Q685:3
கேள்வி (1914)-3- நம்முடைய சொந்த கண்கள் சத்தியத்திற்குத் திறக்கப்பெற்றிருக்க, சத்தியத்திற்கு முரணாய்ப் போதித்துக்கொடுக்கப்படும் ஞாயிறு பள்ளிகளில், நம்முடைய பிள்ளைகள் கலந்துகொள்வதைத் தொடருவதற்கு நாம் அனுமதிப்பது சரியா?
பதில் – சூழ்நிலைகள் வேறுபடலாம். சிலசமயங்களில் கணவன் சத்தியத்தில் காணப்படுபவராய் இருக்கலாம்; மற்றும் மனைவி உண்மையானவளாயும், ஆனால் சத்தியத்தினைக் கண்டுகொள்ளதவளாயும் இருக்கலாம்; மேலும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் கணவன் தன் பிள்ளைகள் யுகங்களுக்கடுத்த தெய்வீகத் திட்டத்தினைக்குறித்துப் போதிக்கப்படுவதை விரும்புவார் மற்றும் மனைவியும் பிள்ளைகள் வேறு விஷயத்தினால் போதிக்கப்படுவதை விரும்புவாள். இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவதே நலமாயிருக்கும் என்றும், உங்களுக்கு உங்கள் துணைவியார் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புவீர்களோ, அதையே நீங்களும் உங்கள் துணைவியாருக்குச் செய்வது நலம் என்றும் நான் எண்ணுகின்றேன். ஏனெனில் கணவன் குடும்பத்தின் தலைவனெனத் தன் அதிகாரத்தைச் செயல்படுத்தி, பிள்ளை ஞாயிறு பள்ளிக்கூடத்திற்குப் போகக்கூடாது என்று சொல்வது, மனைவியை முற்றிலுமாகப் புறக்கணிப்பதாக இருக்கும். சிலர் இப்படிச் செய்வது சரி என்று சொல்லலாம். இப்படிச் செய்வது ஞானமாய் இருக்காது என்று நான் எண்ணுகின்றேன். ஞானமாய்ப் பின்வருமாறு செயல்படலாம்: “என் அன்பே, நீ நன்மையாய் இருக்கும் என்று எண்ணுவதினால், பிள்ளைகள் ஞாயிறு பள்ளிக்குப் போவதற்கு நான் ஒத்துக்கொள்கின்றேன்; ஆனாலும் பிள்ளைகளுக்கான என் கடமையினை நான் நிறைவேற்றத்தக்கதாக, ஞாயிறுதோறும் நானும் ஒரு ஞாயிறு பள்ளி வகுப்பினை நடத்திடுவேன் … இப்படியாகப் பிள்ளைகள் ஞாயிறு பள்ளியில் இரண்டு வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வார்கள் மற்றும் அது இரட்டிப்பான ஆசீர்வாதமாகவும் இருக்குமென நாம் நம்புவோம். பிள்ளைகள் கற்க வேண்டும் என்று நீ விரும்புபவைகளையும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள் மற்றும் என்னால் கற்பிக்க முடிந்ததையும், கூடுமானமட்டும் நானும் கற்பித்துக்கொடுப்பேன்” என்பதேயாகும். கணவன் கரிசனையாக இருப்பதை மனைவி பார்ப்பாள் மற்றும் இதற்கு எப்போதும் நல்லச் செல்வாக்கு உண்டு. மாபெரும் வித்தியாசம் காணப்படும்; ஆனாலும் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் நன்மை அடையாவிட்டாலும் தீங்கு ஏதும் அடைவதில்லை.