Q471:1
கேள்வி (1910)-1- ஒரு சபையில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு கூட்டங்களும், மீதி வாரத்தில் இரண்டு கூட்டங்களும் இருக்க, அதாவது ஏழு நாட்களில் நான்கு கூட்டங்கள் காணப்படுகையில், அக்கூட்டங்களை நடத்திடுவதற்கு என்ன ஒழுங்குமுறையை நீங்கள் பரிந்துரைக்கின்றீர்கள் மற்றும் அவர்களுக்கு என்ன ஆராய்ச்சிகளை, எந்த அளவில் பரிந்துரைக்கின்றீர்கள்?
பதில் – வாரத்தின் நடுப்பகுதி, சாட்சிக்கூட்டத்தினை – துதிப்பதற்கும், கிறிஸ்தவ ஐக்கியத்திற்கும் மற்றும் ஒருவரோடொருவர் நெருங்கிக் கொள்வதற்குமான கூட்டத்தினைப் பெற்றிருப்பதற்கான நல்ல காலப்பகுதியாகக் காணப்படும் என்பது என்னுடைய அறிவுரையாய்க் காணப்படுகின்றது. சாட்சி மாத்திரமல்ல, இக்கூட்டங்களில் அடையப்பெறும் அனுதாபத்துடன்கூடிய இருதயத்தின் ஒன்றிணைதலே நினைவுகூரப்பட வேண்டும். பிற்பாடு நாம் பரிந்துரைத்துள்ளபடி பெரோயா ஆராய்ச்சிகளானது நல்லதாய்க் காணப்படும் என்று எண்ணுகின்றேன். பின்னர்ச்சபையில் காணப்படும் வழிவகையைச் சார்ந்து பொதுப்பிரசங்கத்தினைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பது நலமானதா அல்லது இல்லையா என்பது பார்க்கப்படலாம். சில சந்தர்ப்பங்களில் அப்படிப் பெற்றிருப்பதே சரியானதாய்க் காணப்படும் மற்றும் மற்றச் சந்தர்ப்பங்களில் அது மிகவும் ஞானமற்றக் காரியமாய்க் காணப்படும் என்று எண்ணுகின்றேன். போதிப்பதற்குத் தகுதி வேண்டும் என்றும், போதகசமர்த்தனாய்க் காணப்படுபவர்கள் மாத்திரமே போதகத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், போதகசமர்த்தனாய்க் காணப்படாதவர்கள் போதிப்பதற்கு முற்படாமலிருந்து, பெரோயா ஆராய்ச்சி போன்றவற்றில் ஈடுபடுவது நலம் என்றும் நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமெனக் கருதுகின்றேன். பெரோயா ஆராய்ச்சி வகுப்பிலும்கூடப் போதிப்பதற்கான திறமை அதிகம் வேண்டியிருக்கின்றது மற்றும் சபையாரின் பதில்களை வெளிக்கொணர்வது எப்படியென்று வழிநடத்துபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கின்றது. இத்தகையக் கூட்டங்களின் அம்சங்கள் தொடர்பாய்க் குறிப்பாய்த் தெரிவிக்கத்தக்கதாக நான் உள்ளே வந்து, ஆலோசனை வழங்குவது எனக்குத் தகுதியாய் இருக்குமென்று நான் கருதுகிறதில்லை சாட்சிக்கூட்டம் ஒன்றினை வாரத்திற்கு ஒருமுறை பெற்றிருப்பது நலமாயிருக்குமென்று கருதுகின்றேன். சபையாருடைய மிகுந்த ஆவிக்குரிய பிரயோஜனத்திற்கேதுவான விதத்தில் சில பெரோயா ஆராய்ச்சி வகுப்புகள் காணப்பட்டிருக்கின்றன மற்றும் இது குறித்துத் தெரிவித்திட சபையார் கேட்டுக்கொள்ளப்பட வேண்டும் மற்றும் ஒருவேளை தேவைப்படும் பட்சத்தில் தங்களுக்கு மிகவும் சுவாரசியமாகவும், மிகவும் பிரயோஜனமாகவும் எது காணப்படும் என்று அவர்கள் வெவ்வேறு விதங்களைப் பரீட்சித்துப் பார்க்கலாம்; மேலும் மூப்பர்களும், உதவிக்காரர்களும் சபையாரை ஆதிக்கம் செய்யவோ மற்றும் அவர்களை ஆளுவதற்கோ முயற்சிக்காமல் காணப்பட்டு, கர்த்தருடைய ஆவி வழிநடத்துகின்ற விதத்தில் சபையாருக்கு உதவவும், அவர்களை ஆதரிக்கவும் செய்யும்படிக்கு நான் விசேஷமாய் அறிவுரை வழங்குகின்றேன்.