Q525:2
கேள்வி (1912)-2- ஒரு சபையார் வாக்களிக்கத் தீர்மானித்து, மேய்ப்பர் ரசல் அவர்களை ஒருவருட காலத்திற்கு அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கென்று தங்களது பாஸ்டராக/மேய்ப்பராகப் பெற்றிடுவதற்கு, அவரை முன்மொழிவது சரியாக அல்லது நல்லதாக இருக்குமா? அதாவது நீங்கள் அச்சடிக்கப்பட்ட பக்கங்கள் வாயிலாக அல்லது கடிதம் எழுதுவதன் வாயிலாக மாத்திரம்தான் அச்சபையாருடன் காணப்பட முடியும் என்பதுதான் கேள்விக்கான காரணமாகும்.
பதில் – என்னால் இக்கேள்வியினுடைய உட்கருத்தை முழுமையாய்ப் புரிந்துகொள்ள முடியவில்லை எனினும் சில விதங்களில் அது ஒரு ஒழுங்குமுறைக் காரியமாகக் கருதப்படலாம் என்று கூறிடுவேன். தேவனால் வாட்ச் டவர் பத்திரிகையின் வாயிலாகவும் மற்றும் கடிதத் தொடர்பின் வாயிலாகவும் வாட்ச் டவர் பட்டியலில் இடம்பெறும் சிறுசிறு சபைகள் யாவற்றிலும் நான் மேய்ப்பனாகவே நடைமுறையில் காணப்பட்டு வருகின்றேன். ஒருவேளை நண்பர்கள் முறைப்படி வாக்களித்து, என்னை மேய்ப்பனாகத் தேர்ந்தெடுப்பார்களானால், அப்படியான விதத்தில் நான் பிரியமே கொள்வேன் மற்றும் ஒருவேளை அப்படிச் செய்ய அவர்கள் விரும்பவில்லை என்றாலும், அது அவர்களுடைய விருப்பமாகக் காணப்படுகின்றது. அவர்கள் ஒரு வருடக்காலத்திற்கு அல்லது காலவரையறை இல்லாமல் தேர்ந்தெடுக்க விரும்புவதும்கூட அவர்களுடைய விருப்பமாகவே காணப்படுகின்றது.