Q11:3
கேள்வி (1910)-3- முற்பிதாக்களில் எவரும் இரண்டாம் மரணத்திற்குள் போகமாட்டார்கள் என்ற உறுதி வரும் அளவுக்கு, அவர்கள் போதுமான அளவுக்குப் பரீட்சிக்கப்பட்டுவிட்டார்களா? அவர்கள் மனதிலும், சரீரத்திலும் மட்டும் பூரணர்களாய் இருப்பார்களா?
“பதில்: குணலட்சணம் தொடர்புடைய விஷயத்தில் அவர்கள் போதுமான அளவுக்குப் –
பரீட்சிக்கப்பட்டிருக்கின்றார்களா என்பது குறித்து நாங்கள் அறியோம். பரிசுத்த பவுல் அடிகளார்
எபிரெயர்களுக்கு எழுதின கடிதத்தை வைத்துப்பார்க்கையில், கர்த்தர் இந்த முற்பிதாக்கள் குறித்தும்,
அவர்களது உண்மைத்தன்மைக் குறித்தும் மிக உயர்வான எண்ணங் கொண்டிருந்ததாகவும், தேவன்
தமக்கு இவர்கள் ஏற்கத்தகுந்தவர்களாக/ பிரியமானவர்களாக இருந்துள்ளதைச்
சுட்டிக்காண்பித்துள்ளதாகவும் தெரிகின்றது. இப்பொழுது ஒருவேளை நீங்களும், நானும் நம்முடைய
கணிப்பை இவ்விஷயத்தில் பயன்படுத்துவோமானால் – இப்படி நாம் செய்யக்கூடாது – எனினும்
ஒருவேளை நமது கணிப்பைப் பயன்படுத்துவோமானால், உதாரணத்திற்குச் சிம்சோனுடைய
விஷயத்தை எடுத்துக்கொள்கையில், இனிமேலும் பரீட்சிக்க வேண்டிய அவசியமில்லை எனும்
அளவுக்குத் திவ்விய குணலட்சணத்திற்கு ஒப்பாக அவர் போதுமான அளவுக்குக் குணலட்சணத்தை
உண்மையில் வளர்த்திருப்பாரா என்று யோசிக்கவே நாம் வழிநடத்தப்படுவோம். அவரது
வாழ்க்கைக்குறித்த கொஞ்சமான பதிவுகள், கழுதையின் தாடை எலும்பைக்கொண்டு அவர்
பல்லாயிரம்பேரைக் கொன்றுபோட்ட நிகழ்வு, பிற்பாடு அவரது மயிர்க்கத்தரிக்கப்பட்ட நிகழ்வு,
இன்னும் இதர நிகழ்வுகள், இவரிடம் சிறப்பியல்புகள் இருந்ததற்கான நிரூபணங்களாக நமக்கு
இருக்காது; எனினும் கர்த்தர் சிம்சோனின் குணலட்சணம் பற்றி ஏதோ ஒரு காரியத்தில்
பிரியமடைந்திருக்கின்றார் என்று பதிவுகளில் பார்க்கின்றோம்; இது விஷயத்தில் நியாயந்தீர்க்க
நீங்களோ, நானோ நிச்சயமாகத் திறம்பட்டவர்களல்ல. ஆனால் எங்களுக்குப் புரிந்தது என்னவெனில்:
தேவன் தம்முடைய திட்டத்தில்/ஏற்பாட்டில், முற்பிதாக்கள் அனைவரையும் புதிய
உடன்படிக்கையினுடைய ஏற்பாட்டின்கீழ் வைப்பார்; இதுவே இவர்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாய்க்
காணப்படும் என்று நாங்கள் எண்ணுகின்றோம், ஏனெனில் ஒருவேளை இவர்கள் ஏதேனும் சிறு
தவறுகளைச்செய்யும் பட்சத்தில், இவர்கள் புதிய உடன்படிக்கையினுடைய மாபெரும்
மத்தியஸ்தரின் மறைத்து மூடும் வல்லமையின்கீழே காணப்படுவார்கள்; மேலும் ஒவ்வொரு
விஷயத்திலும் சரியான ஆவியினை நேர்த்தியாய் செயல்முறைப்படுத்துவதிலுள்ள இவர்களது
அஜாக்கிரதைகள் அல்லது குறைவுகள் அல்லது தோல்விகள் அனைத்துமே, இவர்களையும்,
மற்றவர்களையும் கையாளுவதற்குரிய முழு வல்லமையைப் பெற்றிருக்கும் மாபெரும்
மத்தியஸ்தரின் பார்வையின்கீழ்ப் பார்த்துக்கொள்ளப்படும். ஆகையால் முற்பிதாக்களானவர்கள்
புதிய உடன்படிக்கையினுடைய ஏற்பாட்டின்கீழும், மாபெரும் மத்தியஸ்தரின்கீழும்
காணப்படுவார்கள் என்பதை அறிந்துகொள்வது மிகவும் நல்லதொரு காரியமாகவும், மிகவும்
மகிழ்ச்சியான காரியமாகவும் இருக்கின்றது என்று நாங்கள் எண்ணுகின்றோம். “