Q248:1
கேள்வி (1913)-1- சபையிலுள்ள அர்ப்பணிக்கப்பட்ட சகோதரன் ஒருவர், மூப்பர் தேர்ந்தெடுக்கப்படும் கூட்டம் ஒன்றில், நோயுற்றிருப்பதன் காரணமாகக் கலந்துகொள்ள முடியாதபோது, மூப்பர் ஊழியத்திற்காக, தான் தேர்ந்தெடுப்பவரைக்குறித்துச் சபைக்கு எழுதிக்கொடுத்திடலாமா? அல்லது பதிலாள் வாயிலாக வாக்குச் செலுத்திடலாமா?
பதில் – ஒருவன் இதைச் செய்யலாம் என்று கூறும் எதுவும் வேதாகமத்தில் இல்லை மற்றும் ஒருவன் இதைச் செய்ய இயலாது என்று கூறும் எதுவும் வேதாகமத்தில் இல்லை. நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்? அதைச் சபையாரிடம் விட்டுவிடுங்கள். சபையார் முடிவெடுக்கட்டும்.