைத் தேர்ந்தெடுக்க முற்படுவது என்பது ஞானமானதாய் இராது. இதைச் சொல்லாமலேயே புரிந்துகொள்ளலாம். ஆனால் சபையார் மத்தியில் போதுமானவர்கள் இருக்கின்றார்களா என்று தீர்மானிப்பவர்கள் யார்? சபையாரே தங்களுக்காக அதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சபையார் மத்தியில் தங்களுக்குப் போதுமானவர்கள் இருக்கின்றார்களென யாரால் தெரிவித்திட முடியும்? சபையாரே அதைத் தீர்மானித்திட வேண்டுமேயொழிய, சகோதரர் ரசல் அவர்களோ அல்லது வேறொருவரோ அல்ல. ஒருவேளை தங்களிடத்தில் தகுதிவாய்ந்த மூப்பர்கள் இல்லையென்று சபையார் கருதுவார்களானால், அப்படி இருக்கும் பட்சத்தில் வெளியிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்வார்களாக. ஒருவேளை தகுதிவாய்ந்த மூப்பர்கள் அநேகரை அவர்கள் பெற்றிருப்பார்களாகில், தேவன் அருளியுள்ளவைகளை அவர்கள் பயன்படுத்திக்கொள்வார்களாக மற்றும் வீட்டில் – சொந்த சபையில் இருக்கும் சகோதரரை ஊக்குவிப்பார்களாக.