Q520:1
கேள்வி (1916 – Z.5939)-1- V. D. M. – என்பதன் அர்த்தம் என்ன? மற்றும் V. D. M. பட்டம் / degree கொடுக்கப்படுவது எதைக் குறிக்கின்றதாய் இருக்கும்?
பதில் – V. D. M. என்பது மிகவும் பழையப் பெயராகும். இப்பெயருடைய பயன்பாடானது நீண்ட காலமாய் வழக்கத்தில் இல்லாதபடியினால், வெகு சிலரே இதன் அர்த்தத்தினை அறிந்தவர்களாய் இருக்கின்றனர். இந்த மூன்று எழுத்துக்களானது, Verbi Dei Minister எனும் இலத்தீன் வார்த்தைகளைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. இதன் ஆங்கில வார்த்தை ‘Minister of Divine Word” / “திவ்விய வார்த்தைகளினுடைய ஊழியக்காரன் என்பதாகும். இருண்ட யுகங்களில் திவ்விய வார்த்தைகள் பயன்பாட்டில் இல்லாமல் போய், இதற்குப் பதிலாக விசுவாசப் பிரமாணங்கள் பயன்பாட்டில் காணப்பட்டபோது, இப்பெயரும் பயன்பாட்டில் இல்லாமல் மற்றும் புறக்கணிக்கப்பட்டுப் போயிற்று. திவ்விய வார்த்தைகளுக்கு ஊழியக்காரன் யாரும் இல்லாமல் போயிற்று; காரணம் திவ்விய வார்த்தையானது பிரசங்கிக்கப்படாமல், இதற்குப் பதிலாக மனுஷருடைய விசுவாசப் பிரமாணங்கள் பிரசங்கிக்கப்பட்டிருந்தது. கர்த்தருடைய பொது ஊழியர்கள் தொடர்புடைய விஷயத்தில், சரியான சிந்தையினை மிக அருமையாய் வெளிப்படுத்துகின்றதான இந்த எளிமையான வார்த்தைகளையுடைய இப்பெயருக்குப் பதிலாக, இன்று வேதவாக்கியங்களின் அடிப்படையில் இல்லாத Reverend / ரெவரண்ட் மற்றும் Doctor of Divinity / வேதசாஸ்திரி போன்ற பகட்டான பட்டங்கள் காணப்படுகின்றது. திவ்விய வார்த்தைக்கான ஊழியக்காரன் எனும் பட்டம் கொடுக்கப்படுவது என்பது, ஊழியராக ஏற்படுத்தப்படுதலைக் குறிப்பதாய் இராது; மாறாக சொசைட்டியானது இப்பட்டத்தினைக் கொடுக்கையில், அது அந்நபருடைய நற்பெயரை ஆராய்ந்துள்ளது என்பதையும் மற்றும் முடிந்தமட்டும் அந்நபருடைய குணலட்சணத்தையும், விசேஷமாக அந்நபருடைய உபதேச ரீதியிலான வளர்ச்சியையும் ஆராய்ந்துள்ளது என்பதையும் மற்றும் (V. D. M. கேள்விக்கான பதில்களை) மதிப்பீடு செய்யும் குழுவினுடைய அங்கத்தினர்களின் கணிப்பில், திவ்விய வார்த்தைக்கான ஊழியக்காரன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியானவராய் இருக்கின்றார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றதாய் மாத்திரமே இருக்கின்றது.