Q232:3
கேள்வி (1909)-3- சபையாரை நடத்துவதற்கும் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கும் மாத்திரமே ஒரு மூப்பர் தேர்ந்தெடுக்கப்படுகின்றாரா? அல்லது அவருக்கு இன்னும் அதிகமான பொறுப்புகள் இருக்கின்றதா?
பதில் – அதிகாரத்தை அருளியுள்ளவர்களுக்கு இருப்பதைக்காட்டிலும், அதிகாரமானது மூப்பருக்கு அதிகமாய் இருக்க முடியாது. இன்னும் வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், ஒருவேளை சபையார், ஒருவரைத் தேர்ந்தெடுப்பதின் மூலம் அவரிடம் மூப்பருக்குரிய பொறுப்பை அளிப்பார்களானால், இது – முதலில் சபையிடமே அந்த பொறுப்பு இருந்தது என்பதையும், இல்லையேல் சபையானது அப்பொறுப்பினை மூப்பருக்கு அளித்திருக்க முடியாது என்பதையும் மற்றும் இதன் காரணமாகச் சபையார் அனுமதியளிக்கும் அதிகாரத்தையே அந்த மூப்பர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரியப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. ஒருவேளை அவருடைய மனசாட்சியானது, சில குறிப்பிட்ட விஷயங்களைச் செய்வதற்குச் சம்மதிக்கவில்லையெனில், சபையாரிடம் தனது மனநிலையைப் பற்றி எடுத்து விவரித்துக் கூறுவது தகுதியாகவே இருக்கும் மற்றும் ஒருவேளை அவர்கள் விரும்பும் பட்சத்தில் இவ்வூழியத்திலிருந்து விலகிக் கொள்ளும்படிக்குத் தன்னிடம் கூறப்படலாம் என்றும், தானும் மகிழ்ச்சியோடு விலகிக்கொள்வார் என்றும் கூறுவது தகுதியாகவே இருக்கும். சபையாருக்கு ஊழியம் செய்யும் விஷயத்தில் மூப்பர் தனது மனசாட்சியை மீறிச் செயல்படக்கூடாது. மேலும் மூப்பரைத் தங்களுக்கு ஊழியம் புரியவைக்கும் விஷயத்தில், சபையாருங்கூடத் தங்களது மனசாட்சியை மீறிச் செயல்படவும் வேண்டாம். சபையாரின் விருப்பங்களுக்கு இசைவாக, அதிலும் தன்னுடைய மனசாட்சி தன்னைத் தடை செய்யாத எல்லை வரையிலும், ஒரு மூப்பர் சபையாருக்கு ஊழியம் புரிந்திடலாம்.
இன்னுமாகக் கரங்களை தூக்குவதன் மூலம் மூப்பர், மேற்பார்வையாளராகப் (overseer) பரிசுத்த ஆவியினால் ஏற்படுத்தப்படுகின்றார் என்று வேதவாக்கியங்கள் குறிப்பிடுவதை நான் தெரிவிக்கின்றேன்; இவ்விதமாகப் பரிசுத்த ஆவியானது சபையாரின் மூலமாகவே செயல்படுகின்றது.