Q587:1
கேள்வி (1910 – Z4666)- 1- இந்தச் சுவிசேஷ யுகத்திலுள்ள திரள்கூட்டத்தாருக்கு முன்னதாக முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல் இடம்பெறுமா?
பதில் – சமீபத்தில் நாம் வாட்ச் டவர் பத்திரிக்கையில் கலந்தாய்வுப் பண்ணிக்கொண்டிருப்பவைகளின் வெளிச்சத்தில் பார்க்கையில், கிறிஸ்துவினுடைய புண்ணியமானது, இந்தச் சுவிசேஷ யுகத்தில் சபையின் சார்பாக – சபையாகுவதற்கு முயலும் அனைவரின் சார்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது நிச்சயமே; பலிசெலுத்துபவர்களாகிட வேண்டும் என்று வாஞ்சிப்பவர்களுக்கும், மேலும் தேவனுக்குப் பிரியமான பலியைச் செலுத்துவதற்காகத் தங்களை அர்ப்பணம்பண்ணுகிறவர்களுக்கும், இப்படியாக ஆவிக்குரிய வகுப்பாரில் அங்கத்தினர்களாகிடவும், கிறிஸ்துவோடு உடன்சுதந்தரர்களாகிடவும் நாடுபவர்களுக்கும் – அப்புண்ணியமானது தரிப்பிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இது “திரள் கூட்டத்தாருக்கும்,” “சிறுமந்தைக்கும்” சேர்ந்தே பொருந்தும். இது பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் பொருந்தும்; ஏனெனில் கிறிஸ்துவினுடைய புண்ணியமானது இவர்களது பூமிக்குரிய பலியின் மீது சாற்றப்பட்டால் தவிர, மற்றபடி இவர்கள் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட முடியாது.
ஆகையால் கிறிஸ்துவினுடைய மரணத்தின் புண்ணியமானது இஸ்ரயேல் மற்றும் உலகத்திற்குரிய புது உடன்படிக்கையின் ஏற்பாடுகளின்கீழ், முற்பிதாக்கள் அல்லது இஸ்ரயேலர்கள் சார்பாகச் செயல்படுத்தப்படுவதற்கு முன்னதாக, ஆவிக்குரிய நிலையினை அடையும் வாய்ப்பினைக் கொடுக்கும் நோக்கத்திற்காக அப்புண்ணியமானது இப்பொழுது யார் மீதெல்லாம் சாற்றப்பட்டுள்ளதோ/தரிப்பிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் தொடர்புடைய விஷயத்தில் அது விடுவிக்கப்பட வேண்டும். இது முற்பிதாக்கள் உயிர்த்தெழுவதற்கு முன்னதாக, “திரள் கூட்டம்” வகுப்பார் உயிர்த்தெழுப்பப்பட வேண்டும் எனும் கருத்தினை நிரூபிக்கின்றது.