Q239:2
கேள்வி (1910)-2- மூப்பர்களுடைய தேர்ந்தெடுத்தலின்போது, அச்சபையாரில் ஒருவர் முன்மொழிவதற்குப் பதிலாக, தற்போது மூப்பராகக் காணப்படும் ஒருவர், முன்மொழிவது சரியாக இருக்குமென்று நீங்கள் எண்ணுகின்றீர்களா?
பதில் – தேர்ந்தெடுக்கப்பட்ட மூப்பருக்கான காலப்பகுதி முடிவடைந்த பிற்பாடு, அவர் மூப்பர் அல்ல என்று நான் எண்ணுகின்றேன். ஆகவே அவரும் சபையாரிலுள்ள மற்றவர்களைப் போன்றவராகவே காணப்படுகின்றார். மேலும் மற்றவர்களைப் போன்று அவரும் முன்மொழியலாம். ஏனெனில் அவரும் மற்றவர்களைப் போன்றவரே ஆவர். அவருக்கான காலம் முடிந்த பிறகு அவர் மூப்பர் இல்லை. மேலும் தேர்ந்தெடுத்தலின்போது வேறொருவரைக் கூட்டத்தலைவராகப் பெற்றிருக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், முன்பு மூப்பராய் இருந்த ஒருவர் கூட்டத்தலைவராய்ச் செயல்பட்டு, தேர்ந்தெடுத்தலை நடத்துவது என்ற காரியம் மிகவும் ஞானமற்றது என நான் எண்ணுவதை இங்குக் குறிப்பிட விரும்புகின்றேன்.
அறிவு கூர்மைமிக்க ஒரு சகோதரனை – நேர்மையுடனும், நியாயத்துடனும் நடந்துகொள்ளும் ஒரு சகோதரனை – மூப்பருக்கான தகுதியில்லாதவர் அல்லது தகுதியுடையவராகக் கருதப்படாத ஒரு சகோதரனை – கூடுமானமட்டும் கூட்டத்தலைவராகச் (chairman) செயல்ப்படும்படிக்குக் கேட்டுக்கொள்வது எப்போதும் விரும்புவதற்கு ஏதுவாய்க் காணப்படும். இவ்விதமாய்ச் செய்யப்படும்போது, கூட்டத்தலைவராக இருந்ததின் மூலம் ஒருவர் தனக்கு ஆதரவு சேர்த்துக்கொண்டார் என்று எழும்ப வாய்ப்புள்ள குற்றச்சாட்டிலிருந்து (மூப்பர் தகுதியுள்ள) ஒருவர் தப்பித்துக்கொள்ளலாம்; மற்றும் சபையாரும்கூட முன்மொழியப்பட்டவராகவும், கூட்டத்தலைவராகவும் தங்களுக்கு முன்பு நின்றுகொண்டிருக்கும் ஒருவருக்கு, தங்களுடைய வாக்குகளைச் செலுத்தாத சூழ்நிலையிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் மற்றும் அச்சகோதரனும்கூடச் சபையார் முன் நின்று, முன்மொழியப்பட்டிருக்கும் தனக்கு வாக்களிக்கும்படிக்குக் கேட்க வேண்டிய தர்மச்சங்கடமான நிலைமையினின்றும் தப்பித்துக்கொள்ளலாம்; மற்றும் ஒருவேளை அவர் தேர்ந்தெடுக்கப்படாமல், பெரும்பான்மையானவர்கள் தனக்கு எதிராக காணப்படுவதைப் பார்க்க வேண்டிய தர்மச்சங்கடமான நிலைமையினின்றும் தப்பித்துக்கொள்ளலாம். எப்போதும் சாத்தியமாய் இராவிட்டாலும், ஒருவேளை சாத்தியமாய் இருக்கும்பட்சத்தில் மூப்பராக முன்மொழியப்படுவதற்கான வாய்ப்புள்ள ஒருவரைக் கூட்டத்தலைவராகப் பெற்றிருப்பதைப் பார்க்கிலும், வேறொருவரைக் கூட்டத்தலைவராகப் பெற்றிருப்பது விரும்பப்படுவதற்கு ஏதுவாகக் காணப்படும் என்று நான் எண்ணுகின்றேன்.