Q661:1
கேள்வி (1910)-1- உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரம் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. ஒருவேளை ஸ்திரீயானவள் புருஷன்மேல் அதிகாரம் செலுத்தாதவளாகக் காணப்பட்டால் அவள் போதிக்கலாம் என்ற அர்த்தத்தில் இவ்வசனம் புரிந்து கொள்ளப்பட வேண்டுமா?
பதில் – ஒருவேளை நான் ஒரு சகோதரி என்று வைத்துக்கொள்ளலாம் மற்றும் நான் ஒரு புதிய இடத்திற்குக் குடிப்பெயர்ந்துள்ளேன் மற்றும் துண்டுப் பிரதிகள் முதலானவைகளைக் கொடுத்திடுவதின் மூலம் என்னுடைய செல்வாக்கைச் செயல்படுத்திட விரும்புகின்றேன் என்று வைத்துக்கொள்ளலாம் மற்றும் என்னுடைய அயலார்களில் சிலர் ஒன்றுகூடி என்னிடம் நான் இதைக்குறித்து அதிகமாகப் பேசிட விரும்புகின்றார்கள் என்று கூறுகின்றார்கள் என்று வைத்துக்கொள்ளலாம்; தன்னடக்கத்துடன், அதாவது எந்தச் சகோதரனிடத்திலும் கூட எதிர்ப்பார்க்கப்படுகின்ற முடிந்தமட்டிலுமான தன்னடக்கத்துடன், நான் அறிந்தயாவற்றையும் கூறிடுவதே எனக்கான கர்த்தருடைய சித்தமாய் இருக்கின்றது என்று நான் புரிந்துகொள்வேன். நான் அறிந்திருக்கும் உண்மைகள் மற்றும் சத்தியங்கள் யாவற்றையும் வெளிக்கொணர முயற்சித்திடுவேன் மற்றும் ஒருவேளை அயலகத்தார் மத்தியில் சத்தியம் குறித்த அறிவில்லாதவர்களாய்க் காணப்பட்டவர்களில் சிலர் ஆண்களாய்க் காணப்பட்டு, மேலும் அவர்கள் ஒருவேளை காரியத்தினை விளக்கும்படிக்கு என்னிடத்தில் கேட்கும் பட்சத்தில், அவர்களுக்கு விளக்கம்கொடுக்க எனக்கு எந்தத் தடையுமில்லை. இப்படி விவரிப்பது முற்றிலும் சரியானதாகவே இருக்கும் என்று நான் எண்ணுவேன்.