Q663:1
கேள்வி (1912)-1- மூப்பர் ஒருவரினால் விசேஷமாகக் கேட்டுக் கொள்ளப்படாமல், சகோதரிகள் கேள்விகளுக்குப் பதிலளிப்பது அல்லது வேதவாக்கியங்களைக் குறிப்பிடுவது வேதவாக்கியங்களுக்கு இசைவாய் இருக்குமா?
பதில் – இது போதித்தல் அல்ல என்பது என் கருத்தாய் இருக்கின்றது. பெரோயா ஆராய்ச்சி வகுப்பில் கேள்விக்குப் பதில் அளிப்பது என்பது போதித்தலாய் இராது. ஒரு பள்ளிக்கூடத்தில் எந்தவொரு வகுப்பிலாகிலும் மாணவர் ஆசிரியரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், மாணவன் ஆசிரியராகிறது இல்லை. அப்படித்தானே? அவன் பதில் கொடுக்கிற காரியமானது தனது பாடங்களை எவ்வளவு மிகத் தெளிவுடன் அவன் புரிந்துகொண்டிருக்கின்றான் என்பதை வெளிப்படுத்துகின்றதாய் இருக்கும். பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளின் விஷயத்திலும், கலந்துகொள்ளும் நண்பர்களில் அனைவரும் அதில் பங்கெடுப்பது என்பது முற்றிலும் சரியான காரியமேயாகும். சகோதரிகளால் கொடுக்கப்படும் பதில்களில் சில, மிக அருமையானதாய் ஆகும். பாடம்குறித்து நாம் கொஞ்சம் தியானம் செய்வோமானால் நாம் பதிலைப் பெற்றுக்கொள்வோம் மற்றும் பதிலைப் பெற்றிருப்பவர் ஒரு சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ இருந்தால் என்ன, பதிலை ஏன் மறைத்து வைக்க வேண்டும்?