Q470:1
கேள்வி (1909)-1- மூன்று அல்லது நான்கு பேரை எண்ணிக்கையாகக் கொண்டிருக்கும் வகுப்பிற்கு, நீங்கள் பெரோயா ஆராய்ச்சியைப் பரிந்துரைப்பீர்களா அல்லது டாண் ஆராய்ச்சியைப் பரிந்துரைப்பீர்களா?
பதில் – இரண்டையும் பெற்றிருப்பது நலமாயிருக்கும் என்று கருதுகின்றேன். நமக்கு அநேகம் வாய்ப்புகள் காணப்படுகின்றபடியால், ஒன்றோடு நிறுத்திக்கொள்ள வேண்டாம். பெரோயா ஆராய்ச்சி வகுப்புகள் என்பது, அநேகமாகப் பொதுவான கூடுகைகளுக்கு சிறந்ததாகவும், கொஞ்சம் ஒழுங்காயும் காணப்படும் மற்றும் டாண் ஆராய்ச்சி வகுப்புகளை மாலையில் பெற்றிருங்கள்.
இது விஷயத்தில் ஒருவரும் ஜெபம் மற்றும் சாட்சிக்கூட்டங்களை மறந்துவிட வேண்டாம் என்று அறிவுரை வழங்குகின்றேன்; ஏனெனில் அவைகள் சபை பெற்றிருக்கும் மிகவும் பிரயோஜனமான கூட்டங்கள் மத்தியில் அடங்குபவைகளாகக் காணப்படுகின்றன. எந்தளவுக்கு அவைகள் அதிகமாய்ச் செய்யப்படுகின்றதோ, அவ்வளவாய்ச் சபையாருடைய ஆவிக்குரிய நிலைமையானது நலமார்ந்து காணப்படுவதை நாம் பொதுவாகப் பார்க்க முடிகின்றது மற்றும் இதன் காரணமாக, முடிந்தமட்டும் ஜெபம் மற்றும் சாட்சிக்கூட்டங்களை மறவாமல் இருங்கள் மற்றும் பல வருடங்களுக்கு முன்பாக நடந்தவைகளைச் சாட்சியாகப் பகரும் தவற்றினையும் செய்யாதிருங்கள். ஒரு வாரத்திற்கென்று ஒரு தலைப்பைப் பெற்றிருங்கள் மற்றும் முடிந்தமட்டும் அத்தலைப்புத் தொடர்பாகவேயுள்ள சாட்சிகளையும் கொண்டிருங்கள் என்று நாம் யோசனை தெரிவிக்கின்றோம். சில இடங்களில் சபையார் வாராந்தர பிரசங்கங்களை, ஜெபம் மற்றும் சாட்சிக் கூட்டங்களுக்கான அடிப்படையாக வைத்துக்கொள்கின்றனர் மற்றும் இவைகளின் அடிப்படையில் சாட்சிக்கொடுப்பதற்கு முயற்சிக்கின்றனர் மற்றும் இப்படியாக அப்பாடத்தினை வாரம் முழுவதும் மனதில் பெற்றிருக்கையில், சபையார் அப்பாடத்திற்கு இசைவான சில அனுபவங்களைக் குறித்துக் கவனித்திருப்பார்கள். நியூயார்க்கிலுள்ள சபையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கொடுக்கப்படும் தூதை, சபையார் வாராந்தர ஜெபம் மற்றும் சாட்சிக்கூட்டத்திற்கான பாடப்பொருளாக எடுத்துக்கொள்கின்றனர் மற்றும் பிற்பாடு அவர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும், திங்கட்கிழமையிலும், செவ்வாய்கிழமையிலும் மற்றும் புதன்கிழமையிலும் – நான்கு நாட்களாக தங்களது அனுபவங்களைப் பாடப்பொருளின் அடிப்படையில் கவனிக்கின்றனர். ஒருவேளை தலைப்புப் பொறுமை குறித்தது என்றால், தாங்கள் எந்தளவுக்குப் பொறுமையினை வளர்த்திருக்கின்றனர் என்று கவனித்துக் கொள்வார்கள் மற்றும் பொதுவாகவே அவ்வேளையில் அது தொடர்பான ஏதோ ஓர் அனுபவம் காணப்படுவதையும் காண்பார்கள். புதன்கிழமைக் கூட்டத்திற்குப் பிற்பாடு, அடுத்துவரும் ஞாயிற்றுக்கிழமை வரை அதே எண்ணங்களை மனதில்கொண்டு காணப்பட்டு, இவ்விதமாய் எப்போதும் அதை மனதில் கொண்டவர்களாய் இருக்கின்றனர். இதில் ஓர் அனுகூலம் என்னவெனில், இது நம் அனைவரையும் அப்போது வரையிலான நம் நிலவரம் குறித்து அறியும் நிலைக்குக் கொண்டுவருகின்றதாய் இருக்கின்றது. கிறிஸ்தவ அனுபவம் தொடர்புடைய விஷயத்தில், நீங்கள் நோக்கமின்றிச் சென்று கொண்டிருக்க, அதுவும் நீங்கள் நோக்கமின்றிச் சென்றுகொண்டிருப்பதை அறியாதவர்களாய்க் காணப்பட்டு; இப்படியே ஒருநாள் முழுவதும் வீணாகிபோயிருக்கும் என்பதை நீங்கள் அனைவரும் உங்களது அனுபவங்களில் உணர்ந்திருப்பீர்கள் என்று நான் எண்ணுகின்றேன்; ஆகையால் இந்த அனுபவங்களைக் கவனிப்பதின் மூலம் நாம் தேடுபவைகளை அவற்றில் காணலாம். இப்படியாக உங்கள் மனதிற்கு முன்பாக நீங்கள் எதையும் நிறுத்திக் கொள்ளவில்லையெனில், உங்களுக்கு இத்தகைய அனுபவம் காணப்படாது மற்றும் கர்த்தர் உங்களை எப்படிப் பராமரித்தார் அல்லது உங்களுக்கு என்ன அனுபவங்கள் காணப்பட்டது என்பவற்றை அறியாமல் காணப்படுவீர்கள். இவைகள் மிகவும் பிரயோஜனமாய் இருப்பதை நாம் கண்டுகொண்டோம்.