Q473:2
கேள்வி (1910)-2- புதிதாக ஆரம்பித்துள்ள சிறிய எண்ணிக்கைக் கொண்ட சபையாருக்கு மிகவும் முக்கியமான கூட்டமாக இருக்குமென நீங்கள் எதைக் கருதுகின்றீர்கள் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்?
பதில் – புதிதாய் ஆரம்பமாகும் வேத மாணவர்கள் அடங்கிய ஒரு சிறு சபையாருக்கு மிகவும் முக்கியமான கூட்டமாக நாம் எதைக் கருதுவோம்? சகோதரர்களே, வாரம் ஒருமுறை ஜெபம் மற்றும் சாட்சிக்கூட்டங்களைப் பெற்றிருப்பதையே மிக முக்கியமான கூட்டங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது என்று நான் கருதிடுவேன். ஆனால் இப்படியான எண்ணம் அருமையான நண்பர்கள் அனைவருக்கும் உதித்திருக்காது என்று நான் அறிவேன்; ஆனாலும் உங்களுக்குப் பிரயோஜனம் உண்டாகத்தக்கதாக பிட்ஸ்பர்கில் எங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை உங்களுக்குக் கூறுகின்றேன். சுமார் முப்பது அல்லது இருபது வருடங்களுக்கு முன்னதாக, சபைக்கு ஆவிக்குரிய ரீதியில் அதிகமாய்த் தேவை காணப்படுகின்றது என்பதைத் தெளிவாய்ப் பார்த்தேன் மற்றும் மற்ற வகையான போஷாக்குகள் சிலவற்றை உட்கொள்வதற்குப் பதிலாக, பலமான ஆகாரத்தை உட்கொள்வதற்கான தீவிரமான விருப்பம் காணப்பட்டதையும் நான் கண்டேன்; மேலும் துதிப்பதற்கும், ஜெபிப்பதற்கும் மற்றும் விசேஷமாய்ச் சாட்சி பகர்வதற்குமான கூட்டம் ஒன்றிற்காக ஒவ்வொரு வாரமும் ஓர் இரவினை – அதாவது நான் பரிந்துரைத்தப்படி புதன்கிழமை மாலை வேளையை அவர்கள் ஒதுக்கிக்கொள்வது மிகவும் பொருத்தமானதாக இருக்குமென நான் கருதுவதாக, அவர்களிடத்தில் கூறினேன்; அதுவும் நாம் முந்தைய காலங்களில், பல்வேறு சபை பிரிவுகளில் காணப்பட்டபோது சாட்சிக் கூறிவந்திருக்கும் வழக்கத்தின்படியாக இராமல், மாறாக சாட்சியானது புதியதாகவும், சமீபத்தில் நடந்ததாகவும் அவ்வாரத்தின் அனுபவங்களாகவும் இருப்பவைகளாகக் காணப்படும்படிக்கும், அவை கடந்த காலங்களின் அனுபவங்களுடைய சாட்சியாயிராதபடிக்கும் நான் பரிந்துரைத்தேன். அந்த வாரத்தில் நமக்கு என்ன அனுபவங்கள் காணப்பட்டன? ஞாயிற்றுக்கிழமையின் பாடமானது நம்முடைய ஜீவியத்தில் எத்தகைய தாக்கம் கொண்டிருந்தது? அவைகளை நாம் எவ்வளவுக்கு நடைமுறைப்படுத்த முடிந்தது? அப்பாடங்கள் தொடர்புடைய அனுபவங்களில் – நாம் ஜெயித்தோமா அல்லது தோல்வியைத் தழுவினோமா? என்பது பற்றின சாட்சியாயிருக்கும்படிக்கு நான் பரிந்துரைத்தேன். பிட்ஸ்பர்கின் நண்பர்கள் இதைக்குறித்து அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என்பதை என்னால் காணமுடிந்தது; இது சிறந்த வகையான ஒரு கூட்டமாக இருக்குமோ என்று ஐயம் கொண்டார்கள்; இக்கூட்டம் மிகவும்சலிப்புண்டாக்கும் என்றும், இரசனையற்று இருக்கும் என்றும், எல்லாவற்றையும் ஒரு வாரத்தில் கூறி முடித்த பிற்பாடு, அதையே மறுபடியுமாக அடுத்த வாரத்திலும் திரும்பக் கூறவேண்டுமே என்றும் அஞ்சினார்கள். அவர்கள் கருத்தினை – அதாவது புதிதான, சமீபத்திய சாட்சிகளைப் பகரும் கூட்டம் எனும் கருத்தினைக் கிரகித்துக்கொள்ளவில்லை எனினும் உங்களது ஊழியக்காரன் மற்றும் பேச்சாளராகிய என்னை மதிப்பதின் காரணமாக, நான் அறிவுறுத்தினவைகளுக்கு இசைவாக அவர்கள் வாக்குகள் (vote) அளித்தனர்; அதாவது கொஞ்சக்காலம் அல்லது மூன்று மாதங்கள் ஆகிலும் அக்கூட்டத்தினைப் பெற்றிருப்பதாகவும், ஒவ்வொரு புதன்கிழமை இரவன்று வேறு எதையுமல்ல, மாறாக சாட்சிக்கூட்டத்தினையே பெற்றுக்கொள்வார்கள் என்றும் மற்றும் அந்தவொரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் முடிவில் அவர்கள் அக்கூட்டத்தினைத் தொடர்ந்து பெற்றிருக்க விரும்புகின்றார்களா என்பது தொடர்புடைய விஷயத்தில் வாக்கெடுக்கப்படும் என்றும் முடிவெடுத்தார்கள். இதன்விளைவு என்னவெனில்: அந்தவொரு குறிப்பிட்ட காலத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடைபெற்றபோது சபையார் பெருமளவில் அக்கூட்டத்தினை விரும்பும் நிலைக்கு வந்தடைந்திருந்தனர்; எனினும் மிக அதிகமான ஆவலைக்கொண்டவர்களாக அவர்கள் இன்னும் காணப்படவில்லை ஆனால் ஒருவருடம் தாண்டினபோது அவர்கள் மிகவும் விருப்பம் அடைந்தவர்கள் ஆனார்கள் மற்றும் ஒருவேளை ஒரு வாரத்தில் எந்தக்கூட்டத்தை நடத்தாமல் விட்டுவிடலாம் என்று கேட்கப்பட்டால், பிட்ஸ்பர்க் சபையாரின் அருமையான நண்பர்களில் அநேகர் மற்றக் கூட்டங்கள் யாவற்றையும் இழக்கவும், தங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாகத் தங்களால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளதான சாட்சிக் கூட்டத்தினைப் பற்றிக் கொண்டவர்களாயும் இருப்பார்கள் என்பதில் எனக்கு நிச்சயமே. இதுவே மற்ற அநேகருடைய அனுபவமாகவும் இருக்கும் என்று நான் நம்புகின்றேன் மற்றும் உங்களில் அநேகர் இது குறித்து ஆரம்பத்தில் சிந்தித்தவைகளுக்கு நேர்மாறாகவே பின்னர் ஏற்பட்ட அனுபவம் காணப்பட்டிருக்கும் என்று நான் அறிவேன். இப்படியாகவே உங்களுக்கும் காணப்படும் என்று நான் நம்புகின்றேன்; சாட்சிக்கூட்டங்களானது சமீபக்கால சாட்சியங்கள் அடங்கியதாக இருக்குமாயின், சாட்சிக்கூட்டங்களில் நாம் ஒருவர் இன்னொருவருடன் தொடர்பு கொள்கையில் ஒருவகையான ஆவிக்குரிய விருந்து காணப்படுகின்றது மற்றும் வழிநடத்துனர் கேள்விகளை எழுப்புவதின் மூலமும், ஒவ்வொருவனும் தனது வாய்ப்பு வருகையில் தனது சாட்சியினைச் சொல்ல அனுமதிப்பதின் மூலமும் கூட்டத்தினைச் சுவாரசியமாக்கிடலாம். இதை அவர் ஒரு முனையிலிருந்து துவங்கி கலந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் சாட்சி பகருவதற்கான வாய்ப்பினை அளித்திடலாம்; இப்படியாக அவர்கள் அனைவரும் சாட்சியினை மதித்து உணர்ந்திட முடியும் மற்றும் இது அவர்களுடைய இருதயங்கள் அனைத்திற்கும் ஒரு மாபெரும் ஆசீர்வாதத்தினைக் கொண்டுவருகிறதாய் இருக்கும்.
இப்பொழுது இரண்டாவதாக அடுத்த மிக முக்கியமான கூட்டமாகப் பெரோயா ஆராய்ச்சி வகுப்புக் காணப்படும் என்பது என்னுடைய கருத்தாய் இருக்கின்றது. ஏன்? ஏனெனில் இக்கூட்டத்தில் ஒருவேளை நல்லதொரு வழிநடத்துனர் இருப்பாரானால் சபையாருக்கு மிகவும் சுவாரசியமாய்க் காணப்படும் விதத்தில் கேள்விகள் கொண்டுவரப்படலாம். இதற்கே வழிநடத்துனர் காணப்படுகின்றார். காரியங்களை வெளிக்கொண்டுவரும் விஷயத்தில் வழிநடத்துனருக்கு ஆர்வம் இருக்கவேண்டும், இல்லாவிட்டால் சபையார் வழிநடத்துபவர் இல்லாமலேயே நடத்திக் கொள்ளலாம் மற்றும் முழுவதுமாக, தானே அனைத்தையும் பேசிடும் ஒரு வழிநடத்துபவர், சிறந்த வழிநடத்துபவர் அல்ல. மாறாக மற்றவர்களை இக்கூட்டத்தில் பேச வைக்க முடிபவரே சிறந்ததொரு வழிநடத்துனர் ஆவார்; தான் போதுமானளவு பதில்களைப் பேசிடவில்லையென்றும், தான் அதிகமாய்ப் பேசிட வேண்டும் என்றும் வழிநடத்துபவர் எண்ணிடும் அபாயம் காணப்படுகின்றது. இது கொஞ்சம் இலட்சியங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும்; அநேகமாகக் கொஞ்சம் பெருமை இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; அவன் மந்தைக்கு நன்மை செய்திட வேண்டும் என்றுள்ள தனது வாஞ்சையில், தனது தனித்துவங்கள் அனைத்தையும் மற்றும் பெருமை, இலட்சியங்கள் அனைத்தையும் அழித்துப்போட வேண்டும்; மற்றும் யாரொருவர் சபையாரைக் கேள்விகளினால் ஆர்வப்படுத்தி மற்றும் சுவாரசியம் அடையச்செய்து மற்றும் அவர்கள் யாவரிடமிருந்தும் பதிலை வரவழைத்து, இப்படியாகக் கேள்வி மற்றும் பதில் குறித்த முழுமையான புரிந்துகொள்ளுதலை அடையப்பண்ணி மற்றும் சபையாரிடமிருந்து கேள்விக்கான பதிலைப் பெற்றுக்கொண்ட பிற்பாடு பதில்களைச் சுருக்கிக் கூறுகின்றாரோ அல்லது புத்தகத்திலிருந்து பதில்களை வாசிக்கின்றாரோ அல்லது சிறந்த ஏதேனும் விதத்தில் பதிலைச் சுருக்கமாகக் கூறுகின்றாரோ – அவரே சிறந்த / வெற்றிகரமான வழிநடத்துபவர்; ஆவார் மற்றும் அவர்களே வெற்றிகரமான சபையாராகக் காணப்படுவார்கள்; காரணம் அவர்கள் பாடத்தைப் புரிந்து கொண்டவர்களாகவும் மற்றும் அவற்றை உணர்ந்து கொண்டவர்களாகவும் காணப்படும் நிலைக்குள் கடந்து வந்தவர்களாய் இருப்பார்கள். ஆனால் உங்களுக்குச் சரியான வழிநடத்துபவர் இல்லையெனில் காரியமானது முற்றிலும் வேறொரு காரியமாகக் காணப்படும். ஒருவேளை அவர் அக்கூட்டத்தின் நேரம் முழுவதிலும் பேச வேண்டும் என்று விரும்பினால் அல்லது கேள்விக்கான பதிலைச் சபையாரிடமிருந்து வெளிக்கொணர்வது எப்படி என்று அறியாதவராய் இருந்தாரானால், அவர் இத்தகைய ஒரு கூட்டத்திற்குத் தகுதியான வழிநடத்துனர் அல்ல. இந்தப் பாகமே எப்படிச் செய்யப்பட வேண்டும் என்று கற்றுக் கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஒருவேளை நம்மில் எவரேனும் கடந்தகாலங்களில் இதில் வெற்றிகரமாய்க் காணப்படவில்லையெனில், ஜனங்களை எப்படி ஆர்வமூட்டுவது, கேள்வியை இந்த ஒரு விதத்தில் மற்றும் அந்த ஒரு விதத்தில் முன்வைத்திடுவதற்கும் மற்றும் அவர்களைச் சுவாரசியப்படுத்திடுவதற்கும், அவர்களைப் பயமுறுத்தாமல் இருப்பதற்கும் கற்றுக்கொள்வோமாக. சிலர் வேறு விதத்தைக் கையாண்டு பின்வருமாறு கூறிடுவதைக் குறித்து நான் அறிவேன், அதாவது “உங்களது பாடம் உங்களுக்குப் புரியவேயில்லை நீங்கள் இப்பாடத்தினைப் படிக்கவில்லை, என்று கூறுகின்றனர். குழந்தைகள் போல் அச்சுறுத்தப்படுத்துவதற்குச் சபையார் அங்கு வரவில்லை அவர்கள் கர்த்தருடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளென அங்கும் காணப்படுகின்றனர்; அவர்கள் கூட்டத்திற்கு வந்திருக்கின்றனர் மற்றும் அவர்களுக்கு உதவிபண்ணப்பட வேண்டும்; அவர்களில் சிலருக்குப் படிப்பதற்குப் போதுமான நேரம் இருந்திருக்கவில்லை. அடுத்தக் கூட்டம் வருகையில் தாங்கள் கேள்விகளுக்கான பதிலைக் கொஞ்சம் அறிந்திருக்கத்தக்கதாக தாங்கள் ஆயத்தமாய்க் காணப்பட வேண்டும் என்றும், “எனக்குப் பதில் தெரியாது என்று கூறிடக்கூடாது என்றும் அவர்கள் எண்ணத்தக்கதாகச் செய்திடுங்கள். பாருங்கள் காரியத்தினைக் கையாளுவதற்கு வேறே வழிக் காணப்படுகின்றது. வழிநடத்துனனாக – “உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாய் நிறுத்தும்படிக்கு ஜாக்கிரதையாய் இரு. ‘Study to shew thyself approved unto God, a workman that needeth not to be ashamed, rightly dividing the word of truth”என்று அப்போஸ்தலன் கூறுவதுபோல, கூட்டத்திற்கான வழிநடத்துனன் கற்றுவர வேண்டும். பவுல் சபையார் அனைவருக்குமாக எழுதவில்லை, ஒரு வழிநடத்துனனாகிய தீமோத்தேயுவுக்கு அவர் இவற்றை எழுதியுள்ளார். “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாகவும், உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிற்கும்படி ஜாக்கிரதையாய் இரு. ‘Study to shew thyself approved unto God, a workman that needeth not to be ashamed, rightly dividing the word of truth” – காரியத்தினைச் சரியாகவும், நிதானமாய்ப் பகுத்துப் போதித்தும், வெளிக்கொண்டுவர வேண்டும் மற்றும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிப்பது மாத்திரமல்ல, பாடம் தொடர்புடைய விஷயத்திலும் அனைத்தையும் வெளிக்கொண்டுவரவேண்டும். பாருங்கள் இவையனைத்தும் ஒரு வழிநடத்துனனின் சரியான வழிமுறையின் ஒரு பாகமாய் இருக்கின்றது. வழிநடத்துனன் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் எப்படித் தன்னால் இதை நன்கு செய்யமுடியும் என்று பார்க்க வேண்டும்; எப்படி அனைத்துக் கேள்விகளின் விஷயத்திலும் சபையார் யாவரோடும் தான் ஒத்துணர்வுடன் காணப்பட வேண்டும் மற்றும் அவர்களிடமிருந்து தன்னைப் பிரித்துக் காண்பிக்காமலும் மற்றும் அவர்களைக் கீழானவர்கள் போல் நடத்தாமல், மாறாக சகோதரர்கள் என நடத்துவதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும். யார் சகோதரர்களில் ஒருவரெனச் சரியாய் நடந்துகொள்கின்றார்களோ அவர்களே மந்தை மத்தியில் மிகுந்த செல்வாக்குடையவர்களாய் இருப்பார்கள் என்று நீங்கள் கண்டுகொள்வீர்கள். நீங்களும் சகோதரர்கள்தான். நாம் அனைவரும் ஆடுகளல்லவா? நிச்சயமாகவே. நாம் மேய்ப்பர்களாகக் காணப்பட்டு மேய்க்கும் வேலையினை மாத்திரம் செய்பவர்களல்ல, மாறாக நாமும் ஆடுகளில் உள்ளடங்குபவர்களாகக் காணப்படுகின்றோம். கர்த்தருக்காக மந்தையினுடைய அவரது பிரதிநிதிகளெனப் பேசிடுவதற்கான சிலாக்கியத்தினை அவர் நமக்குக் கொடுத்துள்ளார் என்ற காரியமானது, நாம் இன்னமும் ஆடுகளாய் இருக்கின்றோம் என்ற உண்மையினை மாற்றுகிறதில்லை. நாம் மந்தையையோ அல்லது தேவனுடைய சுதந்திரத்தையோ இறுமாப்பாய் ஆளுகிறவர்களல்ல. நாம் இன்னமும் ஆடுகளாகவும், ஆட்டினுடைய சுபாவத்தைத் தொடர்ந்து பெற்றிருக்க வேண்டியவர்களாகவும் மற்றும் அதை வெளிப்படுத்த வேண்டியவர்களாகவும் காணப்படுகின்றோம். ஆகையால் இரண்டாம் முக்கியமான கூட்டம் பெரோயா ஆராய்ச்சி வகுப்பாய் இருக்குமென்று நான் கருதுகின்றேன். பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளானது பல்வேறு வகைகளாகக் காணப்படக்கூடியவைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உதாரணத்திற்கு வாட்ச் டவரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைக்கும் உரிய அநேகக் கேள்விகளையுடைய பெரோயா ஆராய்ச்சித் தொடரினை நாம் வழங்கிவருகின்றோம். அநேகம் சபையார்கள் அப்பாடங்களுடன் இசைவுடன் வராமல் பின்தங்கிக் காணப்படுவதை நான் காண்கின்றேன். இவர்கள் தவறு செய்வதாக நான் கருதுகின்றேன். இவர்களில் சிலர் என்னிடம்: “சகோதரர் ரசல் அவர்களே நாங்கள் ஐந்தாம் தொகுதியிலேயே பின்தங்கி நின்றுகொண்டிருக்கின்றோம்; வேறு ஏதோ ஒரு தொகுதியில் பின்தங்கி நின்றுகொண்டிருக்கின்றோம். நாங்கள் முன்னேறி வந்துகொண்டிருக்கின்றோம் என்று கூறுவதுண்டு. அது அவர்கள் காரியம்; நான் குற்றம் கண்டுபிடிக்கப் போகிறதில்லை குற்றம் கண்டுபிடிப்பதும் எனக்கடுத்தக் காரியமல்ல. அது சபையாருடைய காரியமாகும்; அவர்கள் இப்படித்தான் பெற்றிருக்க விரும்புகின்றார்கள் என்றால், தேவன் அவர்களை ஆசீர்வதிக்கட்டும். அவர்களின் விருப்பப்படியே அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கட்டும்; ஆனால் அவர்கள் ஊர்வலத்தோடு கூடவே நடந்துவரும்படிக்கு நான் அறிவுறுத்துகின்றேன். நடன குழுவினரோடுகூட நடப்பதில் சில பயன்கள் காணப்படுகின்றது. உங்கள் நடைச் சீராக இருக்கும் மற்றும் அனைத்தும் நன்றாய் இயங்கும். இசைக்குழு முன்னே செல்கின்றது மற்றும் நீங்கள் அனைவரும் ஒருசேர சென்று கொண்டிருக்கின்றீர்கள். கர்த்தருடைய அருமையான ஜனங்கள் அனைவரும் எங்குக் காணப்பட்டாலும் இந்தப் பாடத்தின் விஷயத்தில் ஒன்றுபோல் போய்க் கொண்டிருக்கின்றனர் என்று காண்பது அருமையாய் உள்ளது.
அநேகமாக அது மனவுணர்ச்சியின் காரியந்தான், அநேகமாக அதற்கு எந்த உண்மையான முக்கியத்துவமும் இல்லை; எனினும் மனவுணர்வின் அடிப்படையிலான ஒவ்வொரு சிறு காரியமும் அந்தக் காரியத்தில் அதன் தாக்கத்தையும், செல்வாக்கையும் பெற்றிருக்கும். நீங்கள் எந்தப் பாடம்வரை வந்திருக்கின்றீர்களோ, அதற்கும் புதிதாய் வெளியிடப்பட்டுள்ள பாடத்திற்கும் இடையிலான பாடங்களை நீங்கள் விட்டுவிடுங்கள் என்பது என்னுடைய ஆலோசனையாய் இருப்பதில்லை. மாறாக அந்த இடைப்பட்ட பாடங்களை, இன்னொரு மாலை வேளையில் கூடிப் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதேயாகும். தற்போதுள்ள பாடத்துடன் துவங்குங்கள் மற்றும் ஐந்தாம் தொகுதியை நீங்கள் முடிப்பது வரையிலும் மற்ற மீதிப்பாடத்தை இன்னொரு கூட்டத்தில் பாருங்கள். இதை ஒரு நல்ல ஆலோசனையாகக் காண்பீர்கள் என்று நான் நம்புகின்றேன். சகோதரர் ரசலோ அல்லது வேறு யாரோ ஆணையிட முடியாது. கர்த்தருடைய சித்தம் என்று நீங்கள் கருதிடும் எதையும் செய்திடுங்கள். வேறுவிதமாய் நீங்கள் செய்யும்படிக்குக் கர்த்தர் விரும்புவதாக நீங்கள் கருதுவீர்களானால் அதையே செய்திடுங்கள். மேலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சபையார் என்ன செய்ய வேண்டும் என்று சகோதரர் ரசலால் தீர்மானிக்க முடியாது என்றும், சபையார் என்ன செய்ய வேண்டும் என்று சபையாரிலுள்ள யாரோ ஒருவரால் தீர்மானிக்கப்பட முடியாது என்றும், சபையாரே தங்களுக்காகத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும் என்றும் நாம் நினைவில் கொள்வோமாக.
மேலும் அருமையான சகோதரர்களில் சிலர் கவனிக்கத் தவறும் ஒரு முக்கியமான காரியம் காணப்படுகின்றது என்று நான் கருதுகின்றேன். இவர்கள் ஆளுகிற கண்ணோட்டத்தில் மூப்பர்த்துவத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து மிகவும் அதிகமாய் எண்ணிக்கொள்கின்றனர். இது இயல்புதான்; இப்படித்தான் காணப்படும்; ஆனால் அதை அடக்கி வைத்துக்கொள்ளுங்கள்; பழைய மனுஷன் எழும்பிடுவதற்கு முயன்றுகொண்டிருப்பவனாக இருக்கின்றான்; அவனை அடக்கி வையுங்கள்; நாம் அனைவரும் புதுச்சிருஷ்டிகளென ஒரு நிலையில் காணப்படுகின்றோம் மற்றும் நாம்: “புதுச்சிருஷ்டிகளென இங்குள்ள கர்த்தருடைய மந்தை அனைவரும், இச்சபையாரிலுள்ள அனைவரும், நான் கருத்துக்களைப் பெற்றிருப்பதுபோல அவர்களும், அவர்களது கருத்தினை வெளிப்படுத்திட நான் விரும்பிட வேண்டும்; நாம் அனைவருமே உரிமையைப் பெற்றிருக்கின்றோம் என்று கூறிட வேண்டும். மேலும் நீங்கள் செய்பவைகளுக்கு எதிராக சபையார் எதிர்ப்பதில்லை மற்றும் நீங்கள் அவர்களது சுயாதீனங்களையும், உரிமைகளையும் கவனித்துக் காத்துக்கொள்வீர்களானால், இதை அவர்கள் மதித்துணர்வார்கள், மற்றும் நீங்கள் ஒருவேளை அவர்களது அறிவுரையைக் கேட்பீர்களானால், இதை அவர்கள் மதித்துணர்வார்கள். புரூக்கிளின் சபையாரின் மூப்பர், சபையாரை ஆதிக்கம் செய்ய ஒருவேளை முற்படுவாரானால், மூப்பருக்குக் கீழ்ப்படுகிற விஷயத்தில், புரூக்கிளின் சபையாரைக் காட்டிலும் வேறு எந்தவொரு சபையாரும், எந்தவொரு மூப்பருக்கும் அதிகமாய்க் கீழ்ப்படுவார்கள் என்று நான் எண்ணுகிறது இல்லை. ஆனாலும் புரூக்கிளினிலும் சரி, பிட்ஸ்பர்க்கிலும் சரி, எப்போதேனும் சகோதரர் ரசல், சபையாரை ஆதிக்கம் செய்ய முயன்றதுண்டோ? அவர் அறிந்திருக்கிறவரை ஒருபோதும் இப்படியாக அவர் செய்ததில்லை. அவர் இப்பொழுது எப்படி உங்களுக்கு ஆலோசனை கொடுத்துக்கொண்டிருக்கின்றாரோ அதுபோலவே, அவர் அவர்களுக்கும் ஆலோசனை கொடுத்திருந்திருக்கிறார்; எந்தவொரு விதத்திலும் கட்டாயப்படுத்த முற்பட்டதில்லை, மாறாக சபையாருக்கு விவரங்கள் அளித்தப் பிற்பாடு சபையாரைத் தங்கள் பகுத்துணர்வின்படி வாக்களிக்கச் செய்து மற்றும் அக்காரியம் தொடர்புடைய விஷயத்தில் சபையாருடைய தீர்ப்பே கர்த்தருடைய தீர்ப்பு என்று ஏற்றுக்கொள்ளவும் மாத்திரம் செய்திருக்கின்றார்.