Q632:1
கேள்வி (1915)-1- போக்காட்டிற்குப் பாவநிவாரண பலியில் ஏதேனும் பங்கு உண்டா?
பதில்: போக்காட்டிற்கு எந்தப் பங்குமில்லை. போக்காடானது பலிசெலுத்தப்படவே இல்லை. அது பலிசெலுத்தப்படுவதற்குத் தவறிப்போயிற்று. இரண்டு வெள்ளாட்டுக்கடாக்கள் பலியாகுவதற்குக் கொண்டுவரப்பட்டன, ஆனால் சீட்டானது கர்த்தருடைய ஆட்டின்மீது மாத்திரம் விழுந்தது மற்றும் அந்த ஆடுதான் பாவ-நிவாரண பலிக்குரியதாயிற்று. ஆகையால் காளையும், ஒரு வெள்ளாட்டுக்கடாவும் பாவநிவாரண பலிக்குரியவைகளாயின; மற்ற ஆடு பலிசெலுத்தப்படவே இல்லை. ஆகையால் அது பாவநிவாரண பலியாக இருக்கமுடியாது (லேவியராகமம் 16:7-10). ஆனாலும் தேவனுடைய ஞானத்தில் ஆதாமின் பாவம் அல்லாத உலகத்தினுடைய சில குறிப்பிட்ட மனப்பூர்வமான பாவங்களுக்காய்ப் போக்காடு வகுப்பாரின் பாடுகள், பாவ-நிவிர்த்தியாய்ச் செயல்படுத்தப்படுவதன் வாயிலாக, இந்தப் போக்காடானது பாவநிவாரணத்தில் இரண்டாம் தரமான / பட்சமான பங்கினைப் பெற்றுக்கொள்கின்றது.